
டோக்கியோவின் பிரதான புகழ்மிக்க இடமான 'ஷிபுயா கிராசிங்' என்ற இடத்திற்குச் சென்றோம். ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும் சாலையைக் கடக்கும் காட்சி ஒரு மயக்கும் காட்சி. உலகின் பரபரப்பான பாதசாரிகள் கடக்கும் இந்த இடம் துடிப்பான விளம்பர பலகைகள் மற்றும் நியான் விளக்குகளால் சூழப்பட்டுள்ளது. டோக்கியோவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
இரவு உணவுக்கு உணவுக் கடையை நோக்கிச் சென்றோம். வழக்கமான 'நான், ரொட்டி, மசாலா டீ` போன்றவற்றை உண்டுவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். பின் எங்கள் குழுவினர் சிலருடன் சேர்ந்து நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குப் பின்புறமுள்ள கடை வீதியில் உள்ள கடைகளுக்குச் சென்றோம். அங்கு சில மருந்துப் பொருள்களும் மிட்டாய் ரொட்டிகளும் வாங்கினோம்.