

பெரும்பாலான நம் வீடுகளில், ஒரு விசேஷம் அல்லது பிறந்தநாள் விழா போன்ற நாட்களில் மட்டுமே ஐஸ் கிரீம் சாப்பிடுவோம். சில வீடுகளில் வாரம் ஒருமுறை மட்டுமே, மதிய உணவுக்கு பின் ஐஸ் கிரீம் சாப்பிடுவார்கள். மழைக்காலங்களில் அதற்கும் “No”.
ஆனால் ஒரு ஊரில் ஐஸ் கிரீம் எல்லா நாட்களிலும் சாப்பிடப்படுகிறது. அதுதான் ஐஸ் கிரீமின் தலைநகரம். ஐஸ் கிரீமுக்கு ஒரு தலைநகரம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். “என்ன, ஐஸ் கிரீமுக்கு ஒரு தலைநகரமா?” என்று ஆச்சரியப்படுவீர்கள்.
ஆமாம், ஐஸ் கிரீமுக்கு தலைநகரம் நம் இந்தியாவில்தான் இருக்கிறது. அது எது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
அந்த நகரம் நம் கர்நாடக மாநிலத்தின் கடற்கரை பகுதியில் உள்ள மங்களூரு நகரம்தான் இந்தியாவின் ஐஸ் கிரீம் தலைநகரம்.
முன்னர் “மங்களூர்” என்று அழைக்கப்பட்ட இன்றைய மங்களூரு, அதிக அளவில் உள்ள ஐஸ் கிரீம் கடைகள் மற்றும் அங்கிருந்து உருவான பிரபல பிராண்டுகள் காரணமாக, “இந்தியாவின் ஐஸ் கிரீம் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது.
மங்களூரில் ஐஸ் கிரீம் – அன்றாட உணவு
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகமான ஐஸ் கிரீம், அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக ஐஸ் கிரீம் அங்கு அன்றாட உணவாக உள்ளது.
ஐஸ் கிரீம் தொழில் வளரக் காரணங்கள்
மங்களூரின் பருவநிலை வருடம் முழுவதும் ஐஸ் கிரீமுக்கு ஏற்றதாக உள்ளது. அருகிலுள்ள பால் கூட்டுறவுகள் மூலம் தரமான பால் கிடைக்கிறது அதனால் பல குடும்பங்கள் ஐஸ் கிரீம் கடைகளை நடத்தி மலிவான விலையில் விற்பனை செய்கின்றனர். கிடைப்பதால் அனைவரும் எளிதில் வாங்கி சாப்பிடுகின்றனர்
மங்களூரை வேறுபடுத்துவது என்ன?
சிறிய நகரமாக இருந்தாலும் அதிக அளவில் ஐஸ் கிரீம் கடைகள் உள்ளன. காலநிலையைப் பொருட்படுத்தாமல் தினசரி சாப்பிடுகின்றனர். உள்ளூர் சுவைக்கு ஏற்ப புதிய வகைகள் அறிமுகப் படுத்தப்படுகின்றன.
மங்களூரின் பிரபல ஐஸ் கிரீம் வகைகள்
கட்பட் (Gadbad) – ஐஸ் கிரீம், பழம், ஜெல்லி, நட்ஸ்கள் அடுக்குகளாக...
உள்ளூர் பார்ஃபே, பனக் (Panak) ஐஸ் கிரீம், சீசனல் பழ சுவைகள் – பலா, தேங்காய்...
மங்களூரில் தொடங்கிய பிரபல பிராண்டுகள்
Ideal Ice Cream / Pabbas
Hangyo Ice Cream
Rayan Ice Cream
மங்களூருக்கு செல்ல சிறந்த காலம்
அக்டோபர் – மார்ச்: நல்ல காலநிலை: ஏப்ரல் – மே: அதிக வெப்பம், ஆனால் ஐஸ் கிரீம் அதிகம் சாப்பிடப்படும் காலம்.
மழைக்காலம்: அமைதியான அனுபவம்
மங்களூருக்கு செல்வது எப்படி?
விமானம்: மங்களூரு சர்வதேச விமான நிலையம்
ரயில்: கொங்கண் ரயில் வழித்தடம்
சாலை: பெங்களூரு, மைசூர், கேரளா ஆகிய இடங்களில் இருந்து செல்லலாம்.
மொத்தத்தில், மற்ற நகரங்களில் ஐஸ் கிரீம் ஒரு “டிரெண்ட்” ஆக மாறிக்கொண்டிருக்கும்போது, மங்களூரில் அது ஒரு கலாச்சாரமாக — தினசரி வாழ்க்கையின் ஒரு இனிய பகுதியாக உள்ளது.