வரலாறும் ஆன்மீகமும் சங்கமிக்கும் நயினா தீவு: கடல் வழிப் பயண அனுபவம்!

நாகபூசணி அம்மன் கோவில், நாகதீப புராண விகாரை என இரு சமயப் புனிதத் தலங்களால் விளங்கும் நயினா தீவு, கடல் வழிப் பயணத்துடன் வரலாறும் ஆன்மீகமும் கலந்த தனித்துவமான சுற்றுலா அனுபவத்தை தருகிறது.
travel-experience
travel-experience
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

யினா தீவு (Nainativu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க சிறிய தீவாகும். இது இந்துக்களின் நாகபூசணி அம்மன் கோவில் மற்றும் பௌத்தர்களின் நாகதீப விகாரை ஆகிய இரு முக்கிய வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட புகழ்பெற்ற புனித தலமாகும். யாழ்ப்பாணத்திலிருந்து படகுமூலம் செல்லக்கூடிய இந்தத் தீவு சப்த தீவுகளில் ஒன்றாகும்.

பண்டைக்காலத் தமிழ் இலக்கியங்களில் 'மணிபல்லவம்' என்றும், சிங்களத்தில் 'நாகதீபம்' என்றும் அழைக்கப் படுகிறது. பழங்கால வரலாறுகள் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நயினா தீவு, இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் தவறவிடக் கூடாத இடமாகும்.

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோவில்:

64 சக்தி பீடங்களில் ஒன்றான நாகபூசணி அம்மன் மிகவும் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க அம்மன் கோவிலாகும். இதன் 108 அடி உயரமுள்ள வண்ணமயமான ராஜகோபுரம் சிறந்த திராவிடக் கட்டடக்கலைக்கு சான்றாகும். 64 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இங்கு தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. தல விருட்சமாக வன்னி மரமும், தல தீர்த்தமாக தீர்த்தகேணியும் உள்ளது.

நாகதீப புரான விகாரை (Nagadeepa Purana Vihara): 

புத்தரின் வருகையை நினைவுகூரும் அமைதியான பௌத்த ஆன்மீகத் தலமாகும். புத்தர் நயினா தீவிற்கு விஜயம் செய்ததாகக் கருதப்படும் இடத்தில் கட்டப்பட்ட பௌத்தர்களின் புனிதமான தலமாகும். நாகதீப புராதன விகாரை நாகபூசணி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள பௌத்த சமயத்தவர் கௌதம புத்தர் இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகின்றனர். இந்த விகாரையில் சில பௌத்த பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இத்தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும்.

இதையும் படியுங்கள்:
பசிபிக் கடலின் ரகசிய சொர்க்கம்: டோங்கா தீவின் பிரமிக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள்!
travel-experience

புத்தர் இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது பயணத்தின் பொழுது, இரண்டு நாக மன்னர்களுக்கு இடையிலான போரைத் தடுத்து அமைதியை ஏற்படுத்திய இடமாக இது போற்றப்படுகிறது. இங்குள்ள வெள்ளிய நிற ஸ்தூபியும், புத்தரின் பாதச்சுவடு செதுக்கப்பட்ட கல்லும் முக்கிய பார்வைகளாகும்.

தீவுப் பயணம்:

யாழ்ப்பாணத்தில் இருந்து குறிக்கட்டுவன் (Kurikadduwan) துறைமுகம் வரை சென்று, அங்கிருந்து படகு மூலம் 15-20 நிமிடங்களில் தீவை அடையலாம். சுமார் 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத்  தீவு முழுவதும் பனை மரங்கள் மற்றும் இயற்கை அழகுடன் அமைதியான சூழலைக் கொண்டுள்ளது. படகில் நயினா தீவு செல்வது மிகவும் ரம்மியமான அனுபவமாக இருக்கும்.

நாகபூசணி அம்மன் தீர்த்தக் கரை:

கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த இடம் மிகவும் அமைதியான மற்றும் ரம்யமான சூழலைக் கொண்டுள்ளது.

பழைய டச்சு கோட்டை எச்சங்கள்:

நயினா தீவுப் பகுதியில் உள்ள சிறிய டச்சு கோட்டை போன்ற அமைப்புகள் வரலாற்றை பறைசாற்றுகின்றன. இங்கு மீன்பிடி மற்றும் சுற்றுலா முக்கிய தொழில்களாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
யாரும் நம்ப முடியாத தமிழர்களின் கட்டிடக்கலை! மலை உச்சியை குடைந்து கட்டப்பட்ட கோவில்!
travel-experience

தீவு எங்குள்ளது?

நயினா தீவிற்கு தரைவழியாக பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினா தீவு செல்வதற்கு குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து படகு மூலம் தீவை அடையலாம். தீவிற்குள் உள்ளூர் பேருந்து வசதி உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்கு கிழக்கு திசையில் புங்குடு தீவும், வடக்கில் அனலை தீவும் அமைந்துள்ளன.

செல்ல சிறந்த காலம்: 

கடல் அமைதியாக இருக்கும் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் பயணிக்க ஏற்றவை.

logo
Kalki Online
kalkionline.com