சென்னை டூ அந்தமான்: மனதிற்குப் புத்துணர்ச்சி தரும் 7 சொர்க்கத் தீவுகளின் பட்டியல்!

வெண்மணல் கடற்கரை, சுண்ணாம்புக்கல் குகைகள், பவளப்பாறைகள் என வாழ்நாளில் தவறவிடக்கூடாத பயணம்.
அந்தமான் சுற்றுலா - Andaman Islands
அந்தமான் சுற்றுலா - Andaman Islands
நடேஷ் கன்னா

நடேஷ் கன்னா (இயற்பெயர் சிவராம சுப்ரமணியன்), நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர்; ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். 57 ஆண்டுகளாக கல்கி, தீபம், குமுதம், விகடன், துக்ளக், தினமலர் உள்ளிட்ட இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் எழுதி வருகிறார்.

Updated on: 

அந்தமான் சுற்றுலா:

அந்தமான் தீவு என்பது வங்காள விரிகுடா பகுதியில் உள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். இது இந்தியாவில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் அடங்கிய ஒரு பகுதியாக உள்ளது. இதன் தலைநகர் போர்ட் பிளேர்.

இது இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவுக்கு கிழக்கே அமைந்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான யூனியன் பிரதேசம் ஆகும். இயற்கை அழகு தெளிவான கடற்கரை வெண் மணல் பரப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இதமான இடமாக உள்ளது.

இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 8249 சதுர கிலோமீட்டர். ஜனத்தொகை சுமார் 4 லட்சம். மொத்தத் தீவுகளின் எண்ணிக்கை 572. இதில் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசித்து வருகிறார்கள்.

ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குச் செல்ல 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு பொருட்கள் கப்பல் மூலம் கொண்டு செல்ல சுமார் 50 மணி நேரம் ஆகிறது.

இங்கு அரிய வகை உயிரினங்கள் தென்னை மரங்கள் பவளப்பாறைகள் வெண்மணற் பரப்புகள் 0பசுமை காடுகள் அருவிகள் போன்றவை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அந்தமான் தீவுகள் அந்த மானியர்களின் தாயகமாக விளங்கி வருகிறது. ஜுராவா மற்றும் சென்டினல் பழங்குடியின் மக்கள் வசித்து வருகிறார்கள். சில தீவுகளை அனுமதி பெற்று பார்வையிட்டு வரலாம். ஆனால் சென்டினல் தீவுக்கு மட்டும் அனுமதி கிடையாது.

இந்தப் பகுதியில் ராஸ் தீவு, வைப்பர் தீவு, சென்டினல் தீவு சாத்தம் தீவு ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும்.

முற்காலத்தில் அந்தமான் தீவுகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடைத்து வைத்திருந்த செல்லுலார் சிறைகள் உள்ளது. அக்காலத்தில் பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியில் அந்தமான் தீவு இருந்து வந்தது.

இந்தப் பகுதிகளில் பிரமிக்க வைக்கும் வெள்ளை மணல் பகுதிகள், கடற்கரை பகுதிகள் ஏராளமான நீர் விளையாட்டுகள் கூபா டைவிங் ஸ்னோ கிலிங் போன்ற விளையாட்டுக்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
தண்ணீரில் மிதக்கும் அதிசயம்: 600 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் இத்தாலியின் வெனிஸ் நகரம்!
அந்தமான் சுற்றுலா - Andaman Islands

இந்த பகுதிகள் முழுவதும் பழங்குடியினரின் கலாச்சார மையமாக உள்ளது.

இந்தத் தீவுகளில் தமிழர்கள் பர்மா இலங்கையைச் சார்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அழகிய கடற்கரைப் பகுதியில் பசுமையான தீவுக்கூட்டம் படகு சவாரி போன்றவை கண்களை கவர்கிறது. அந்தமான் நிக்கோபார் செல்ல இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். சென்னையில் இருந்து கப்பல் மூலம் செல்லலாம்.

அந்தமானிஸ் ஜாரவா ஜாங்கி சென்டினல் சாம்பன் போன்ற பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் மீன் பிடித்தல் வேட்டையாடுதல் விவசாயம் செய்தல் போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். சென்டினல் தீவுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

2024 இல் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என அரசு மாற்றி உள்ளது. இங்குள்ள ராஸ் தீவு முக்கியமானதாகும்.

செல்லுலார் ஜெயில் ஹே லாக் தீவு, லட்சுமண் பூங்கா கடற்கரை, சுண்ணாம்புக்கல் குகைகள், நினைவுச் சின்னங்கள் நீர் விளையாட்டுகள் பவளப்பாறைகள் மற்றும் இயற்கை காட்சிகள் அனைத்தும் மனதில் இனம் புரியாத ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது பவள பறைகள் பல வண்ணங்களில் கண்டு ரசிக்கலாம்.

அந்தமான் சுற்றுலா - Andaman Islands
அந்தமான் சுற்றுலா - Andaman Islands

ஆங்கிலேயர் காலத்து நினைவுச் சின்னங்கள் அதிகமாக உள்ளன. தூய்மையான கடற்கரை பசுமையான காடுகள் தெளிவான கடல் நீர் ஆகியவற்றை பார்த்து ரசிக்கலாம். இவை தவிர செயிண்ட் பேட்டரி மலைக்களம் நீலாங்கர் தனித்தீவுகள் கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றை அருகில் இருந்து பார்க்கலாம்.

ராணி ஜான்சி கடல் பூங்காவில் பல வகையான கடல் வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகள் அழகான கடல் பூங்கா நைல்லேந்தர் தீவு தெளிவான நீர் ஆகிவையும் கண்டு ரசிக்கலாம்.

செயின்ட் பேட்ரிக் மலைக்களம் நீர் விளையாட்டு மற்றும் ஓய்வெடுக்க சிறந்த இடமாகும். சுனில் தீவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழ்க்கையில் ஒருமுறை எனும் இந்த தீவுகளை சுற்றி பார்த்து மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதையும் படியுங்கள்:
வேடந்தாங்கல் போகாமலேயே லட்சக்கணக்கான பறவைகளை பார்க்கணுமா.. சென்னைக்கு அருகில் இருக்கும் ரகசிய தீவு!
அந்தமான் சுற்றுலா - Andaman Islands