ரயில் பயணத்தில் செளகரியங்கள் - அசெளகரியங்கள் என்ன தெரியுமா?

advantages and disadvantages are of train travel
Payanam articles
Published on

யில் பயணம்– ஒரு நினைவில் நிலைக்கும் அனுபவம். மனதை மகிழ்விக்கும் ஒரு சிறந்த பயண அனுபவம் என்றால் அது ரயில் பயணமே. இயற்கையின் மடியில் சிரிப்பும், உரையாடலும், சிந்தனையும் கலந்து ஒரு சுகமான அனுபவத்தை ரயிலில் உணரமுடிகிறது. தூரங்கள் கடந்தும், இடங்கள் மாறியும், நம்மை நம் பூர்வ நினைவுகளோடு சேர்த்து வைக்கும் அந்த பயணம் என்றென்றும் தனிப்பட்டது.

ரயில் பயணத்திற்கு முன் திட்டமிடுவது முக்கியம். நாம் செல்லும் இடம், ரயிலின் வருகை நேரம், மற்றும் இடவசதி ஆகியவற்றைப் பார்த்து டிக்கெட்டை முன்பதிவு செய்வது நல்லது. குறிப்பாக, IRCTC இணையதளம் வழியாக துல்லியமாக தகவல்களை அறிந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரயிலில் ஏறியவுடன், அந்த சிறு ஊதல் சத்தத்தோடு ரயில் நகரும் நிமிடம் ஒரு இனிமையான உணர்வைத் தருகிறது. ஜன்னல் வழியாக பார்வைக்கு காட்சியாகும் பசுமை நிலங்கள், ஆறுகள், மலைகள், சூரிய உதயம் அல்லது அஸ்தமனக் காட்சிகள், இந்த இயற்கை சூழலில் மனதிற்கு ஓரளவு அமைதி கிடைக்கிறது.

பயணத்தில் நாம் சந்திக்கும் மக்கள், அவர்களுடனான உரையாடல்கள், பகிரப்படும் உணவுகள், குழந்தைகளின் கூச்சலூட்டும் சந்தோஷம் எல்லாமே ஒரு திரைப்படக் காட்சியை போலதான். ஒருவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்தும் அந்த நேரம் ஒரு புது நட்புக்கு வாய்ப்பு தரும்.

இந்த அனுபவத்தின்போது பாதுகாப்பும் அவசியம். நம்முடைய உடைமைகளை நன்கு கவனிக்கவேண்டும். உணவுகளை பாதுகாப்பாக வாங்க வேண்டும். முக்கியமான ஆவணங்கள், பணம் போன்றவை அணுகும் இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதைவிட சிறந்த ஓய்வு இல்லை எனக்கூறலாம். ஒரு சிலருக்கு ரயிலில் வாசிக்க வேண்டும், இசை கேட்க வேண்டும், சதுரங்கம் ஆட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையழகு கொஞ்சும் அற்புதமான உப்பலமடுகு நீர்வீழ்ச்சி... ஒரு விசிட்!
advantages and disadvantages are of train travel

இதெல்லாம் பயணத்தை மேலும் சிறப்பாக்கும். இவ்வாறு, ஒரு ரயில் பயணம் நம்மை நகர்த்தும் போதே நம் மனதையும் ஒரு மாறான உலகிற்கு அழைத்துச் செல்கிறது. அது ஒரு சாதாரணப் பயணமல்ல, அது ஒரு மனசாட்சிப் பயணம்.

ரயில் பயணம் என்பது ஒரு போதும் தீராத நினைவுகளின் பொக்கிஷம். அது நம்மை இயற்கைக்கு அருகாகவும், நம் உள்ளத்தின் அமைதிக்காகவும் கொண்டு செல்லும் அழகிய அனுபவம். அனைவரும் வாழ்க்கையில் குறைந்தது ஒருமுறையாவது அந்த அனுபவத்தை உணரவேண்டும்.

ரயில் பயணத்தில் இருக்கும் கஷ்டம் என்ன?

ரயில் பயணத்தில் துன்பங்கள் பலவாக இருக்கலாம், குறிப்பாக பயணத்தின் தூரம், கூட்டம், வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்தது. பொதுவாகக் காணப்படும் சில கஷ்டங்கள்.

குறிப்பாக சாதாரண இடங்களில் அல்லது கூட்ட நேரங்களில் பயணம் செய்பவர்களுக்கு நெரிசல் மிக அதிகமாக இருக்கும்.  ரயில்கள் தாமதமாக வருவது ஒரு சாதாரண பிரச்னை. இது பயண திட்டத்தை பாதிக்கக்கூடும்.  நீண்ட பயணங்களில் ஸ்லீப்பர் வசதி இல்லாதபோது, உடல் ஓய்வு பெறமுடியாமல் அதிக சோர்வாகும்.

இதையும் படியுங்கள்:
விமானத்தில் பறக்க ஆசையா?
advantages and disadvantages are of train travel

தொற்று மற்றும் சுகாதார குறைபாடுகள் ஏற்பட வழி வகுக்கும். பராமரிப்பு சரியாக இல்லாத நிலையிலும், பொதுப் பயணக்கூடங்களில் சுகாதாரம் குறைவாக இருக்கலாம். சில ரயில்களில் தரமான உணவு கிடைக்காது, அல்லது விருப்பமான உணவு கிடைக்காது.

ரயில் நேரத்தில் வந்துவிட்டால், சில நிமிஷம் கூட தவறவிட்டால் அது போய்விடும். பின்னாடி ஓடி போனாலும் பயன் இல்லை. இதுதான் ரயில்பயணத்தின் ஒரு பெரிய சவாலாக இருக்கும். சில நேரங்களில் இடமின்றி வரும் வியாபாரிகள், பிச்சைக்காரர்கள் போன்றவர்கள் பயண அனுபவத்தை பாதிக்கக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com