
பெரும்பாலான இந்தியர்கள் பயணங்களின்போது பயன்படுத்தும் டிஜிட்டல் சேவையாக கூகுள் மேப் உள்ளது. அதில் உள்ள நிறங்கள் ஸ்மார்ட் டிராவல் அசிஸ்டன்டாக இருக்கிறது. கூகுள் மேப் பயணங்களின்போது நாம் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே எச்சரித்து மாற்றுப் பாதையை வழங்குவதால் நேரம் மிச்சமாகிறது. அந்த வகையில் கூகுள் மேப்பில் உள்ள நிறங்கள் குறித்து இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
பச்சை கோடு (Green Line)
வழியில் டிராபிக் போன்ற போக்குவரத்து இடைஞ்சல்கள் எதுவும் இல்லாமல் சீராக இருக்கிறது என்பதை பச்சைகோடு காட்டுகிறது . கிரீன் லைனை தேர்ந்தெடுத்து பயணிக்கும் போது எந்தவித தடையும் இல்லாமல் உங்கள் பயணம் விரைவாக முடியும்.
மஞ்சள் அல்லது ஆரஞ்சு கோடு (Yellow/Orange Line)
சிறிய டிராஃபிக் நாம் செல்லும் பாதையில் இருப்பதை மஞ்சள் கோடு குறிக்கிறது. வேகம் குறைவாகவும் பெரிய தாமதம் எதுவும் இல்லாமல் நல்ல வழியாக இது கருதப்படுகிறது.
சிவப்பு கோடு (Red Line)
எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நிலையைக் சிவப்புக்கோடு குறிக்கிறது. அதிக வாகன நெரிசல் அல்லது டிராஃபிக் ஜாம் உள்ளது என்பதை நமக்கு இது உணர்த்துகிறது. சிவப்பு கோடு அடர்த்தியாக இருந்தால்,மிகவும் மோசமான நிலை என்பதால் வேறு வழியை தேர்வு செய்வது நல்லது.
நீலம் (Blue Line)
ஒரு இடத்திலிருந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல கூகுள் மேப் பரிந்துரைக்கும் வழிதான் இந்த நீலக்கோடு.இது நீங்கள் ஒரு இடத்துக்கு விரைவாக செல்ல வழி என கூகுள் மேப் பரிந்துரைக்கிறது.
ஊதா கோடு (Purple Line)
பொதுவாக ஒரு மாற்று வழியைக் குறிக்கிறது ஊதா கோடு. நாம் செல்லும் வழியில் அதிக டிராஃபிக் இருந்தால், கூகுள் மேப் இந்த வழியை பரிந்துரை செய்யும். சற்றே நீளமானதும், சிறிய போக்குவரத்துடன் இருக்கக்கூடியதும் இது.
பழுப்பு கோடு (Brown Line)
உயரமான பகுதி அல்லது மலைப்பாதையைக் கடக்க வேண்டிய சாலை என்பதை நமக்கு முன் கூட்டியே அறிவுறுத்துகிறது இந்த பழுப்பு கோடு. மலைப்பகுதியில் பயணிக்கும்போது, இது பயனுள்ளதாக இருக்கும்.
கூகுள் மேப்பில் உள்ள நிறங்களை தெளிவாக தெரிந்துகொண்டால் நம்முடைய பயணம் இனிமையாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.