
ஃபூஜி மலை டோக்கியோவிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. அங்கிருந்து காரில் சென்றால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தில் ஃபூஜி மலையைச் சென்றடையலாம். நாங்கள் நகோயாவில் உள்ள Owakudani Boiling Valley இல் இருந்து சென்றதால் சுமார் 1மணி நேரத்தில் அடிவாரத்தை அடைந்துவிட்டோம். நாங்கள் சென்ற நேரத்தில் பனி சூழாமல் இருந்ததால் வழியிலேயே மலையின் சிகரம் நன்கு தெரிந்தது. அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பேருந்தைவிட்டுக் கீழிறங்கி, வரிசையாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் புறப்பட்டோம்.