கன்னியாகுமரி அருவிகளின் சொர்க்கம்: தவறவிடக்கூடாத இயற்கை சுற்றுலாத் தலங்கள்!

திற்பரப்பு, காளிகேசம், வட்டப்பாறை, வள்ளிச்சுனை போன்ற அருவி, கன்னியாகுமரியை நீர்வீழ்ச்சி சுற்றுலா மற்றும் வனவிலங்கு அனுபவத்தின் முக்கிய தலமாக மாற்றுகின்றன
kanyakumari-waterfalls
kanyakumari-waterfalls
Updated on

ன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய அருவிகள் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது. கோதை ஆறு நதியிலிருந்து வரும் திற்பரப்பு அருவி காளிகேசம் உலக்கை அருவி வட்டப்பாறை அருவி அருவிக்கரை அருவி வள்ளி சுனை போன்ற அருவிகள் உள்ளன பெரும்பாலும் இந்த அருவிகள் ஜூலை முதல் டிசம்பர் வரை தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். 

திற்பரப்பு அருவி 

நாகர்கோவிலில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி 50 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இங்கு குழந்தைகள் விளையாட நீச்சல் குளம் மற்றும் படகு சவாரி உள்ளது இந்த பகுதியில் நிறைய திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது

காளிகேசம் அருவி 

காளிகேசம் அருவி காப்பு காட்டு பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு இயற்கையான அருவியாகும். 

உலக்கை அருவி 

இந்த அருவிஅழகிய பாண்டியபுரம் அருகில் அமைந்துள்ளது. இது காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இயற்கையான அருவி ஆகும்.

வட்டப்பாறை அருவி 

காளிகேசம் பகுதியில் அமைந்துள்ள இயற்கையான அருவி. இந்த அருவி மிகவும் அழகாக இருக்கும். 

அருவிக்கரை அருவி 

இந்த அருவி திருவட்டார் அருகே அமைந்துள்ளது. பரளியர் நதியில் உருவாகும் ஒரு சிறிய அருவியாகும். 

வள்ளிச்சுனை அருவி 

இந்த அருவி குமாரகோவில் அருகே அமைந்துள்ளது ஆன்மீகம் மற்றும் இயற்கை சார்ந்த இடமாகும். பெரும்பாலும் எல்லா அருவிகளிலும் ஏழு மாதங்கள் வரை தண்ணீர் வரத்து இருக்கும். கோடையில் நீர் குறைவாக இருக்கும். ஜூன் முதல் பிப்ரவரி வரை அருவியில் சுற்றி பார்க்க உகந்த காலமாகும்.  இந்த அருவிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 

கன்னியாகுமரியில் 402 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் உள்ளது.  இந்த சரணாலயம் 2008 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் புலிகள் காப்பகத்தில் புலி மான் காட்டெருமை யானை சாம்பார் மான் சிங்கவால் குரங்கு பைத்தான் போன்றவை அதிகம் உள்ளது. 

திற்பரப்பு அருவி பேச்சி பாறை அணையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 300 அடி நீளம் கொண்டது 50 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுகிறது. இவை தவிர மேல் கோதை ஆறு கீழ் கோதை ஆறு கல்லாறு போன்ற இயற்கையான சூழ்நிலைகள் நிறைந்த இடங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
கேரள பயணத்தில் தவற விடக்கூடாத இடங்கள்!
kanyakumari-waterfalls

மயிலாறு 

கோதை ஆறு மலையில் தோன்றும் மயிலாறு பேச்சி பாறை அணையை சென்றடைகிறது இந்த நதி இரும்பு பாலத்தின் அடியில் ஓடி வருகிறது. 

கிழவியாறு 

கீழாமலை பகுதிகளில் தோன்றி பேச்சிப்பாறை அணையில் சேர்கிறது. 

கல்லாறு 

கோதை ஆறு மலைப்பகுதியில் தோன்றி கல்லாறு அருவியில் விழுகிறது. பின்னர் பேச்சி பாறை அணையில் கலக்கிறது. இங்குள்ள இரட்டை அருவி என்றால் அது கல்லாறு அருவியைத்தான் குறிக்கும். இரட்டை அருவி குளிப்பதற்கு ஏற்ற இடம் ஆகும்.

சித்தாறு அணை 

வனப்பகுதியில் இரண்டு ஆறுகள் தோன்றி கோதை ஆறு நோக்கி செல்கிறது. குளிப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. 

பேச்சி பாறை அணை 

இந்த அணை 48 அடி உயரத்தில் உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வருகை தருகிறார்கள். திற்பரப்பு அருவியை ஒட்டி மகாதேவர் கோவில் உள்ளது. கோடைகாலத்தில் இங்குள்ள அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வாடிக்கையாக உள்ளது.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com