சூரியன் இல்லையென்றால் என்னாகும்? துருவப் பகுதிகளின் விசித்திர வாழ்க்கை!

importance-of-sunlight
importance-of-sunlight
Updated on

காலை நேரம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சூரியன்தான். அந்த வெப்பமும் வெளிச்சமும் இல்லையென்றால் வாழ்க்கையே சீராக நடக்காது. சில நேரம் “எவ்வளவு வெயில்”ன்னு நாம கஷ்டப்படுவோம். ஆனா உண்மை என்னன்னா, அந்த வெயில்தான் நம்ம வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறது. பயிர் வளர, தண்ணீர் சுழல, மனிதர்கள் உயிரோட இருக்க எல்லாமே சூரியனை சார்ந்தது.

சூரியன் மாதக்கணக்கில் இல்லாத இடங்கள்

உலகத்துல சில இடங்களில் மாதக்கணக்கில் சூரியன் தெரியாது. இதை “துருவ இரவு (Polar Night)”ன்னு சொல்வாங்க. இது முக்கியமா வட துருவம் மற்றும் தென் துருவம் அருகிலிருக்கும் பகுதிகளில் நடக்கும்.

உதாரணமாக நோர்வேயின் Svalbard, அலாஸ்காவின் Utqiaġvik, கனடாவின் வட பகுதி, ரஷ்யாவின் சில இடங்கள் மற்றும் Antarctica போன்ற இடங்களில் இது நடக்கும்.

ஏன் சூரியன் தெரியாது?

பூமி சூரியனை சுற்றும்போது கொஞ்சம் சாய்ந்திருக்கும். அந்த சாய்வால்தான் குளிர்காலத்தில் அந்த பகுதிகள் சூரியனை நோக்கி இருக்காது. அதனால் சில வாரங்களோ, சில மாதங்களோ சூரியன் உதயமே ஆகாது. ஆனா ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, குளிர்காலத்தில் இருள் இருந்தாலும் கோடைக்காலத்தில் அதே இடங்களில் சூரியன் முழு நாள் மறையாமல் இருக்கும். இதை “Midnight Sun”ன்னு சொல்வாங்க.

Polar Night என்றால் என்ன?

துருவ பகுதிகளில் சுமார் 6 மாதங்கள் வரை சூரியன் தெரியாமல் இருக்கும் நிலையை “Polar Night”ன்னு சொல்றாங்க. ஆனா அது முழுக்க கருப்பு இருளா இல்ல. சில நேரம் மங்கலான வெளிச்சம் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஏன் இதற்கு 'மதிகெட்டான் சோலை' என்று பெயர்? கொடைக்கானல் குணா குகையின் மர்மங்களும் உண்மைகளும்!
importance-of-sunlight

அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?

இருள் இருந்தாலும் அங்கு மக்கள் வாழ்க்கையை நிறுத்துவதில்லை.

வீட்டுக்குள் நல்ல வெளிச்சம் வைத்துக்கொள்வார்கள். தினசரி வேலைகளை ஒரு திட்டப்படி செய்வார்கள். உடற்பயிற்சி, விளையாட்டு, சமூக நிகழ்ச்சிகள் எல்லாம் இருக்கும். சூரிய ஒளி குறைவாக இருப்பதால் Vitamin D மாத்திரை அல்லது சத்தான உணவுகள் எடுத்துக்கொள்வார்கள்.

பயிர் வளர்ச்சிக்கு சூரியன் முக்கியம்

சூரியன் இல்லையென்றால் செடிகள் வளராது. செடிகள் இல்லையென்றால் உணவுப் பொருட்கள் கிடைக்காது.

அதனால்தான் விவசாயம் முழுக்க சூரிய ஒளியையே சார்ந்தது. நம்ம சாப்பிடும் அரிசி, காய்கறி எல்லாம் சூரியனின் உதவியால்தான் வளர்கிறது.

சூரியன் திரும்பும் சந்தோஷம்

மாதக்கணக்கில் இருளுக்குப் பிறகு முதல் சூரியன் தோன்றும் நாள் அங்க மக்கள் பெரிய விழாவாக கொண்டாடுவார்கள்.

அந்த ஒரு கதிர் கூட அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். சூரியன் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.

இதையும் படியுங்கள்:
மனக் கவலைகளைத் தீர்க்கும் அருவிச் சத்தம்! நீர்வீழ்ச்சிகள் ஏன் நம்மை இவ்வளவு கவருகின்றன?
importance-of-sunlight

சூரியன் நமக்கு வெப்பமாகவும் சில நேரம் சிரமமாகவும் தோன்றலாம். ஆனா அது இல்லையென்றால் வாழ்க்கையே இருக்காது. சூரியக்கதிர் படாத அந்த இடங்களிலும் மக்கள் வாழ்ந்து காட்டுகிறார்கள். அது மனிதர்களின் சக்தியையும் இயற்கைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் திறமையையும் காட்டுகிறது.

மொத்தத்தில் பார்த்தால், சூரியன் நமக்கு வெறும் வெளிச்சம் மட்டும் இல்லை… அது வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.

அதனால்தான் ஒவ்வொரு நாளும் சூரியனை நன்றி சொல்ல வேண்டியது நமது கடமையாகும்.

logo
Kalki Online
kalkionline.com