

உலகின் 5 நாடுகளில் உள்ள 5 டிஸ்னி தீம் பார்க்கள் குடும்பம், நண்பர்கள், காதலர்கள் அனைவருக்கும் மாயாஜால அனுபவத்தை தருகின்றன. புளோரிடா வால்ட் டிஸ்னி வேர்ல்டில் மேஜிக் கிங்டம், எப்காட், ஹாலிவுட் ஸ்டுடியோ, அனிமல் கிங்டம் என நான்கு பார்க்குகளை முழுமையாக ரசிக்க குறைந்தது நான்கு நாட்கள் தேவை. ஜனவரி-மார்ச், செப்டம்பர் காலம் சிறந்த பயண நேரம்.
நண்பர்கள்,குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் சென்று பார்த்து அதன் மாயாஜாலத்தை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியை அடைவீர்கள்.
1. வால்ட் டிஸ்னி வேர்ல்ட் தீம் பார்க்: புளோரிடா, அமெரிக்கா
உலகின் மிகப்பெரிய டிஸ்னி ரிசார்ட்ஸ் மற்றும் தீம் பார்க், டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட் மற்றும் அனிமல் கிங்டம் என நான்கு அற்புதமான தீம் பார்க் உள்ளன. இந்த நான்கு பார்க்குகளையும் முழுமையாக பார்த்து அனுபவித்து மகிழ குறைந்தது நான்கு நாட்கள் ஒதுக்க வேண்டி இருக்கும்.
மேஜிக் கிங்டமில் உள்ள புகழ்பெற்ற சிண்ட்ரெல்லா கோட்டையை காணலாம். எப்காட்டில் உலகளாவிய எதிர்கால சாகசப் பயணத்தை இங்கு மேற்கொள்ளலாம்.
ஹாலிவுட் ஸ்டுடியோவில் பிடித்தமான டிஸ்னி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டவற்றை பார்க்கலாம். அனிமல் கிங்டமில் மறக்க முடியாத சஃபாரி பயணத்தை மேற்கொள்ளலாம்.
2. டிஸ்னிலேண்ட் பார்க்: கலிபோர்னியா - அமெரிக்கா
இங்கு பழமையான டிஸ்னி தீம் பார்க்கான கலிஃபோர்னியா டிஸ்னிலேண்டில் காலத்தால் அழியாத அழகான வசீகரமானவற்றையும், பல உற்சாகமான விஷயங்களையும் காணலாம். இங்கு இட்ஸ் எ ஸ்மால் வேர்ல்ட் சவாரியை அனுபவிக்கலாம்.
3. டோக்கியோ டிஸ்னிலேண்ட்: டோக்கியோ - ஜப்பான்
முதல் என்று சொல்லும்போது டோக்கியோ டிஸ்னி லேண்ட்தான் அமெரிக்காவிற்கு வெளியே கட்டப்பட்ட முதல் டிஸ்னி தீம் பார்க் ஆகும். மற்ற டிஸ்னிலேண்ட் இடங்களைப் போலவே இதுவும் பல கருப்பொருள் மண்டலங்களைக் கொண்டு உள்ளது. இங்கு தனித்துவமான ஈர்ப்புகளையும் வழங்குகிறது. இதன் மூலம் ஆசியாவில் உள்ள ரசிகர்களுக்கு டிஸ்னியின் மாயாஜாலத்தையும் நெருக்கமாக கொண்டு மகிழ வைக்கிறது. இங்கு நீங்கள் பிக் ஹீரோ 6 கதாபாத்திரங்களுடன் சாட்டை சவாரி செல்லலாம்.
வெஸ்டர்ன் லேண்டில் உள்ள சிலிர்ப்பூட்டும் பிக் தண்டர் மவுண்டன் ரோலர் கோஸ்டர் சவாரியில் பயணம் செய்யலாம்.
4. டோக்கியோ டிஸ்னி சீ: டோக்கியோ - ஜப்பான்
டோக்கியோவில் உள்ள டிஸ்னி சீயையும் இங்கு காணலாம். இது கடல்சார் கருப்பொருளைக் கொண்ட ஒரே டிஸ்னி தீம் பார்க் ஆகும். இதுவும் டோக்கியோ டிஸ்னி லேண்டும் சேர்ந்து மாயாஜால டோக்கியோ டிஸ்னி ரிசார்ட்டை உருவாக்குகின்றன. கடலின் கட்டுக் கதைகள், புராணக் கதைகளிலிருந்து உத்வேகம் பெற்று டோக்கியோ டிஸ்னி சீ மத்திய தரைக்கடல் துறைமுகம், அரேபியக் கடற்கரை போன்ற வசீகரிக்கும் துறைமுகங்களை வழங்குகிறது.
5. ஷாங்காய் டிஸ்னி ரிசார்ட் - சீனா.
சீனாவிற்கு சென்றால் அந்நாட்டின் ஒரே டிஸ்னி தீம் பார்க்கான ஷாங்காய் டிஸ்னி ரிசார்ட்டை கண்டு களிக்கலாம். புகழ்பெற்ற அழகான கார்டன்ஸ் ஆஃப் இமேஜினேஷன், எதிர்கால உலகமான டுமாரோலேன்ட் மற்றும் சாகசத் தீவு உள்ளிட்ட அனைத்து வித தனித்துவமான கருப்பொருள் நிலங்களையும் தவறாமல் சுற்றிப் பார்க்கலாம்.
டிஸ்னி லேண்ட் பூங்காக்களுக்குச் செல்ல சிறந்த நேரம் ஜனவரி முதல் மார்ச் வரை அல்லது செப்டம்பர் வரை. உங்கள் பயணத்தை திட்டமிட்டு சரியான சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் சென்று பார்த்து ரசித்து வரலாம்.
உலகத் தரம் வாய்ந்த டிஸ்னி தீம் பார்க்குகளின் சிறப்புகளைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு, உங்கள் அடுத்த விடுமுறைப் பயணத்தை மிகச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றிக்கொள்ளலாம்.