

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள சிகாகோ "The windy City" என்று அழைக்கப்படும் உலகின் புகழ்பெற்ற நகரமாகும். வானளாவிய கட்டிடங்கள், மிச்சிகன் ஏரியின் அழகிய கரையோரம், இசை கலை கலாச்சாரம் என பல்வேறு அம்சங்களால் ஆண்டு தோறும் உலகின் பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது.
பழமையும் புதுமையும் கைகோர்த்து நிற்கும் இந்த நகரம் அமெரிக்காவின் கலாச்சார மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. சரி என்ன இடங்கள் எல்லாம் சுற்றிப் பார்க்கலாம்? பார்ப்போமா?
குடும்பத்தோடு மகிழ சிறந்த சிகாகோ சுற்றுலா தளங்கள்
The bean: சிகாகோவின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மில்லேனியம் பூங்காவில் அமைந்துள்ள cloud gate (The bean) என்ற பிரம்மாண்டமான கலைச் சிற்பம். கண்ணாடி போன்ற பளபளப்பான அதன் வடிவம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.
Navy Pier: நகரின் முக்கியமான Navy Pier இல் படகு சவாரி, உணவகங்கள், மற்றும் பல் வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Willis Tower: இதன் skydeck இல் நின்று முழு நகரத்தையும் ஒரே பார்வையில் ரசிக்கலாம்.
Art of Chicago: கலை ஆர்வலர்களுக்கு இங்கு இருக்கும் அரிய ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் கொண்ட சிறந்த அருங்காட்சியகமாக இந்த Art of Chicago விளங்குகிறது.
Chicago River walk: ஆற்றங்கரையில் நடைபயணம், உணவகங்கள், படகுச்சுற்றுலா ஆகியவை அழகிய அனுபவத்தை வழங்கும்.
Lake Michigan: கடலைப் போன்ற தோற்றம் அளிக்கும் மிகப் பெரிய நன்னீர் ஏரி. இங்கு சைக்கிள் பாதை, கடற்கரை, நடைபாதை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும்.
இது மட்டுமா?
Jazz festival: இசை வளர்ச்சியிலும் சிகாகோ முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டு முழுவதும் பல இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Chicago blues festival: உலகின் மிகப்பெரிய இலவச ப்ளூஸ் இசை விழாக்களில் ஒன்றாகும்.
Taste of Chicago: இந்த உணவுத் திருவிழாவில் உலக நாடுகளின் உணவுகளுடன் உள்ளூர் உணவுகளையும் சுவைக்கலாம்.
St.Patrick's day: இந்த விழாவின்போது சிகாகோ ஆற்றை பச்சை நிறத்தில் அலங்கரிப்பது உலகப் புகழ்பெற்ற பாரம்பரியமாகும்.
இசை மற்றும் கலாச்சாரத்தில் சிகாகோ தனித்துவம் பெற்ற நகரம். ஆண்டு முழுவதும் இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலைக் கண்காட்சிகள் மற்றும் பல்வேறு கலாச்சார விழாக்கள் நடைபெறுவதால் நகரம் எப்போதும் உற்சாகமாக இயங்குகிறது.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்களின் கலாச்சாரங்களும் இங்கு இணைந்து இருப்பதால் பன்முக பண்பாட்டின் சிறந்த சிகாகோ விளங்குகிறது. இங்கு தமிழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
சிகாகோவின் மற்றொரு தனிச்சிறப்பு அதன் கட்டிடக்கலை. நவீன வானளாவிய கட்டிடங்களின் வளர்ச்சியில் இந்த நகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிகாகோ ஆற்றில் நடைபெறும் Architecture river cruise இல் பயணித்தால் நூற்றாண்டு பழமையான கட்டிடங்கள் முதல் நவீன வடிவமைப்புகள் வரை பல்வேறு கட்டிடக் கலைப் படைப்புகளை ரசிக்க முடியும். இயற்கையையும், நகர வளர்ச்சியையும் இணைந்து பாதுகாத்திருப்பது சிகாகோவின் சிறப்பு ஆகும்.
குடும்பத்துடன் பயணம் செய்பவர்களுக்கும் இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு தலமாக விளங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல அரிய உயிரினங்களும் கல்வி சார்ந்த காட்சிகளும் இங்கு உள்ளன.
அது சரி. சிகாகோவிற்கு செல்ல எந்த மாதம் உகந்தது என்றுதானே கேட்கிறீர்கள்?
குறிப்பாக ஜுன், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வானிலை இதமாக இருக்கும். பூங்காக்கள் பசுமையாக காட்சி அளிப்பதுடன் திறந்தவெளி இசை நிகழ்ச்சிகள் உணவுத் திருவிழாக்கள் கலாச்சார விழாக்கள் மற்றும் ஏரிக்கரையோர பொழுது போக்கு நிகழ்ச்சிகள் உற்சாகமாக நடைபெறும்.
குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் கோடை காலம் மற்றும் இலையுதிர் காலங்களே சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவை. இயற்கை, கலை, இசை, கலாச்சாரம், மற்றும் நவீன நகர வாழ்க்கை ஆகிய அனைத்தையும் ஒரே பயணத்தில் அனுபவிக்க விரும்புவோருக்கு சிகாகோ ஒரு மறக்க முடியாத சுற்றுலா நகரமாக விளங்குகிறது.
குடும்பத்துடன் பயணம் செய்யும் போது ஏற்படும் பதற்றத்தைத் தவிர்த்து, அனைவரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் இடங்களை அறிவதன் மூலம், நீடித்த நினைவுகளையும் மகிழ்ச்சியான தருணங்களையும் உருவாக்க முடியும்.