
மே மாதம் வந்து விட்டது. சென்னை மற்றும் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தான். வெப்பம் நம்மை கண்டபடி தாக்கும். மின் விசிறி உஷ்ண காற்றை கக்கும். ஏ. சி. வைத்து இருந்தால் வெப்பநிலையை தாக்கலாம். ஆனால் கரண்ட் பில் பார்த்தால் ஒரே ஷாக் தான்.
குழந்தைகள் ஒரு வருட படிப்பை முடித்து விட்டு உல்லாசமாக இருக்க விரும்புவர். பெற்றோருக்கும் வெளியூர் செல்ல ஆசை இருக்கும். எங்கே செல்வது… ?
ஸ்விட்சர்லாந்து போகலாமா என பணம் படைத்தவர் யோசிக்க வாய்ப்பு உண்டு.
ஆனால்…
'ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை' இருக்கும் போது வேறு சிந்தனை எதற்கு… ?
ஆம்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டி இருக்கையில் வேறு சுற்றுலா தலம் எதற்கு… ? மே மாதம் ஊட்டி குளு குளு என்று இருக்கும். இயற்கை அளித்த ஏ. சி. தான் ஊட்டி.
ஊட்டியை பார்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆம். ஊட்டி செல்லவில்லை என்றாலும் சினிமாவில் கட்டாயம் பார்த்து இருப்பார்கள்.!
இன்னும் என்ன யோசனை… ?
புறப்படுங்கள் ஊட்டிக்கு.
குட்டி ரயில் ஆனந்தமோ ஆனந்தம். மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசித்து கொண்டே பயணிக்கலாம்.
ஊட்டி… !
முதலில் தாவரயில் பூங்கா.
வண்ணமயமாக பூக்கள்.
குளு குளு போக்கு.
பிறகு என்ன… ?
படகு இல்லம். படகு சவாரி ரம்மியமாக இருக்கும்.
ஓ… !
மிக முக்கியமான இடம்
தொட்டபெட்டா சிகரம். அங்கு டெலஸ்கோப் உள்ளது. சுற்றி நாலு பக்கமும் பார்த்து கொண்டாடலாம். அங்கு இருந்து ஊட்டியை பார்த்தால் அழகோ அழகு. ஊட்டி குட்டியாக தெரியும்.
நகரத்தின் மத்தியில் சேரிங் கிராசில் ஒரு நீர் வீழ்ச்சி உள்ளது. பார்க்க கண் கோடி வேண்டும்.
தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மட்டும் தானா… ?
இல்லை. நீலகிரி மாவட்டத்தில் பார்க்க மிக அதிக இடங்கள் உள்ளன.
குந்தா நீர்வீழ்ச்சி, மாயார் ரோப்கார் ( முள்ளும் மலரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது), பிறகு முதுமலை காடுகள். முதுமலையயில் புலிகள் காப்பகம் இருந்தது. முதுமலை தெப்பக்குளம் யானைகள் காப்பகம் எல்லோரும் விரும்புவார்கள்.
அவ்வளவு தானா.. ?
பைகாரா அணை கூடலூர் சாலையில் உள்ளது. பின்னர் அடர்ந்த தைல மரங்கள் உள்ளன. பக்கத்திலேயே நீர் ஏரி உள்ளது. இந்த இடத்தில் பல சினிமா டூயட் படம் பிடித்து இருக்கிறார்கள்.
ஊட்டி நகரத்தின் மையப் பகுதியில் ஒரு ரோஜா பூங்கா. பல பல வண்ணங்களில் பூக்கள்.
அதே போல் படகு இல்லம் செல்லும் போது சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. படகு இல்லம் செல்லும் நபர்கள் அங்கு உள்ள டாய் குட்டி ரயிலில் பயணம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்.
ஊட்டி என்றால் ஊட்டி தான்.
ஊட்டியை சுற்றிலும் பல இடங்கள் உள்ளன. ஏன் யோசிக்கிறீர்கள்… ? மூட்டை முடிச்சுடன் ஊட்டிக்கு புறப்பட்டு செல்லுங்கள்.
குளு குளு ஊட்டியை அனுபவியுங்கள்… !
ஊட்டி மட்டும் அல்ல. 17 கி. மீ. தொலைவில் குன்னூர் இருக்கிறது. இதுவும் சுற்றுலா தலம் தான். சிமஸ் பூங்கா பழங்களுக்கு பிரசித்தி பெற்றது. லேம்ஸ் ராக் பார்க்க வேண்டிய இடம். பிறகு கோத்தகிரி. இங்கு தான் கோடநாடு உள்ளது. மலையில் இருந்து பார்த்தால் பள்ளத்தில் மேட்டுப்பாளையம் சமவெளி உள்ளது. கோத்தகிரியில் தொல்லியல் ஆய்வு நடைபெறுகிறது. பாறைகளில் ஆதி மனிதன் வரைந்த பல்வேறு சித்திரங்கள் உள்ளன.
ஊட்டி செல்வோம்! உல்லாசமாக இருப்போம்!