

உலகிலேயே மிதக்கும் நகரமாக விளங்கும் இத்தாலியின் வெனிஸ், 600 ஆண்டுகளாக நீர்மீதான சதுப்பு நிலத்தில் 117 தீவுகள், 150 கால்வாய்கள், 400-க்கும் மேற்பட்ட பாலங்களுடன் திகழ்கிறது. மரக்கட்டைகள், களிமண், கற்கள், செங்கற்கள், சுண்ணாம்பு சாந்து கொண்டு கட்டப்பட்ட 600 ஆண்டு பழமையான கட்டிடங்கள், கொண்டோலா, வாட்டர் பஸ் போக்குவரத்து, மீன்வளம் ஆகியவை இதன் தனிச்சிறப்பு. 1987ல் யுனெஸ்கோ பாரம்பரிய தலமாக அறிவித்தது.
சுமார் 600 ஆண்டுகளாக இந்த நகரம் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் வெனிஸ் நகரம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் உள்ளது.
வெனிடோ இதன் தலைநகரமாகும். மொத்தம் 117 தீவுகளையும் 150 வாய்க்கால்களையும் கொண்ட அழகிய நகரம். சிறிய மிதக்கும் பாலங்கள் கால்வாய்களை கடக்க உதவுகிறது. கொண்டேலோ என்ற பெரிய படகு போக்குவரத்து வசதியாக உள்ளது. ஒரு காலத்தில் முக்கிய கடல் சார் பகுதியாக இருந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் ரோமானிய பேரரசு சரிந்தபோது இந்த சதுப்பு நிலத்தில் தோன்றியதுதான் வெனிஸ் நகரம்.
இந்த இடம் சிலுவை போரில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 160 மைல் சுற்றளவு கொண்ட ஒரு குளம் போல் காட்சியளிக்கிறது. 51 ஆயிரம் பேர் இந்த நீர்ப்பரப்பில் வசித்து வருகின்றனர் மீதமுள்ள நபர்கள் நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றனர். 1866 ஆம் ஆண்டு இத்தாலியின் ஒரு பகுதியாக மாறியது. நீர் நகரம் பாலங்கள் நகரம் மிதக்கும் நகரம் கால்வாய்கள் நகரம் என பல வகைகளில் அழைக்கப்படுகிறது.173410 ஏக்கர் குளபரப்பு கொண்டது. 1987-ல் யுனெஸ்கோ இதை பாரம்பரிய தலமாக அறிவித்தது. இந்தப் பகுதியில் களிமண்ணால் ஆன சதுப்பு நிலமாகும்.
காடுகளில் இருந்து மரக்கட்டைகளை எடுத்து வந்து சுமார் ஐந்து மீட்டர் ஆழமுள்ள களிமண்ணில் செங்குத்தாக நட்டு வைத்தனர். இந்த கட்டைகள் களிமண்ணால் இருக்கியது. மரக்கட்டைகளின் மேல் பகுதியில் பலகைகள் வைத்து அடுக்கி அதன் மீது கற்களை பரப்பினர். அதன் பின்னர் அதன் மேல் வீடுகட்ட தொடங்கினர்.
கட்டடத்தில் எடையை குறைக்க செங்கற்களை பயன்படுத்தினார்கள் அதை மூன்று அடுக்காக கட்டினர். சிமெண்டுக்கு பதிலாக சுண்ணாம்பு சாந்தை பயன் படுத்தி பூசினார்கள். நங்கூர கம்பிகளை கொண்டுசற்று சாய்வாக திரும்பும் நிலையில் வடிவமைத்தனர். மெல்ல மெல்ல வீடுகள் புது வடிவம் பெற்றது.
முதல் 500 ஆண்டுகள் பாலங்கள் இல்லாமல் படகு மூலம் சென்று வந்தனர். அதன் பிறகு மிதக்கும் பாலங்கள் மரப் பலகைகள் கொண்டு கட்டத் தொடங்கினர். கடல் நீரால் சூழப்பட்ட 120 தீவுகளை கொண்டது.
மழை நீரை சேகரிக்க ஆங்காங்கே கிணறுகள் அமைக்கப்பட்டது. மனித எடையை கூட தாங்க முடியாத சதுப்பு நிலப்பகுதி தற்போது மிதக்கும் நகரமாக மாறி உள்ளது வியப்பான செயலாகும்.
இத்தாலியில் உள்ள அட்ரியாட்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது 400 மேற்பட்ட குறுக்கு பாலங்கள் 1500 வினோத மான கால்வாய்கள் உள்ளன. இங்குள்ள கட்டடங்கள் சுமார் 600 ஆண்டுகள் பழமையானவை.
மோட்டார் மூலம் இயங்கும் தண்ணீர் பஸ் துரிதமாக இயக்கப்படுகிறது. இதை வாட்டர் பஸ் என அழைக்கின்றனர். ரியால்டோ பிரிட்ஜ் ஆப் சை என்பது பெரிய பாலமாகும். செயிண்ட் மார்க் என்பது கடற்கரை விடுதியாகி உள்ளது. தோனி போக்குவரத்தும், படகு போக்குவரத்துகளும் பிரதானமாக உள்ளது. 1987 இல் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. வெனிஸ் போர்க்கப்பல் பெயர் கல்லி.
இது 150 துடுப்புகள் மற்றும் பாய் மரங்களைக்கொண்டு இயக்கப்படுகிறது. இங்குள்ள குளத்தில் ஏராளமான மீன்கள் கிடைக்கிறது. அதை இங்குள்ள மக்கள் உணவிற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.. இதன் குறைந்தபட்ச ஆழம் இரண்டு மீட்டர் அதிகபட்ச ஆழம் 5 மீட்டர். கிரான்ட் கால்வாய் ஐந்து மீட்டர் ஆழம் கொண்டது.
இங்குள்ள கால்வாய்களை அடிக்கடி சுத்தம் செய்து வருகின்றனர். இந்த மிதக்கும் நகரத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகும். சில வீடுகள்அசைவது போன்று தோற்றமளிக்கும். சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் இந்த வெனிஸ் நகரத்தை சுற்றி பார்த்து அதன் அழகில் சொக்கிப் போவார்கள். அப்படி ஒரு அற்புத படைப்பாகும்.
உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களின் உள்கட்டமைப்பு நுட்பங்களை அறிந்துகொள்வதன் மூலம், பண்டைய மனிதர்களின் பொறியியல் திறனைப் புரிந்து கொண்டு உங்களது பயண அறிவையும் வரலாற்றுத் தேடலையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.