
மணி மாலை ஆறுக்கு மேல் ஆகிவிட்டது. இரவு 9 மணிக்கு விமானம். பேருந்து புறப்படுவதாகத் தெரியவில்லை. எங்களுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. பயண முகவர்களும் சரியான பதில் கூறவில்லை. இறுதியில் இன்று விமானம் ரத்து என்றும் மறுநாள் காலையில்தான் மாற்று விமானம் என்றும் நாம் எல்லோரும் இரவு வேறொரு விடுதிக்குச் சென்று இரவு தங்கவேண்டும் என்றும் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டனர். மேலும் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணம் குறித்து ஒன்றும் தெரியாது என்றும் கூறினர். இக்குண்டு ஹிரோஷிமா நாகசாயில் அமெரிக்கா போட்ட குண்டைவிடப் பெரிய குண்டாக எங்கள் குழுவினரைத் தாக்கியது. காரணம் மறுநாள் அனைவரும் வேலைக்குப் போகவேண்டும். எல்லோரும் மலேசிய ஏர்லைன்ஸைத் திட்டிக்கொண்டே பேருந்தில் ஏறினோம்.