
மூன்றாம் நாள் அதிகாலையிலேயே எழுந்துவிட்டோம். 6.30 மணிக்கெல்லாம் காலை உணவுக்குச் சென்றுவிட்டோம். ஏனென்றால் காலை எட்டுமணிக்குப் புறப்பட்டு புல்லட் ரயில் நிலையத்திற்குச் செல்லவேண்டும். அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்தில் ஏறிவிட்டோம். பேருந்து மூலம் ஒசாகாவிலுள்ள புதிய இரயில் நிலையத்திற்குச் சென்றோம்
'ஜே.ஆர்.டி' எனப்படுவது ஜப்பான் ரயில்வே அரசாங்கத்தைச் சேர்ந்தது. அது மற்றவகை ரயில் பயணங்களுக்கான நிலையமாகும். Shinkansen என்பது புதிய ரயில் நிலையத்தைக் குறிக்கும். இங்கிருந்துதான் டோக்கியோ வரைக்கும் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாங்கள் ஹிரோஷிமாவிற்குப் போக இந்த ரயிலில்தான் பயணம் செய்தோம்.