ஏன் இதற்கு 'மதிகெட்டான் சோலை' என்று பெயர்? கொடைக்கானல் குணா குகையின் மர்மங்களும் உண்மைகளும்!

guna-cave-history
guna-cave-history
Updated on

கொடைக்கானலில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குணா குகை உள்ளது. முன்பு இதை டெவில்ஸ் கிச்சன் என அழைத்தனர். குணா படம் இங்கு படமாக்கப்பட்ட பின்னர் இந்த இடம் குணா குகை என அழைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த இடம் குணா குகை என பெயர் பெற்று விளங்கி வருகிறது. இந்த இடம் சுமார் 2200 மீட்டர் உயரத்தில் உள்ளது. ராட்சத பைன் மரங்கள் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதியில் இடையே அமைந்துள்ளது.

மிகவும் ஆழமான ஆபத்தான பாறை இடுக்குகளை கொண்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மோயர் பாயிண்ட் செல்லும் வழியில் அமைந்துள்ளது. 1821 இல் பி எஸ் வார்டு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆபத்தான அமைப்பை கண்டு இதற்கு டெவில்ஸ் கிச்சன் என்ன பெயர் வைத்தனர்.

மூன்று பிரம்மாண்டமான பாறை இடுக்குகளில் இடையே அமைந்துள்ளது. இந்தக் குகை மிகவும் ஆழமானது. குகையின்ஆழமான பகுதிகள் தற்போது கனமான இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. சுற்றிவர இரும்பு கம்பிகளால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

குகைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால் வெளியில் இருந்து பார்த்து ரசிக்கலாம். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பார்வையிட அனுமதி நேரம்

ஆகும். மூடுபனி நேரம் மழை நேரத்தில் இங்கு பார்வையிட அனுமதி இல்லை.

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சோலா மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

அந்த மரங்களின் அடர்த்தியான வேர்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது. மேலும் பல வகையான முறுக்கு முடிச்சுகளுடன் காணப்படுவதால் அந்த இடமே பார்க்க பயங்கரமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறியதே அழகு... அதிசயங்களின் மையம் வாடிகன் சிட்டி: ஒரு ஆன்மீக மற்றும் கலைப்பயணம்!
guna-cave-history

1821 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த பிஎஸ் வார்டு என்பவர் இந்த இடத்தை கண்டுபிடித்தார். இந்து புராணங்களின்படி பாண்டவர்கள் இந்த இடங்களில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டதாக புராணங்களில் வரலாறு உள்ளது. தற்போது இரும்பு தகடால் மூடப்பட்டு சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பைன் மரக்காடுகள் மோயர் சதுக்கம்

தூண் பாறை ஆகியவை பார்க்க வேண்டிய இடமாகும். இந்த இடங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்

இந்த இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த குகையில் இதுவரை 16 பேர் இருந்ததாக கணக்கு சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்து உள்ளார்கள் என உள்ளூர் வாசிகள் தெரிவிக்கிறார்கள். இந்த குகை எத்தனை அடி ஆழம் உள்ளது என்பது இதுவரை கணக்கிட முடியவில்லை. சுமார் 2500 அடி ஆழம் வரை இருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு பார்வையட்டும் இதன் சரியான ஆழத்தை கண்டுபிடிக்க முடியவில்லை

இந்த குகையில் விழுந்து இறந்த உடல்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில்தான் உள்ளது. இதே போன்று தொப்பி பாறை பசுமை பள்ளத்தாக்கு போன்ற இடங்களிலும் தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். ஆனால் அந்த இடங்களில் இறந்து சில உடல்களை கைப்பற்ற முடிந்தது. ஆனால் குணா குகையில் மட்டும் இறந்த உடல்களை இதுவரை கைப்பற்ற முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
தங்கத்தின் மேல் எழுந்த நகரம்: ஆப்பிரிக்காவின் இதயமான ஜோஹான்ஸ்பர்க்!
guna-cave-history

எனவே இந்த இடத்திற்கு மதி கெட்டான் சோலை எனவும் அழைக்கிறார்கள்.

அதிகம் ஆபத்து என்று தெரிந்தும் இந்த இடத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். 1955 ஆம் ஆண்டு முதன் முதலில் செண்பக நாடார் என்பவர் இந்த குகையில் தவறி விழுந்து இறந்தார். அவர் நினைவாக இந்த இடத்தில் ஒரு கல்வெட்டும் ஒரு அபாயகர அறிவிப்பும் உள்ளது. ஆபத்தான பகுதி என்ற போர்டும் வைக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரன் என்பவர் இந்த குகை பள்ளத்தில் தவறிவிழுந்தார். அவரை உள்ளூர் மக்கள் உதவியடன் அவரது நண்பர் டேவிட் குட்டன் என்பவர் மீட்டார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மஞ்சு மேல் பாய்ஸ் என்ற படம் எடுக்கப்பட்டது. இப்போது குகையை என்று சுற்றி மேல் தளம் மட்டும பார்வையிடலாம்.

மேலும் கொடைக்கானலில் பிரையன்ட் பார்க், தூண் பாறைகள், குணா குகை, டால்பின் நோஸ், பைன் காடுகள்,வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவர் ஏரி, குறிஞ்சி ஆண்டவர் கோவில், வட்டக்கணல் ஆகிய இடங்களையும் பார்வையிட்டு வரலாம். சுற்றுலா செல்வதற்கு கொடைக்கானல் ஏற்ற இடமாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com