ரயில் பயணம் இனி அல்வா! WAP-7 முதல் ரயில் நம்பர் ரகசியம் வரை...!

டிக்கெட் முதல் லைவ் டிராக்கிங் வரை ரயில் பயணத்தை எளிதாக்கும் சூப்பர் வழிகள்.
ரயில் பயணம்
ரயில் பயணம்Gemini image
A.N.ராகுல்

A.N.ராகுல், பொறியியல் பட்டதாரி. கல்கி ஆன்லைன் அறிமுகப்படுத்திய வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர். தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் எழுத்துத் துறையில் இணைந்த இவர், பொழுதுபோக்கு மற்றும் பொது அறிவு சார்ந்த பயனுள்ள தகவல்களைத் தாய்மொழியில் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்கி வருகிறார்.

Updated on: 

இதுவரைக்கும் ஒரு தடவைகூட ட்ரெயின்ல போகாதவங்க, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எப்பயோ போயிட்டு இப்போ ரயில்வேஸ் யூஸ் பண்ணாதவங்க, இல்லனா இத்தனை நாளா வெறும் டிக்கெட்டை மட்டும் எடுத்துட்டு ட்ரெயினோட மத்த சிஸ்டம் எதையுமே பெருசா கவனிச்சுக்காம டிராவல் பண்ணவங்க. கடைசியா ட்ரெயின்ல இதுவரை வெறும் சீட் மட்டும்தான் மெயின்னு நினைச்சு டிராவல் பண்ணவங்க, கீழ கொடுத்திருக்க இந்தத் தகவலையும் சேர்த்து தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா, இன்னும்கூட சூப்பரா கெத்தா டிராவல் பண்ணலாம்!

இந்த மாதிரியான பேசிக்ஸை மட்டும் கொஞ்சம் புரிஞ்சுக்கிட்டோம்னா... அப்புறம் ரயில்வேஸ்ல என்ன புதுசா கொண்டு வந்தாலும் எல்லாமே அல்வா சாப்பிடுற மாதிரி ரொம்ப உங்களுக்கு ரொம்ப சிம்பிள் ஆகிடும்!.

என்ஜின் மற்றும் கம்பார்ட்மெண்ட் ரகசியம் :

ஸ்டேஷன்ல நிக்கும்போது ரயிலோட என்ஜின்ல WAP-7, WAP-5, WAG-9 அப்படின்னு எழுதியிருக்கிறதை நீங்க பார்த்திருப்பீங்க. இது சும்மா ஏனோதானோனு வெச்ச பேர் கிடையாது. இதுக்கு பின்னாடி ஒரு புரிதல் இருக்கு. "W" அப்படின்னா அது பிராட் கேஜ் (Broad Gauge) தண்டவாளத்துல ஓடுற ரயில்; "A" என்பது AC கரண்ட்ல ((Alternating Current) இயங்குறது;

"P" அப்படின்னா பேசஞ்சர் (Passenger) அதாவது நம்மள மாதிரி ஆளுங்க போற வண்டி; "G" அப்படின்னா கூட்ஸ் (Goods) அதாவது சரக்கு வண்டி. சோ, WAP-7-னா அது பேசஞ்சர் வண்டி, WAG-9-னா அது சரக்கு வண்டி. இப்போ வர்ற புது ரயில்கள்ல 'LHB' அப்படின்ற நவீனப் பெட்டிகளைப் பயன்படுத்துறாங்க. இது ரொம்ப சேஃபான, குலுங்கல் இல்லாத சொகுசான பயணத்தைத் தரும்.

உற்பத்தி மையங்கள் (Production Units) :

இந்திய ரயில்வேயோட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் (CLW) தளம்தான் என்ஜின்களைத் தயாரிக்கும் முக்கிய மையமாக இருக்கு. அதேபோல, உலகிலேயே மிக அதிக ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பெருமை நம்ம சென்னையில் இருக்கிற இன்டகிரல் கோச் ஃபேக்டரிக்கு (Integral Coach Factory (ICF) உண்டு.

ரயில் பயணம்
ரயில் பயணம்Gemini image

இது ஆரம்பிக்கப்பட்ட காலத்துல இருந்து இதுவரை 79,000-க்கும் அதிகமான கோச்சுகளை தயாரிச்சு சாதனை பண்ணியிருக்காங்க. இப்போ ஃபேமஸா இருக்குற ‘வந்தே பாரத்’ ரயில்களும் இங்கேதான் தயாராகுது.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு ஊருக்கு போறிங்களா? ரயிலில் பாட்டு கேட்டா 5000 ரூபாய் பைன்!
ரயில் பயணம்

டிக்கெட் மற்றும் செயலிகள்:

நாம் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ண நம்பகமான ஒரே தளம் IRCTC வெப்சைட் மட்டும்தான். இதுல ஸ்லீப்பர் (SL), 3AC (3A), 2AC (2A) என நமக்கு ஏத்த கிளாஸ்-ஐ செலக்ட் பண்ணிக்கலாம். லோயர், மிடில், அப்பர்னு பர்த் சாய்ஸ் கேட்கும். ஆனா, சீட் இருக்கிறதைப் பொறுத்துதான் நமக்கு கிடைக்கும்.

ரயில்கள் இப்போ எங்க வருதுன்னு லைவா டிராக் பண்ண அரசாங்கத்தோட அதிகாரப்பூர்வத் NTES (National Train Inquiry System) தளத்தைப் பயன்படுத்தலாம். பயணம் செய்யும் போது ஏதாச்சும் குறைபாடுகள் இருந்தா RailMadad ஆப் மூலமா புகார் கொடுத்து உடனே தீர்வு காணலாம்.

ரயில் எண்களின் மேஜிக்:

ரயில் நம்பரோட முதல் டிஜிட்-ஐ வச்சு அது என்ன வண்டினு சொல்லிடலாம். '0'ல ஆரம்பிச்சா ஸ்பெஷல் ட்ரெயின், '1'ல ஆரம்பிச்சா லாங் டிஸ்டன்ஸ் மெயில்/எக்ஸ்பிரஸ், '2'ல ஆரம்பிச்சா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ். உதாரணமா 12345/12346 என்ற எண்களை எடுத்தால், ஒற்றை எண் (Odd) போகும் திசையையும், இரட்டை எண் (Even) திரும்பும் திசையையும் குறிக்கும்.

இதையும் படியுங்கள்:
ரயிலில் லக்கேஜ் அதிகமாக கொண்டு போனா இவ்ளோ ஃபைனா? ரயில்வேயின் புதிய விதி தெரியாம போகாதீங்க!
ரயில் பயணம்

உதாரணமா, ஒரு ட்ரெயின் நம்பரோட கடைசி டிஜிட் ஒத்தப்படையில (Odd நம்பர், அதாவது 1, 3, 5, 7, 9) முடிஞ்சா அது போற ரூட்டையும்; அதுவே இரட்டப்படையில (Even நம்பர், அதாவது 2, 4, 6, 8, 0) முடிஞ்சா அது ரிட்டர்ன் வர்ற ரூட்டையும் குறிக்கும். இப்ப 12535-னு முடிஞ்சா அது போற வண்டி, 12536-னு முடிஞ்சா அது திரும்ப வர்ற வண்டினு ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்!"

இதோட பஸ், கார், பிளைட் போன்ற மற்ற டிரான்ஸ்போர்ட்டை விட ரயில் பயணத்துல ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருக்கு. டிக்கெட் விலை ரொம்ப கம்மி என்பதால் பட்ஜெட்டுக்குள்ளேயே நம்ம பயணத்தை முடிச்சிடலாம். பஸ், கார் மாதிரி ஒரே இடத்துல உட்கார்ந்தே போகாம நிம்மதியா படுத்துத் தூங்கலாம், ஃப்ரீயா எழுந்து நடந்து போலாம்.

ரோடில் வர்ற டிராஃபிக் டென்ஷன் எதுவும் இல்லை, பாத்ரூம் வசதியும் உள்ளேயே இருக்குறதுனால ரொம்ப நிம்மதி. பிளைட் மாதிரி ‘வெயிட் (Weight) லிமிட்’ பயம் இல்லாம எவ்வளவு லக்கேஜும் கொண்டு போகலாம். எல்லாவற்றையும்விட ஜன்னல் சீட்ல இயற்கைய ரசிச்சு, விதவிதமா சாப்பிட்டுக்கிட்டே ஜாலியா போகலாம்.

ரயில் பயணத்தின் அடிப்படைத் தொழில்நுட்பங்கள் மற்றும் செயலிகளைப் பயன்படுத்தி, எளிய முறையில் எதற்கும் டென்ஷன் இல்லாமல் ஜாலியாக ரயில் பயணம் செய்ய முடியும்.