வீட்டு வசதி முதல் உணவு, போக்குவரத்து வரை: உலகின் அதிக வாழ்க்கைச் செலவு கொண்ட நாடுகள்!

Payanam Articles
highest-cost-of-living-countrie

உலகம் முழுவதும் வீட்டு வசதி, உணவு, போக்குவரத்து, சுகாதார சேவைகள், வரி அமைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் நாட்டிற்கு நாடு வாழ்க்கைச் செலவு வேறுபடுகிறது. ஒவ்வொரு நாட்டின் நாணய மதிப்பு ,அதிக இறக்குமதி, நிலப் பற்றாக்குறை போன்றவையும் செலவு அதிகரிக்க காரணங்களாக உள்ளன. அந்த வகையில் வேல்ட் பாப்புலேஷன் ரிவ்யூ (World Population Review) வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலின் படி உலகின் காஸ்ட்லி நாடுகள்  குறித்து இப்பதிவில் காண்போம்.

1. சுவிட்சர்லாந்து

Payanam Articles
சுவிட்சர்லாந்து

தங்குமிடம் , உயர்தர உணவுப் பண்பாடு, (gastronomy ), மளிகைப் பொருட்கள் வெளியில் உணவு உண்பது, பொது போக்குவரத்து, உயர்தர சுகாதார சேவைகள் போன்றவற்றிற்கான செலவுகள் சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகம் என்பதால் சுவிட்சர்லாந்து உலகின் காஸ்ட்லியான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. என்றாலும் இங்குள்ள குடிமக்கள் உலகிலேயே சிறந்த சுகாதார சேவைகளையும் மிகச்சிறந்த போக்குவரத்து வசதிகளையும் உயர்ந்த பாதுகாப்பு தர நிலைகளையும் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. அமெரிக்கா வெர்ஜின் தீவுகள் (United States Virgin Islands) 

Payanam Articles
அமெரிக்கா வெர்ஜின் தீவுகள்

அமெரிக்க வெர்ஜின் தீவுகள் அந்நாட்டிற்கு தேவையான உணவு, எரிபொருள் முதல் கட்டுமான பொருட்கள் வரை பெரும்பாலானவற்றை கப்பல் மூலம் வெளியில் இருந்து கொண்டு வருவதால் சுவிட்சர்லாந்தைப் போலவே, இங்கும் வாழ்வுச் செலவு குறியீடு 98.4 ஆக உள்ளது. இதனால் இந்த நாடு காஸ்ட்லியான நாடாக அறியப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வீக்கெண்டில் ஒரு சூப்பர் ட்ரெக்கிங் போக ஆசையா... இந்த அட்டகாசமான மலைக்கு உடனே கிளம்புங்க!
Payanam Articles

3. ஐஸ்லாந்து

Payanam Articles
ஐஸ்லாந்து

கடலின் நடுவில் அமைந்துள்ளதாலும் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதாலும் ஐஸ்லாந்தில் வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக உள்ளது. பல அத்தியாவசிய பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்து இருப்பதால் உணவு மற்றும் அடிப்படைத் தேவை களுக்கான செலவுகள் அதிகம் என்பதால் ஐஸ்லாந்து உலகின் காஸ்ட்லியான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஐஸ்லாந்துஉணவகங்களில் உணவு உண்பது அதிக செலவை உருவாக்கும். 

4. பஹாமாஸ் -Bahamas

Payanam Articles
பஹாமாஸ்

பெரும்பாலான மளிகை பொருட்களும் நுகர்வு பொருட்களும் இறக்குமதி செய்யப்படுவதாலும், வலுவான சுற்றுலா தேவையின் காரணமாகவும் பஹாமாஸ் கரீபியன் பகுதிகள்மிகவும் காட்ஸ்லியான நாடுகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக நாச்சாவ் (Nassau) மற்றும் சுற்றுலா அதிகம் உள்ள தீவுகளில் வீட்டு வசதி செலவுகள் உள்ளூர் சம்பளங்களின் அளவுக்கு அதிகரிக்காததால் வாழ்க்கை செலவு சுமைகள் இங்கு அதிகமாக உள்ளன.

5. சிங்கப்பூர்

Payanam Articles
சிங்கப்பூர்

வீட்டு வசதி, வாகனம் வாங்குதல், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு செலவு அதிகமாவதால்  சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் காட்ஸ்லியான நாடாக  உள்ளது. மேலும் கடுமையான விதிமுறைகள், அதிக வரிகள் காரணமாக தனிப்பட்ட வாகனம் என்பது சிங்கப்பூரில் மிகவும் செலவானதாகும். சொத்து விலைகள் நிலப்பற்றாக்குறை காரணமாக அதிகமாக உள்ளன. ஆனாலும் சிங்கப்பூரில் உலக தரத்திலான பொது போக்குவரத்து சிறந்த சுகாதார சேவை உயர்ந்த பாதுகாப்பு நிலை வலுவான பொருளாதார நிலையைக் கொண்டுள்ளது.

மேற்கூறிய நாடுகளில் அன்றாட அவசிய தேவைகளுக்கான செலவு அதிகம் என்பதால் உலகின் காஸ்ட்லியான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

logo
Kalki Online
kalkionline.com