
நம் வீட்டு பிள்ளைகளுக்கு முழு ஆண்டுத்தோ்வு முடிந்து கோடை விடுமுறை தொடங்க உள்ளது, சரி அதற்கென்ன இப்போது என்ற கேள்வி வருகிறதா?
விடுமுறையை எப்போதும்போல உறவினர் வீடுகளுக்கு சென்று டேரா போடத்தான் வேண்டுமா? அவர்களுக்கு தொல்லை தர வேண்டுமா? உறவுகள் வந்து போனால்தான் சொந்த பந்தங்கள் உறவுகள் மேம்படுமா?
இப்போது விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது, அதோடு விபரீதமும் கூடவே வளர்ந்து வருகிறது. இந்த விஷயம் கொஞ்சம் பயத்தை வரவழைத்து விடுகிறது. அது மட்டுமல்ல நிறையவே பயம் உள்ளது, உள்ளங்கையில் உலகம் என்ற நிலை வந்துவிட்டது. (செல்போன்களால்) சரி பயனுள்ள வகையில் விடுமுறையை பயன்படுத்துவதா?
ஆம். மேற்கொண்டு கல்லூாிப்படிப்பை எவ்வாறு மேற்கொள்வது, என விபரம் புாிந்தவர்கள், நெருக்கமான நண்பர்கள், உறவினா்களிடம் கலந்து பேசலாமே!
தட்டச்சு பயிற்சிக்கு தினசரி இரண்டு மணிநேரங்கள், அதோடு மாலை வேலையில் கனணி வழி பயிற்சி மேற்கொள்ள வைக்கலாம், ஒரே தெருவைச்சோ்ந்த பிள்ளைகளை ஒருங்கிணைத்து கேரம், செஸ், கிாிக்கெட் விளையாட்டு, போன்றவற்றை மேற்கொள்ள வைக்கலாம்! அதில் அவர்களிம் திறமைக்கு வலுசோ்க்கலாம்.
பெண்பிள்ளைகளாக இருந்தால் சமையல் வேலையில் தாயாருக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்யலாம்! அதே நேரம் கைத்தொழில் செய்ய ஊக்குவிக்கலாம்!
மேற்கொண்டு என்ன படிப்பது என்பதை அவரவர் விருப்பத்திகினங்க கலந்துபேசி ஏற்பாடுகளை செய்யலாம். யோகா பயிற்சி, மெடிட்டேஷன்! தையற்பயிற்சியும் கற்றுத்தரலாம்!
பயனுள்ள புத்தகங்கள் அறிவை வளா்க்கும் புத்தகங்களை படிக்கச் சொல்லலாம்! மேலும், தினசரி நூலகம் சென்று புத்தகங்கங்கள் படிக்கச்சொல்லி பொது அறிவை வளா்க்க வைக்கலாம்!
மாலை நேர டியூசன், வாழ்வின் முன்னேற்றம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளச் செய்யலாம், பாட்டுகிளாஸ் அனுப்பி திறமையை வளா்த்துக்கொள்ளச்செய்யலாமே!
காய்கறித்தோட்டங்கள் போடும் வேலையை மேற்கொள்ளச்செய்யலாம்! இப்படி நிறைய வேலைகள் நம்மிடம் குவிந்து கிடக்கின்றன. அதைவிடுத்து உறவினா்கள் வீடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு சிரமம் தரும் வேலையைத் தவிா்க்கலாம். குடும்ப வருமானம் செலவுகள் விபரங்களை புாியவைப்பதே நல்லது.
விலைவாசி விண்ணைத்தொடுகிறது, செலவு என்பது அனைவருக்கும் பொதுவானதே! ஆக பிள்ளைகளை மாதக்கணக்கில் உறவினர் வீடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு சிரமம் தரவேண்டாமே?
எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு கைத்தொழில் பழக அறிவு சாா்ந்த விடயங்களில் பிள்ளைகளை ஈடுபடுத்தி நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளச்செய்யலாம்!
அதேநேரம் நம் வீட்டுப்பிள்ளைகளிடம் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணரும் ஆக்கபூா்வமான பணிகளை செய்ய ஆா்வம் ஏற்படுத்தலாம்.
நம் வீட்டுப் பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு நம் பிள்ளைகளை ஒப்பிட்டு பேசாமல் இருப்பது நல்லதே!
இரண்டு மாத விடுமுறையில் வேலைக்கு அனுப்பி ஊதியம் வாங்க வைக்கலாம் என்ற நிலைபாட்டிற்கு பிள்ளைகளை தள்ளவேண்டாம். அவர்கள் கையில் சொற்ப வருமானம் பாா்த்துவிட்டால் மேல்படிப்பு படிக்க வேண்டுமென்ற எண்ணம் மாறிவிடும்!
நம் கையே நமக்கு உதவி, கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை ஒத்துக்கொள்! போன்ற விஷயங்களின் அடிப்படையில் திறமை சாலிகளாக உருவாக்கலாம்,
இப்படி நமக்கு தொியாமலே பயனுள்ள விஷயங்கள் நிறைய நம்மைச்சுற்றி வலம் வருகிறது. அவ்வகை விடயங்களைக் கண்டுபிடித்து அதன்படி பிள்ளைகளின் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக ஆக்குவது பெற்றோா்களின் கையில்தான் உள்ளது! நல்ல விதமாக பிள்ளைகளை வளா்ப்பது பெற்றோா்களாகிய நம் கையில் உள்ளது.