
மிகப்பெரிய அளவிலான பொருட்களை அதிக அளவு ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் சரக்கு ரயில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் உலகிலேயே மிகப்பெரிய ரயிலாக கருதப்படும் சூப்பர் வாசுகி ரயில் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
உலகிலேயே மிகப்பெரிய ரயிலாக கருதப்படும் சூப்பர் வாசகி என்ற சரக்கு ரயில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இயக்கப்படுகிறது. 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு 'ஆஷாதி கா அம்ரித்' திட்டத்தின் கீழ் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி இந்த சூப்பர் வாசுகி ரயிலை அறிமுகம் செய்தது.
6 ரயில் என்ஜின்கள் 295 ரயில் பெட்டிகளைக் கொண்டு 3.5கிமீ நீளம் கொண்ட இந்த சூப்பர் வாசுகி ரயில் தேவையான நிலக்கரியை நாக்பூரில் உள்ள அனல் மின் நிலையத்திலிருந்து எடுத்து செல்லும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நிலக்கரியுடன் சத்தீஸ்கரியில் இருந்து பயணத்தை தொடங்கும் வாசுகி11.20 மணி நேரத்தில் நாக்பூர் வந்தடைகிறது. இந்த ரயில் 3.5கிமீ நீளம் கொண்டதாக இருப்பதால் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு நடந்து செல்வதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடிக்கும். அதோடு இந்த ரயில் கிளம்பி விட்டால் மற்ற ரயில்கள் அனைத்தும் ஒதுங்கி நின்று வழி விட ஆரம்பித்து விடும்.
பெரும்பாலான ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் தண்டவாளம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தும் வகையில் மட்டுமே கட்டியிருப்பதால் வாசுகியை எந்த ரயில் நிலையத்திலும் நிறுத்த முடியாது.
அதேபோல் 3.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட வாசுகி ரயிலை வேறு எந்த இடத்திலும் நிறுத்திவிட்டு வேறு ரயில்களுக்கு வழி விடுவது என்பதும் சாத்தியம் இல்லை.வாசுகிக்கு பின்னால் வரும் ரயில் அதனை முந்திச்செல்வது முடியாத காரியம் ஆகும்.
27 ஆயிரம் டன் நிலக்கரியை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் சூப்பர் வாசுகி ரயில் சத்தீஸ்கரியில் இருந்து மலைப்பகுதி வழியாக பாம்பு போன்று வளைந்து வளைந்து வருவதை பார்க்கும் போது மிகவும் அழகாக காட்சி தரும் ஏதாவது ஒரு லெவல் இந்த ரயில் கடக்கும்போது மற்ற வாகனங்கள் அதற்கு வழிவிட்டு மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
சூப்பர் வாசுகி ரயில் சரக்கு போக்குவரத்திற்காக சரக்குகளை விரைவாகவும் அதிகமாகவும் எடுத்துச் சொல்லும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அதிகப்படியான நிலக்கரி தேவையாக இருக்கும் அனல் மின் நிலையத்திற்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . இது போன்ற மேலும் ஒரு ரயிலை இயக்க மத்திய ரயில்வே பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் 13,000 ரயில்களோடு புதுப்புது ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது . அந்த வகையில் கடைசியாக அறிமுகம் செய்த வந்தே பாரத் ரயிலோடு புல்லட் ரயிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதுப்புது ரயில்களில் பயணம் செய்து பொதுமக்கள் தங்களை உற்சாகப் படுத்திக் கொள்ளுங்கள்.