

ரயில்ல போறப்போ நாம எல்லாரும் சீட் புக்கிங், ட்ரெயின் நம்பர், அப்புறம் வண்டி எப்ப வரும்னு டைமிங்க மட்டும்தான் ரொம்ப முக்கியமா பார்ப்போம். ஆனா நம்ம கூட எடுத்துட்டு போற லக்கேஜ் அல்லது சில பொருட்கள பத்தி எப்போவாச்சும் யோசிச்சிருக்கோமா? நிஜமா சொல்லணும்னா, எனக்கே இந்த லக்கேஜ் ரூல்ஸ் பத்தி ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தெரியும்!. படிச்சப்போ ரொம்ப ஆச்சரியமா இருந்தது, சரி இத பத்தி நம்ம மக்களுக்கு தெளிவா சொல்லலாமேனுதான் இந்த பதிவ எழுதுறேன்.
லக்கேஜ் விதிகள்:
நம்மல்ல பல பேரு ட்ரெயின் போறப்போ சீட்டுக்கு அடியிலயோ, இல்ல மேல இருக்கற லக்கேஜ் ரேக்லயோ பையை வைக்க இடம் இருந்தா போதும், எவ்வளவு வேணா எடுத்துட்டு போலாம்னு நெனைக்கிறோம். ஆனா மத்த பயணிகளோட வசதி, அவங்களோட பாதுகாப்பு, முக்கியமா அவசர காலத்துல எமர்ஜென்சி எக்ஸிட் (Emergency Exit) வழியா ஈஸியா எல்லாரும் எந்த பிரச்னையும் இல்லாம வெளிய போகணும் காரணத்துக்காக ‘இந்திய ரயில்வே’ நாம கொண்டு போற லக்கேஜ்க்குனு சில அளவும், சில முக்கியமான ரூல்ஸ் வச்சிருக்காங்க.
இதில் ஒரு செம சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, இந்த லக்கேஜ் லிமிட் ஒருவர் ஒட்டுமொத்தமா சேர்த்து புக் பண்ண எல்லா டிக்கெட்டையும் சேர்த்து சொல்லல. அது ஒவ்வொருத்தரோட தனித்தனி டிக்கெட்டை பொறுத்தது.
உதாரணத்துக்கு ஒரே PNR நம்பர்ல 6 பேரு ஸ்லீப்பர் கிளாஸ்ல போறீங்கன்னா, ஒருத்தருக்கு 40 கிலோ வீதம் மொத்தம் 240 கிலோ வரைக்கும் கொண்டுபோக சட்டப்படி உரிமை இருக்கு. சோ, தனியா போறதவிட ஃபேமிலியா போறப்போ அதிக லக்கேஜ் கொண்டு போகலாம்.
எந்த கிளாஸுக்கு எவ்வளவு லக்கேஜ் ஃப்ரீயா கொண்டு போகலாம் தெரியுமா?
● AC 1st கிளாஸ்: 70 கிலோ வரை
● AC 2 டயர்: 50 கிலோ வரை
● AC 3 டயர் அல்லது ஸ்லீப்பர் கிளாஸ்: 40 கிலோ வரை
● செகண்ட் சிட்டிங் (2S): 35 கிலோ வரை
இதோட சேர்த்து கொஞ்சம் எக்ஸ்ட்ரா வெயிட்டையும் (marginal allowance) கொண்டு போகலாம், ஆனா ‘லிமிட் தாண்டினா’ எக்ஸ்ட்ரா சார்ஜ், இல்ல காசு கண்டிப்பா போடுவாங்க.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை டைம்ல இந்த ஃப்ரீ லக்கேஜ் அளவு மாறுமானு கேட்டா, கண்டிப்பா இல்லவே இல்லை! வருஷம் முழுக்க ஒரே ரூல்ஸ்தான். ஆனா பண்டிகை காலத்துல கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கறதால, ட்ரெயின்ல இருக்க ‘எமர்ஜென்சி வழியையெல்லாம்’ அடைக்காம இருக்க, ஏறுதுக்கு முன்னாடியே செக்கிங் மற்றும் கண்காணிப்பு மட்டும் ரொம்ப கடுமையா இருக்கும்.
எதை எடுத்துட்டு போகவே கூடாது?
பட்டாசு, வெடிபொருட்கள், கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் அல்லது ஈஸியா தீப்பற்றக்கூடிய கெமிக்கல்ஸ் எதையும் ரயிலில் கொண்டு போகவே கூடாது. முக்கியமா தீபாவளிக்கு ஊருக்கு போறப்போ பட்டாசு கொண்டு போனா மாட்டிக்குவீங்க. ஒரு சின்ன தீ விபத்து கூட பல நூறு சக மனிதர்களின் உயிருக்கு ஆபத்தா முடிஞ்சிடும்.
ஏர்போர்ட் மாதிரி இங்க ஒவ்வொருத்தர் பையையும் ஆரம்பத்துலயே எடைய செக் பண்ண மாட்டாங்க. ஆனா TTE, ஆர்.பி.எஃப் போலீஸ் உங்க லக்கேஜ் ரொம்ப பெருசா இருந்தாலோ, மத்தவங்களுக்கு தொந்தரவா இருந்தாலோ கண்டிப்பா பிடிப்பாங்க.
வியாபாரப் பொருட்களையோ, பெரிய பாக்ஸ்களையோ கொண்டு போனா எக்ஸ்ட்ரா சார்ஜ் அல்லது ஃபைன் போடுவாங்க. சாதாரணமா 5-6 சூட்கேஸ் வச்சிருக்க குடும்பத்தை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க.
இத சும்மா வாட்ஸ்அப் பார்வர்டு மெசேஜை பார்த்துட்டு நான் இதையெல்லாம் எழுதலங்க! நீங்க 100% நம்பலாம். ஏன்னா, இந்திய ரயில்வேயோட ஒரிஜினல் வெப்சைட் (indianrailways.gov.in) மற்றும் IRCTC (irctc.co.in) வெப்சைட்ல இருக்குற ஒரிஜினல் ரூல்ஸை பக்காவா தெரிஞ்சு கிட்டுதான் உங்ககிட்ட சொல்றேன். உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா நீங்களே அங்க போய் செக் பண்ணிக்கோங்க.
விஷயம் பயனுள்ளதா இருக்கா? அப்போ உடனே உங்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி குரூப்புக்கு இந்த லிங்க்கை தட்டிவிடுங்க, அவங்களும் தெரிஞ்சுக்கட்டும் மக்களே!