
ஆகஸ்டு ஆறாம் தேதி காலை உணவை முடித்துகொண்டு 8.15 முதல் 9.30 வரை ஒசாகா கோட்டைக்குச் சென்றோம். ஒசாகாக கோட்டை ஜப்பானிலுள்ள ஒசாகா மாகாணத்தில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் 'அசுச்சி-மோமோயாமா' என்ற மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இது உலகப் புகழ்பெற்ற கோட்டைகளுள் ஒன்றாகும். இது 61,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஜப்பானிய அரசால் முக்கியமான கலாசார சொத்தாகப் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இக்கோட்டை அகழிகள், கிணறுகள், தோட்டங்கள் போன்ற இயற்கைச் சூழல்களால் அமைந்துள்ளது. கிட்டதட்ட இது தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை பெரியகோயிலைப் போன்றதோர் அமைப்பினை உடையது. இதன் சுவர்கள் மிகப்பெரிய அகலமான கற்களால் அமைந்துள்ளமை வியக்கத்தக்கது.