
இன்று எங்கள் பயணத்தின் இறுதிநாள். ஆகவே காலை 8.30 மணிக்கெல்லாம் விடுதி அறையைக் காலிபண்ணி பெட்டிகளைப் பேருந்தில் ஏற்றினோம். இன்று Free and Easy Day என்றுதான் சொன்னார்கள். ஆனால் நாளின் பெரும்பகுதியைப் பேருந்திலேயே கழிக்கும்படி நேர்ந்தது.
இன்று காலை முதலில் நாங்கள் 'Meji Shrine' எனப்படும் பழமைவாய்ந்த, முழுவதும் மரத்தாலான ஒரு புத்தர் கோயிலுக்குச் சென்றோம். பேருந்தைவிட்டு இறங்கி மரங்களடர்ந்த பாதையில் வெகு தூரம் நடந்துதான் கோயிலை அடைந்தோம்.