சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆனால் அது தான் நிஜம்!

Train
Train
Published on

என்னது இனி ஹைதராபாத் பெங்களூரு போக 2 மணி நேரம் ; ஹைதராபாத் சென்னை வர 2 மணி 20 நிமிடமே..

சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆனால் அது தான் நிஜம்.

ஆமாம் இந்த நேரத்தில் செல்லும் வகையில் அதிவேக ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் பொதுப்போக்குவரத்தில் ரயில்வே முக்கியப் பங்கு வகிக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.

பயணிகளின் பயணத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும், ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் படி அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூருவிற்க்கு அதிவேக ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தால், தற்போது 10 மணி நேரமாக உள்ள பயண நேரம் பெங்களூருவுக்கு 2 மணி நேரமாகவும், சென்னைக்கு 2 மணி 20 நிமிடமாகவும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
QR Code காவலாளி: இனி ஜிமெயிலுக்கு SMS தொல்லை இல்லை!
Train

தற்போது, ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானப் பயண நேரமே 1 மணி நேரம் 20 நிமிடமாக உள்ள நிலையில், கூடுதலாக 1 மணி நேரத்தில் ரயில் பயணத்தில் சென்று விடலாம்.

தற்போது, சரக்கு ரயில்களும், அதிவேக ரயில்களும் ஒரே பாதையில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அதிவேக ரயில்களுக்குப் பிரத்யேக வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளது.

ஹைதராபாத்-சென்னை வழித்தடம் 705 கி.மீ. நீளமாக இருக்கும் என்றும், இந்த ரயில் சராசரியாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மும்பை - அஹமதாபாத்திற்கு இடையே உருவாக்கப்பட்டு வரும் புல்லட் ரயில் திட்டத்தைப் போல் இந்தத் திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

2021 ஆம் ஆண்டு 1.65 லட்சம் கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட மும்பை - அஹமதாபாத் 2028 ஆம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சமையலறையில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன தெரியுமா?
Train

ஹைதராபாத் - சென்னை அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க பொதுத்துறை நிறுவனமும், பொறியியல் ஆலோசனை நிறுவனமுமான RITES, இறுதி நில ஆய்வுக்கான டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு நிறைவடைய 15 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com