
மாஞ்சோலை எஸ்டேட் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து மணிமுத்தாறு வழியாக செல்ல வேண்டும். நெல்லையில் இருந்து சுமார் 57 கிலோ மீட்டர் தூரமும் அம்பாசமுத்திரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.
மாஞ்சோலை எஸ்டேட் வனப்பகுதியானது இயற்கை எழில் சூழ்ந்த பார்ப்பதற்கு ரம்யமான இடமாகும். இங்கு டூரிஸ்ட்கள் நிறைய வருவார்கள். அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்தில் அனுமதி பெற்று தான் மேலே செல்ல முடியும். இது ஆதிகாலத்தில் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கண்ட்ரோலில் இருந்தது.
அப்போதைய சமஸ்தான மன்னர் ஒரு கொலை வழக்கில் சிக்கி இருந்ததால் தன் வழக்கு செலவுக்காக சுமார் 8400 ஏக்கர் வனப்பகுதியை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்பவருக்கு 99 ஆண்டு காலம் குத்தகைக்கு விட்டு இருந்தார். 2028 ல் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது.
முதலில் நாம் பார்க்க வேண்டிய இடம் மணிமுத்தாறு அருவி. இங்கு எப்போதும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும். அருவிக்கு முன்பாக பெரிய தடாகம் உள்ளது. இந்த தடாகம் 100 அடிக்கு மேல் ஆழம் கொண்டது. மணிமுத்தாறு அருவியை தாண்டி சென்றால் மாஞ்சோலை, காக்காச்சி, நாலு முக்கு ஊத்து, குதிரை வெட்டி போன்ற எஸ்டேட்கள் உள்ளன.
மாஞ்சோலையிலும் நாலு முக்கு எஸ்டேட்டிலும் தேயிலை பேக்டரி உள்ளது. மாஞ்சோலையில் பாக்டரியை ஒட்டி ஒரு கேண்டீன் உள்ளது. வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு உணவு அருந்துவது வழக்கம். இந்த எஸ்டேட்டுகள் அனைத்தும் பார்ப்பதற்கு குளுமையாக இயற்கையாக அமைந்துள்ள வனப்பகுதி ஆகும். இங்கு தேயிலைத் தவிர காப்பி, எஸ்டேட் ஏலக்காய் எஸ்டேட் உள்ளன.
இந்த மாஞ்சோலை எஸ்டேட்டை காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே பார்வையிட அனுமதி உண்டு. சுற்றுலா வாசிகள் அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்தில் அனுமதி பெற்று செல்லலாம்.
நாலு முக்கிய எஸ்டேட்டில் இருந்து ஒரு பிரிவு கோதையார் செல்கிறது. அங்கு ஒரு அப்பர் டேம் உள்ளது. இங்கு உள்ள வின்ச் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பர் கோதையார் பகுதிக்கு செல்லலாம். இந்த வின்ச் உள்ள பகுதியில் தான் முன்னர் முள்ளும் மலரும் படம் திரைப்படமாக்கப்பட்டது.
காக்காச்சி மலைப் பகுதியில் ஒரு போலோ விளையாட்டு மைதானம் உள்ளது. அக்காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் குதிரை சவாரியிலும் இங்கு செல்வது வழக்கம். குதிரை வெட்டி பகுதியில் உள்ள வியூ பாயிண்ட் மூலம் உள்ள சுற்றுலா சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தையும் தெளிவாக காணலாம். யானைகள் மற்றும் மிருகங்கள் இங்கு அதிகம் நடமாடும். எனவே, இங்கு இரவு பயணம் கிடையாது.
1993 ஆம் ஆண்டு இங்குள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி போராட்டத் துவங்கினார்கள். அந்தப் போராட்டமானது கலவரமாக மாறியது போலீசார் தடியடி நடத்தியது 17 பேர் அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றில் குறித்து இறந்து விட்டனர். ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தற்போது வெளியேறி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
குத்தகை காலம் முடிவு பெறுவதற்கு முன்பாகவே நிர்வாகம் அவர்களை காலி செய்யச் சொல்லிவிட்டது. எஞ்சிய நபர்களும் விரைவில் காலி செய்து விடுவார்கள். பின்னர் இந்த பகுதி முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் மாறிவிடும்.
ஏற்கனவே வனத்துறைக்கும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் இடையே வழக்கு பல காலமாக நடந்து தற்போது வனத்துறைக்கு சாதகமான தீர்ப்புக்கு வந்துள்ளதால், இந்தப் பகுதி முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும். நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி அருகில் உள்ள மக்கள் பயன்படும்படி இந்த மாஞ்சோலை எஸ்டேட் பகுதி அமைந்துள்ளது வரப் பிரசாதம் ஆகும்.
வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்தப் பகுதியை கண்டிப்பாக சுற்றிப் பார்த்து குதூகலம் அடையலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.