கேரளா சென்றால் இந்த 7 விஷயங்களை மிஸ் பண்ணாதீங்க!

Don't miss these 7 things if you go to Kerala!
Kerala tourist places
Published on

கேரளா இந்தியாவில் அழகான சில மாநிலங்களில் பட்டியலில் நிச்சயம் இடம் பிடித்திருக்கும் இங்கு இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்கள் உள்ளது. கடற்கரை நகரங்கள், படகு வீடுகள், பசுமை போர்த்திய மலைகள் பள்ளத்தாக்குகள, தேயிலை தோட்டங்கள், பழங்காலக் கட்டிடங்கள், வித்தியாசமான பாணியில் அமைந்திருக்கும் கோவில்கள் என்று கேரளா முழுவதும் கண்டுகளிக்க ஏரளாமான இடங்கள் உள்ளன.

மிக அழகிய மாநிலமான கேரளாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டால், கேரளாவுக்கே உரிய இந்த தனித்துவமான அனுபவங்களை இவைகளை ரசிக்க மறந்து விடாதீர்கள்!

Kerala tourist places
Kerala tourist places

வர்க்கலா மற்றும் கோவளம் கடற்கரை

கடற்கரை நகரங்களை விரும்புகிறீர்கள் என்றால், கேரளாவில் உள்ள வர்க்கலா பீச் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும். ஒரு பக்கம் மலை, மறுபக்கம் கடல் என்று கேரளாவின் வர்க்கலா பீச் தனித்துவமானது.

வயநாடு தேயிலை தோட்டங்கள்

பொதுவாக கேரளாவில் தேநீர் தோட்டங்கள் என்றால், மூணாறு தான் பலரும் கூறுவார்கள். ஆனால், அடர்ந்த காடுகள், ஓடைகள், நிறைந்த மலைப்பகுதியான வயநாட்டில் உள்ள டீ எஸ்டேட், கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று!

இதையும் படியுங்கள்:
லண்டனுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான 9 பாதுகாப்பு நடவடிக்கைகள்!
Don't miss these 7 things if you go to Kerala!

கேரளா கோவில்கள் மற்றும் பாரம்பரிய நடனங்கள்

கேரளாவில் உள்ள கோவில்கள் மிக வித்தியாசமான முறையில் கட்டப்பட்டிருக்கும். கேரளாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை உணர, நீங்கள் கேரளாவின் எந்த ஊருக்கு சென்றாலும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு கோவிலுக்கு செல்லலாம்

ஆலப்புழா படகு வீடு

கேரளாவில் கண்டிப்பாக தவிர்க்ககூடாத அனுபவங்களில் ஒன்று படகு வீடு! குமரகம், ஆலப்புழா உள்ளிட்ட இடங்கள், படகு வீட்டுக்கு புகழ் பெற்றது. ஒருநாள் முழுவதும் படகு வீட்டில் தங்குவது முதல், சில மணிநேரங்கள் படகு வீட்டில் தங்குவதுவரை, தனித்துவமான மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

பாரம்பரிய கேரளா உணவுகள்

கேரளாவில் எந்தப் பகுதிக்கு சென்றாலும், கேரள நாட்டின் பாரம்பரிய உணவுகள் கிடைக்கும்.கட்டஞ்சாயா, புட்டு கடலை கறி, அப்பம் முதல் பழம் பொரி, மலபார் பிரியாணிவரை, கேரளாவுக்கே உரித்தான பல உணவுகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
குளு குளு ஊட்டியில் காண வேண்டிய முக்கியமான இடங்கள்!
Don't miss these 7 things if you go to Kerala!

அடர்வனத்தில் ரம்மியமான ட்ரீ ஹவுஸ்

வயநாடு, குமரகம் போன்ற பகுதிகளில் ட்ரீ ஹவுஸ் என்று கூறப்படும் மர வீட்டில் தங்குவது அற்புதமான அனுபவமாக இருக்கும்

கேரளா ஆயுர்வேத மருத்துவம்

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவம், தெரபி அல்லது ஆயுர்வேத மசாஜ் கண்டிப்பாக கேரளாவில் தவிர்க்கக் கூடாதது! ஆயுர்வேத எண்ணெய்கள், ஆயுர்வேத மூலிகை ஆகியவற்றை வாங்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com