ஊட்டி கொடைக்கானலை விடுங்க... தமிழ்நாட்டுக்கு ரொம்ப பக்கத்துல இருக்குற ஒரு குட்டி சுவிட்சர்லாந்து இதோ!

ranipuram kerala
ranipuram kerala
Published on

விடுமுறை நாட்கள் வந்துவிட்டாலே நம்மில் பலருக்கும் உடனே நியாபகம் வருவது ஊட்டி அல்லது கொடைக்கானல் தான். ஆனால், அங்கே போனால் இயற்கையை ரசிப்பதை விட, டிராஃபிக் ஜாமில் சிக்கி மூச்சு முட்டுவதுதான் அதிகம் நடக்கும். கொஞ்சம் வித்தியாசமாக, யாருக்கும் அதிகம் தெரியாத ஒரு அமைதியான மலைப்பிரதேசத்துக்கு போக வேண்டும் என நீங்கள் நினைத்தால், உங்களுக்கான ஒரு அட்டகாசமான சாய்ஸ் தான் கேரளாவில் உள்ள ராணிபுரம். 

நமது தமிழ்நாட்டுக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கும் இந்த இடத்தை பலரும் ஒரு குட்டி சுவிட்சர்லாந்து என்றே அன்பாக அழைக்கிறார்கள். அப்படி இந்த இடத்தில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

மறைந்திருக்கும் சொர்க்கம்!

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ரொம்பவே அமைதியாக வீற்றிருக்கிறது இந்த ராணிபுரம் மலைத்தொடர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1048 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பிரம்மாண்டமான பகுதியாகும். இங்குள்ள மலை முகடுகளை தொட்டுச் செல்லும் வெண்மையான மேகங்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருக்கும் பச்சை பசேல் என்ற புல்வெளிகளும் நிஜமாகவே உங்களை ஒரு நிமிடம் சுவிட்சர்லாந்தில் இருப்பதை போன்ற மாயையை ஏற்படுத்தும். இது இன்னும் பலருக்கும் தெரியாத ஒரு ஹிட்டன் ஸ்பாட் என்பதால், எந்த ஒரு வணிகமயமாக்கலும் இல்லாமல் இயற்கை அதன் அசல் அழகோடு இங்கு கொட்டிக்கிடக்கிறது.

த்ரில்லான டிரெக்கிங் அனுபவம்!

பச்சை மலைகளுக்கு நடுவே சும்மா கார் ஓட்டிக்கொண்டு செல்வதை விட, கால்களில் ஷூவை மாட்டிக்கொண்டு அந்த அடர்ந்த காடுகளுக்குள் நடந்து செல்வது ஒரு வேற லெவல் அனுபவமாக இருக்கும். டிரெக்கிங் பிரியர்களுக்கென்றே இங்கு பிரத்யேகமான பல காட்டுப் பாதைகள் உள்ளன. அந்த பாதைகளில் நடந்து செல்லும்போது காதுகளுக்கு இனிமையான பறவைகளின் சத்தங்களையும், பலவிதமான அரிய வகை வனவிலங்குகளையும் மிக அருகில் பார்த்து ரசிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
தேர்தல் ஆணையம் அதிரடி: பூத் ஸ்லிப்பில் இனி புகைப்படம் இடம் பெறாது..!
ranipuram kerala

புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த இடம் ஒரு மாபெரும் பொக்கிஷம் என்றே சொல்லலாம். மலை உச்சியில் இருந்து கீழே உள்ள பள்ளத்தாக்குகளை பார்க்கும்போது கிடைக்கும் அந்த ஃபீல் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு ரொம்பவே ஸ்பெஷலானது.

எப்போது செல்வது சிறந்தது?

பொதுவாக மலைப்பிரதேசங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்றாலும், இந்த ராணிபுரத்திற்கு செல்ல அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் மிகச் சரியான தேர்வாக இருக்கும். அந்த சமயத்தில் இங்கு இதமான குளிரும், பனிமூட்டமும் ரொம்பவே ரம்மியமாக இருக்கும். மழைக்காலங்களில் இந்த மலை முழுவதும் ஒரு பச்சை கம்பளம் போர்த்தியது போல பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். ஆனால் அந்த நேரத்தில் டிரெக்கிங் செல்லும் பாதைகள் சற்று வழுக்கும் தன்மையுடன் இருக்கும் என்பதால் கொஞ்சம் உஷாராக நடந்து செல்வது ரொம்பவே முக்கியம்.

இதையும் படியுங்கள்:
போன், சோஷியல் மீடியா, EMI... நம்ம வாழ்க்கையை நாமளே ஏன் அழிச்சிக்கிறோம்?
ranipuram kerala

சோஷியல் மீடியாக்களின் புண்ணியத்தால் இப்போது மெல்ல மெல்ல இந்த இடத்தின் ரகசியம் பலருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்காமல் உங்களின் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு ஒரு நிம்மதியான,  மறக்க முடியாத ட்ரிப் செல்ல பிளான் செய்தால், உங்களின் அடுத்த பயணத் திட்டம் நிச்சயமாக இந்த ராணிபுரம் மலையாகத்தான் இருக்க வேண்டும். 

ஒருமுறை இந்த குட்டி சுவிட்சர்லாந்திற்கு விசிட் அடித்து பாருங்கள், இந்த மலையின் பேரழகும் அமைதியும் உங்களை மீண்டும் மீண்டும் அங்கே வரவழைக்கும் என்பது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com