
டோட்டம்போரி கடைவீதி - 1612 இல் வாழ்ந்த புகழ்பெற்ற வணிகராகிய 'டோட்டன்' என்பவரால் உருவாக்கப்பட்டது. ஆகவே இப்பகுதிக்கு டோடம்போரி என்ற பெயர் வந்ததாக வழிகாட்டி மூலம் அறிந்து கொண்டோம். இன்று `டோட்டம்போரி` என்ற ஒரு கால்வாயும் ஏராளமான உணவகங்களும் இங்கு காணப்படுகின்றன.
நாங்கள் இப்பகுதியில் சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாகச் செலவு செய்தோம். பலரும் இங்குள்ள உணவகங்களில் சிற்றுண்டி, தேநீர் முதலியவகளை உட்கொண்டனர். எங்கள் குழுவினர் பலரும் சிறுசிறு குழுக்களாகப்பிரிந்து அங்குள்ள கடைகளில் நுழைந்தனர். அப்பகுதியில் உள்ள `100 யென் ஷாப்` என்ற பெயரில் அழைக்கப்படும் `டைசோ` கடைக்குள் நாங்கள் சென்றோம். அங்குள்ள பொருள்கள் யாவும் சிங்கப்பூர் டைசோ கடைகளில் உள்ளவை போன்றே இருந்தன.