
சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டிய இணைப்பு விமானம் இல்லை. விமானத்தைவிட்டு இறங்கிய 'கேட்' வாசலிலேயே எங்கள் குழுவினரிடையே சிங்கப்பூருக்கு எப்படிப் போவது என்ற சர்ச்சை எழுந்தது. நீண்டநேர சர்ச்சைக்குப் பிறகு மூன்று விதமான முடிவுகள் எடுக்கப்பட்டன. விமானத்திலேயே செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் ஓரிரு நாள்கள் கோலாம்பூரிலேயே தங்கியிருந்து செல்வது; கோலாலம்பூரில் இருந்தே தனியார் வாடகைக் காரில் செல்ல விரும்புவர்கள் தனியே செல்வது; மற்றவர்கள் மூன்று பேருந்துகளில் ஏறி ஜோகூர்வரை சென்று, அங்கிருந்து தனித்தனியே சிங்கப்பூருக்கு (வீடுவரைக்கும்) வாடகைக் காரில் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. நாங்கள் காலையிலேயே காரில் செல்வது என்று தீர்மானித்து ஏற்பாடு செய்துவிட்டதால் கோலாலம்பூரிலிருந்தே தனியார் வாடகைக் காரில் ($300சிங்கப்பூர் வெள்ளி) புறப்பட்டோம்.