

இன்றைய இளைஞர்கள் பணத்தைவிட நேரத்தை பெரும்பாலும் விலைமதிப்பற்றதாகக் கருதுகின்றனர். கடினமான வேலைகள், போட்டி நிறைந்த உலகம், நகர வாழ்க்கையின் இடைவிடாத பரபரப்பு ஆகியவற்றால் உடனடியாக அவற்றிலிருந்து தப்பிப்பதற்காக, மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக வார இறுதிப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக ஓய்வையும் சாகசத்தையும் ஒருங்கே வழங்கும் இடத்திற்குச் செல்ல விரும்புகின்றனர். அதுவும் இன்றைய இளைஞர்கள் ஜென் இசட்(Gen Z) ஒரே நாளில் சென்று திரும்பும் ஒரு நாள் பயணங்களை (One Day Trips) அதிகம் விரும்புவதற்கு நேர மேலாண்மை, குறைந்த செலவு மற்றும் சமூக ஊடகத் தாக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.
இன்றைய இளைஞர்கள் இந்த வகையானப் பயணங்களை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இவர்கள் வெறுமனே இடங்களைப் 'பார்வையிட' விரும்புவதில்லை. அவற்றை 'அனுபவிக்க' விரும்புகிறார்கள். பயணங்களில் ஆடம்பரத்தை விரும்புவதில்லை. சிலிர்ப்பூட்டும் சூரிய உதயம், மலையேற்றம் என மனதை ரிலாக்ஸ் செய்யும் சாகசப்பயணங்களை விரும்புகின்றனர்.
வேலை மற்றும் படிப்பின் காரணமாக நீண்ட நாட்கள் விடுப்பு எடுப்பது என்பது இன்றைய இளைஞர்களுக்கு சவாலான ஒன்றாக உள்ளது. இதனால் கிடைக்கும் ஓரிரு விடுமுறை நாட்களை நல்ல வழியில் பயன்படுத்தி மன அழுத்தத்தில் இருந்து விடுபட முயற்சிக்கிறார்கள்.
ஒரு நாள் பயணத்தில் தங்கும் விடுதி செலவுகள் இல்லை. போக்குவரத்து மற்றும் உணவுக்கான செலவு மட்டுமே இருப்பதால் பாக்கெட் மணியைக்கொண்டு நினைத்த இடத்திற்கு சென்று வர முடிகிறது. இதனால் குறைந்த பட்ஜெட்டில் பயணித்து அடுத்து வரும் வார நாட்களை ஸ்ட்ரெஸ் இல்லாமல் அமைதியாக கழிக்க முடிகிறது.
நீண்ட நாட்கள் விடுப்பு எடுக்கத் தேவையில்லை. வார இறுதி நாட்களில் (Weekend) வேலை அல்லது படிப்பிற்கு பாதிப்பு இல்லாமல் ஒரே நாளில் நிம்மதியாகச் சென்றுவர முடிகிறது. இதனால் அடுத்த நாள் வழக்கம்போல் தங்களது பணிகளை அவர்களால் தொடர முடிகிறது. இன்றைய இளைஞர்களுக்கு இந்த ஒரு நாள் பயணம் சிறந்த ஃப்ரெஷ் அப்' (Fresh up) ஆக அமைகிறது.
நீண்ட நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டிய அவசியம் இல்லை. ரயில்களில் சில மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யவும் தேவையில்லை. நினைத்தவுடனே நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் கிளம்பிவிடலாம்.
பெரிய அளவில் உடமைகளை (luggage) பேக் செய்ய வேண்டியதில்லை. திடீரென பிளான் செய்து கிளம்புவதற்கு வசதியாக உள்ளது.
கார்ப்பரேட் வேலை கலாச்சாரத்தில் நீண்ட நாட்கள் விடுப்பு எடுப்பது என்பது மிகவும் கடினம். எனவே வார இறுதி நாட்களில், வாராந்திர வேலைப்பளு மற்றும் ஐடி கலாச்சாரத்தின் சோர்வில் இருந்து விடுபட இந்த ஒரு நாள் பயணம் ஒரு சிறந்த ரீஃபிரஷ்மென்ட் ஆக அமைகிறது.
வாரத்தின் கடுமையான வேலைப் பளுவிற்கு நடுவில், ஒருநாள் பயணம் ஒரு சிறந்த 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' (Stress buster) ஆகச் செயல்பட்டு புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. வேலை அல்லது படிப்பின் சோர்வில் இருந்து விடுபட்டு, அடுத்த நாளே புத்துணர்ச்சியுடன் வழக்கமான பணிகளுக்கு இதனால் திரும்ப முடிகிறது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற தளங்களில் ஒருநாள் பயண இடங்கள் பற்றிய தகவல்கள் எளிதாகக் கிடைப்பதால் புதிய இடங்களை உடனுக்குடன் நேரில் பார்க்க முற்படும் "Weekend getaway" என்ற கலாச்சாரம் இளைஞர்களிடம் பிரபலமாக உள்ளது.
இப்படி இன்றைய இளைஞர்கள் மாற்றத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்கின்றனர். சலிப்பான கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்து வெளியேறி உலகைச் சுற்றிப் பார்க்க இன்றைய இளைஞர்கள் ஆர்வம் கொள்கின்றனர். இதனால் அழகான இயற்கை இடங்களை ரசிப்பதற்கு பயணம் செய்யத் தயங்குவதில்லை.
யாருக்கும் கட்டுப்படாமல் தங்களுக்குப் பிடித்தபடி சுதந்திரமாக வாழ நினைக்கிறார்கள். அதனால் குறுகிய கால பயணங்களை மேற்கொண்டு அந்த இடத்தின் உள்ளூர் கலாச்சாரம், வரலாறு, உணவு மற்றும் சமூக அனுபவங்கள் பெறவும் இந்தப் பயணங்களை மேற்கொள்கின்றனர். சமூக ஊடகங்களும், டிஜிட்டல் தளங்களும் கூட இந்த மாற்றத்தை வேகப்படுத்தி வருகின்றன.
கடுமையான வேலை அழுத்தத்தில் இருக்கும் வாசகருக்கு, குறைந்த நேரத்தில் மனதை ரீசார்ஜ் செய்து கொள்ளக்கூடிய எளிய வழிமுறைகள் மற்றும் அதன் பின்னணியிலுள்ள சமூக மாற்றங்கள் புரியவருகின்றன.