
உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட அளவு இந்தியர்கள் வசிக்கிறார்கள்.
அமெரிக்காவின் பரபரப்பான நகரங்கள் முதல் பசிபிக் பெருங்கடலில் உள்ள தொலைதூர தீவுகள் வரை, இந்திய சமூகங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. ஆனால் ஒரு இந்தியர் கூட இல்லாத 5 நாடுகள் இருக்கின்றன. அவற்றை இப்பதிவில் காண்போம்.
1.வாடிகன்
ரோமின் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகச்சிறிய சுதந்திர நாடான வாடிகன் நகரம், கத்தோலிக்கர்களுக்கான ஆன்மீக மையமாகவும், செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மற்றும் வாடிகன் அருங்காட்சியகங்கள் போன்ற பிரபலமான அடையாளங்களைக் கொண்ட இடமாக உள்ளது. பல இந்தியர்கள் சுற்றுலாப் பயணிகளாக இங்கு வருகை தந்தாலும், இங்கு இந்திய குடியிருப்பாளர்கள் ஒருவர் கூட இல்லை.
2.துவாலு
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் பசிபிக் பெருங்கடலில், 1978 ம் ஆண்டில் சுதந்திரம் பெற்று 1000 மக்கள் தொகை மட்டுமே கொண்ட சிறிய தீவு நாடான எல்லிஸ் தீவுகள் என்று அழைக்கப்படும் துவாலு, அதன் அழகிய கடற்கரைகள், ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் இடங்களுக்குபிரபலமானது. இருப்பினும், துவாலுவில் இந்திய குடியிருப்பாளர்கள் யாருமே இல்லை.
3.சான் மரினோ
பழமையான குடியரசுகளில் ஒன்றான அப்பென்னன் மலைகளில் அமைந்திருக்கும் மிகச்சிறிய நாடான சான் மரினோ அதன் அற்புதமான கட்டிடக்கலை மற்றும் பழமையான வரலாற்றுக்கு பெயர் பெற்று , இந்தியர்கள் உட்பட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது, ஆனால் மிகச் சிலரே இங்கு நிரந்தரமாக குடியேறத் தேர்ந்தெடுத்துள்ளனர். குறிப்பாக இங்கு இந்தியர்கள் யாருமே இல்லை.
4.வட கொரியா
வட கொரியாவில் வெளிநாட்டினருக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்தியர்கள் மட்டுமன்றி எந்த வெளிநாட்டினரும் வடகொரியாவில் வாழ்வது கடினம். இங்கு வெளிநாட்டினருடனான தொடர்புகளை அரசாங்கம் உன்னிப்பாக கண்காணிப்பதால் இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்த யாருமே குடியேற விரும்புவதில்லை. விரும்பினாலும் அது முடியாது.
5.பல்கேரியா
கருங்கடலை ஒட்டிய அழகிய கடற்கரைகளுக்கும், வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்ற பல்கேரியா, ஐரோப்பாவில் உள்ள ஒரு பிரபலமான இடமாகும். இருப்பினும், கணிசமான இந்திய சமூகங்களைக் கொண்ட பிற ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், பல்கேரியாவில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் யாருமே கிடையாது.
உலகின் அனைத்து இடங்களிலும் இந்தியர்கள் வீடுகளை அமைத்திருந்தாலும், மேற்கண்ட ஐந்து நாடுகளில் அவற்றின் அளவு, இருப்பிடம் மற்றும் கடுமையான விதிமுறைகள் காரணமாக இந்தியர்கள் முற்றிலும் இல்லாத நாடுகளாக இருக்கின்றன.