ஊட்டி மலை ரயில் பயணம்: மறக்க முடியாத அனுபவம் தரும் ஒரு சரித்திரச் சின்னம்!

Payanam articles
Ooty Hill Train Journey!
Published on

ட்டி ரயில் பயணம் என்பது வரலாற்று சிறப்புமிக்கது. இந்த ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்வது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். 1899 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்டது. இதில் பயணம் செய்யும்போது இரண்டு புறமும் அழகான இயற்கை காட்சிகள் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் பள்ளத்தாக்குகள் ஏரிகள் இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள் பறவைகளின ஓசைகள் என மனதை கொள்ளை கொள்ளும்.

இந்த ரயிலில் பயணம் செய்ய 25 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். நூற்றாண்டுகளுக்கும் மேலாக உள்ள சிறப்புமிக்க ரயிலாகும். இந்த ரயிலில் பயணம் செய்வதன் மூலம் ஊட்டியின் முழு அழகையும் ரசிக்கலாம். இது முழுக்க முழுக்க மீட்டர் கேஜ் ரயில்பாதை ஆகும். மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டி இயற்கையான புல்வெளிகள் இனிமையான சூழல் குளிர்ந்த வானிலை மூலம் உங்களை வரவேற்கும். இதனிடையே அவலாஞ்சி, தொட்டபெட்டா சிகரம், மான் பூங்கா மங்குரா, ஊட்டி தாவரவியல், பூங்கா ஊட்டி ஏறி, கலகட்டி நீர்வீழ்ச்சி முதுமலை தேசிய பூங்கா, ரோஸ் கார்டன் மற்றும் பல வியூ பாய்ண்டுகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இதனை கோடை தலைநகரமாக வைத்திருந்தார்கள். இந்த ரயில் ஊட்டியின் ஆன்மா போன்றது. வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் சுரங்கங்கள் பாலங்கள் என பரவசமூட்டுகின்றன

1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த மீட்டர் கேஜ் பாதையை உருவாக்கினார்கள். யுனெஸ்கோ மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதிகள் பசுமையான தேயிலை தோட்டங்கள் ஆழமான பள்ளத்தாக்குகள் நீர்வீழ்ச்சிகள் மலைமுகடுகளை காணலாம். குறுகலான மலைப்பாதைகளிலும் செங்குத்தான ஏற்ற இறக்கங்களிலும் செல்வது புதிய அனுபவமாக இருக்கும். ரயிலில் செல்லும்போது மெதுவாக செல்வதால் இயற்கை அழகை ரசிப்பதுடன் கேமரா மூலம் போட்டோ எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரயிலில் செல்ல விரும்புவார்கள்.

இதையும் படியுங்கள்:
சோகோட்ரா தீவின் மிரள வைக்கும் காட்சிகள்!!
Payanam articles

பொம்மை ரயில் போன்று செல்வதால் மனதிற்கு புத்துணர்ச்சியும் தெம்பும் கிடைக்கிறது. இந்த ரயிலில் நிறைய திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது. இயற்கை அழகை ரசித்தபடி செல்வது சுகமான அனுபவமாகும். மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி சாலை ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கல்லாவி அடர்லி ஹால்ரோஸ், வெலிங்டன் அரவங்காடு கெட்டி குன்னூர் லவ் டேல் போன்ற அனைத்து இடங்களையும் பார்வையிடலாம். கோடை விடுமுறை பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். தடக் தடக் என்று செல்வது சுகமான அனுபவமாக உள்ளது.

1854 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இதனை கட்டமைக்க தொடங்கினார். 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதனை பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. மேட்டுப்பாளையம் டு ஊட்டி வரை 46 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ஊட்டி கடல் மட்டத்திலிருந்து 2200 மீட்டர் உயரத்தில் உள்ளது. வெளிமாநிலத்தவர்களும் வெளிநாட்டவர்களும் இதில் அதிகம் பயணம் செய்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
எதற்காக நிறுத்தப்பட்டது லண்டன் - கொல்கத்தா - சிட்னி பேருந்து சேவை?
Payanam articles

இந்த ரயில் ஒரு மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்லும். 46 கிலோ மீட்டர் சென்றடைய சுமார் 4 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது

208 கொண்டை வளைவுகளை கொண்டது. பார்ப்பதற்கும் பயணம் செய்வதற்கும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

உண்மையிலேயே இந்த ரயிலில் பயணம் செய்வது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com