
நகோயா ஜப்பானின் மக்கள் தொகையில் நான்காவது பெரிய நகரம்.
இங்குதான் புகழ்பெற்ற டயோட்டா கார் நிறுவனம் இருக்கிறது. டயோட்டா பிரிட்ஜ் என்று அந்த நிறுவனத்தின் பெயரில் ஒருபெரிய பாலம் இருக்கிறது. டயோட்டா நகரம் என்ற தனி நகரமே அங்கு இருக்கிறது. தெருவெங்கும் விதவிதமான பல்வேறு வண்ணங்களில் டயோட்டா கார்களைக் காண முடிந்தது. அந்நகர மக்கள் வாழ்க்கையுடன் டயோட்டா கார் பின்னிப் பிணைந்துள்ளதைக் காண முடிந்தது. இந்நகரம் டோக்கியோ, கோபே போன்ற பெரிய துறைமுகங்கள் வரிசையில் மூன்றாவதாகத் திகழ்கிறது.