இயற்கை தீட்டிய வர்ணஜாலம்: சீனாவின் அதிசய 'ரெயின்போ' மலைகள்!

 miraculous 'Rainbow' Mountains
miraculous 'Rainbow' Mountains
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சீனாவின் சாங்யே டான்சியா (Zhangye Danxia)

சீனாவின் கான்சு (Gansu) மாகாணத்தில் உள்ள ஜாங்கியே டான்சியா (Zhangye Danxia) நிலப்பரப்பு, இயற்கை வண்ணம் பூசப்பட்ட மலைகளுக்கு பெயர் பெற்றது. 24 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் மணற்கல் மற்றும் தாதுக்கள் படிந்து, காற்று மற்றும் மழையினால் செதுக்கப்பட்ட இந்த வண்ணமயமான மலைகள் "ரெயின்போ மலைகள்" என அழைக்கப்படுகின்றன. இது 2009 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பெயரிடப்பட்டது. நேஷனல் ஜியோகிராஃபிக் தேர்ந்தெடுத்த 'உலகின் முதல் 10 புவியியல் அதிசயங்களில்' ஒன்றாகும்.

சுமார் 322 சதுர கிலோமீட்டர் (124 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடம் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, நீலம் மற்றும் பச்சை போன்ற பல்வேறு நிறங்களில் இயற்கையாகவே அடுக்கடுக்கான பாறைகள் காணப் படுகின்றன.

டெக்டோனிக் அசைவுகள், புவியியல் மாற்றங்கள் மற்றும் பல மில்லியன் ஆண்டுகால அரிப்பு காரணமாக இந்த வண்ணங்கள் உருவானது.

ஜாங்யே பெரிய புத்தர் கோவில்:

ஜாங்யேவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புத்தர் கோவில் (Dafo Temple) ஆசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட சிலையாகும். இது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மரம் மற்றும் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு தங்கம் மற்றும் பிற வண்ணங்களால் பூசப்பட்டுள்ளது. சுமார் 35.4 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் தோள்பட்டை அகலம், 4 மீட்டர் அடி கொண்ட மிகப்பெரிய படுக்கை நிலை (Reclining Buddha) புத்தர் சிலையாகும்.

புத்தரின் காதுகள் கூட 2 மீட்டர் நீளம் கொண்டவை. புத்தர் சிலைக்கு பின்னால் அவரது 10 சீடர்களின் சிலைகளும் குயிங் வம்ச காலத்து சுவர் ஓவியங்களும் உள்ளன. கிபி 1098ல் மேற்கு சியா வம்சத்தால் கட்டப்பட்ட இது, 60,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ள ஒரு முக்கிய கலாச்சார தளமாகும்.

இக்கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமான புத்தர் மண்டபம், 18 அரஹத்துகள் (Arhats) மற்றும் சுவர்களில் வரையப்பட்ட மகாபாரதம் மற்றும் சீனக் கதைகளின் ஓவியங்கள் உள்ளன. இங்குள்ள நூலகத்தில் மிங் வம்ச காலத்தைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட பௌத்த நூல்கள் (Sutras) இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் ட்ரிப் பிளான் பண்றீங்களா? இந்த 6 இடங்களை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
 miraculous 'Rainbow' Mountains

பிங்கோவ் டான்சியா (Binggou Danxia):

ஜாங்கியே நகரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் உள்ளது இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான பிங்கோவ். இது ஐஸ் வேலி (Ice Valley) என்றும் அழைக்கப்படுகிறது. செங்குத்தான, விசித்திரமான பாறைகள் (பெரும்பாலும் Y வடிவம்), தூண்கள் மற்றும் கூர்மையான மலைகளைக் கொண்டுள்ளது. காற்றினால் உருவான விசித்திரமான, பிரம்மாண்டமான பாறைச் சிற்பங்கள் இங்கு அதிகம். இவை சிவப்பு நிற மணற்கல் மற்றும் களிமண்ணால் ஆனது.

ஜாங்கியே டான்சியா (Zhangye Danxia):

வண்ணமயமான டான்சியா பகுதி இங்கு மிகவும் பிரபலம். சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் இடமாக உள்ளது. பிங்கோவ் டான்சியா, ஜாங்கியே டான்சியாவை விட மிகவும் கரடுமுரடான மற்றும் பழமையான தோற்றத்தை கொண்டிருப்பதால் இது ஒரு இயற்கை அருங்காட்சியகம்போல் காணப்படுகிறது.

சூரிய உதயம் மற்றும் மறைவின் பொழுது இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் நெருப்பு சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் ஜொலிக்கின்றன.

பார்வையிட சிறந்த நேரம்:

அருகில் உள்ள விமான நிலையம் ஜாங்யே கன்சோ விமான நிலையம். சீனாவின் முக்கிய நகரங்களில் இருந்து உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜூன் முதல் செப்டம்பர் வரை பார்வையிட சிறந்த நேரமாகும். குறிப்பாக சூரிய உதயம் மற்றும் மறைவின் பொழுது மற்றும் மழைக்குப் பிறகு மலைகள் அதிக நிறத்துடன் காட்சியளிக்கும். சுற்றுலாப் பயணிகள் இந்த மலைகளைக் கண்டு ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் சிறப்பு நடைபாதைகள் மற்றும் பார்வைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com