இந்தியாவின் மறைந்திருக்கும் சொர்க்கத் தீவுகள்: யாரும் அறியாத நான்கு ரகசிய உலகங்கள்!

நிக்கோபார், லட்சத்தீவு, அந்தமான் கடலில் பரவியுள்ள இந்த அரிய தீவுகள், பாதுகாக்கப்பட்ட காடுகள், பவளப்பாறைகள், அபூர்வ பறவைகள், உயர்ந்த கலங்கரை விளக்கங்கள் என இயற்கை அழகை அசைக்காமல் காக்கும் மறைந்த சொர்க்கங்கள்
indias-hidden-paradise
indias-hidden-paradise
Updated on

“போங்கப்பா… எனக்கு ரொம்ப stress ஆக இருக்கு. எங்காவது கண்காணாத இடத்துக்கு போயிரலாம்னு இருக்கேன்” என்று சொல்பவரா நீங்கள்? அப்படின்னா முதலில் இதைப் படிங்க. இந்தியாவில் உள்ள சிறிய தீவுகளை பற்றி இந்த பதிவில் சொல்லியிருக்கேன்...

தில்லான்சாங் தீவு (நிக்கோபார் தீவுகள்)

நீங்கள் எப்போதாவது ‘தில்லான்சாங்’ பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? நிக்கோபார் தீவுக்கூட்டத்திலேயே மிகக் குறைவாக ஆராயப்பட்ட தீவுகளில் இதுவும் ஒன்று. இந்தத் தீவில் பெரும்பாலும் மனித நடமாட்டம் இல்லை. இது பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். அடர்ந்த காடுகள், எரிமலைக் குன்றுகள் மற்றும் மிகவும் அரிதான வனவிலங்குகள் இங்கே வாழ்கின்றன. இந்தப் பகுதிக்குச்செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பித்ரா தீவு (லட்சத்தீவு)

லட்சத்தீவிலேயே மக்கள் வசிக்கும் மிகச் சிறிய தீவு பித்ரா என்பது நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இங்கு வெறும் 300 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இந்தத் தீவு அதன் அழகான காயல்கள் (lagoons) மற்றும் பவளப்பாறைகளுக்காகப் பெயர் பெற்றது. இங்கு சென்றால் உலகத் தொடர்பே இல்லாமல், தனிமையில் அமைதியாக நேரத்தைச் செலவிடலாம். இங்கே காலம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வு ஏற்படும்.

நார்கொண்டம் தீவு (அந்தமான் கடல்)

நார்கொண்டம் என்பது ஒரு அழிந்துபோன எரிமலைத் தீவாகும். வட அந்தமானில் அமைந்துள்ள இந்தத் தீவு ‘நார்கொண்டம் ஹார்ன்பில்’ பறவைகளுக்காகப் புகழ் பெற்றது. இந்தப் பறவையை பூமியின் வேறு எந்தப் பகுதியிலும் காணமுடியாது. இந்தத் தீவிற்குள் நுழைய சிறப்பு அனுமதி பெறுவது அவசியம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் ‘மறைந்திருக்கும் சொர்க்கங்கள்’: பலரும் அறியாத 4 ரகசியத் தீவுகள்!
indias-hidden-paradise

மினிகாய் தீவு (லட்சத்தீவு)

மினிகாய் தீவு லட்சத்தீவின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது முற்றிலும் மாறுபட்ட ஒரு தனி உலகமாகத் தோன்றும். இந்தத் தீவு இந்தியாவின் உயரமான கலங்கரை விளக்கங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. வண்ணமயமான பவளப்பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்தத் தீவு, அதன் ஒதுக்குப்புற அமைவிடத்தாலும், செல்வதற்கான கட்டுப்பாடுகளாலும் இன்றும் அமைதியாகவும், இயற்கை எழில் மாறாமலும் உள்ளது.

இந்தியாவில் நாம் பல சுற்றுலா தலங்களை பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவின் கடற்கரை ஓரம் உலகின் மிக அழகான சில தீவுகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மிகச் சில பயணிகளே இதுவரை அங்கு கால் பதித்துள்ளனர். இங்கே போனால் பல வருடங்கள் கூட ஒருநாள் போலத் தோன்றும்.

Summer holidays ல ஜாலி டிரிப் போக இந்த தீவுகளில் ஏதாவது ஒன்றை முடிவு செய்துட்டு கிளம்புங்க இந்த அழகான தனி உலகத்திற்கு.

logo
Kalki Online
kalkionline.com