கேரளாவிற்கு இணையான குளிர்ச்சி... தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு இடமா? மிஸ் பண்ணிடாதீங்க!

Payanam articles
Payanam articles
Published on

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான இயற்கையான அருவிகள் உள்ளன. வான தீர்த்த அருவி, கல்யாணி தீர்த்த அருவி, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி போன்ற சிறப்பான இயற்கையாக அமைந்த அருவிகள் கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளது. இந்தப் பான தீர்த்த அருவியை வான தீர்த்த அருவி என்றும் அழைக்கிறார்கள். 

பாபநாசத்தில் இருந்து தமிழக கேரள எல்லை காடான அகஸ்தியர் மலையின் ஒரு பகுதியில் காரையாறு அணையை அடுத்து அமைந்துள்ளது இந்த பான தீர்த்த அருவி.  பான தீர்தத அருவி வானத்தர்த்த அருவியாக மாறியது என பார்க்கலாம்.

ராமர் தன் தந்தை தசரதருக்கு இந்த இடத்தில்தான் ஈமச்சடங்குகள் நடத்தி தனது கடமையை நிறைவேற்றினார் என புராணங்கள் கூறுகிறது. மேலும் அகஸ்தியர் இங்கு வந்து தவம் செய்து இந்த தீர்த்தத்தில் நீராடியதாக வரலாறு உள்ளது. எனவே இந்த பான தீர்த்தம் நாளடைவில் வான தீர்த்தமாக மாறியது.

மூலிகை அருவி 

இந்த நீரானது பலவிதமான மூலிகைகள் மரங்கள் வேர்கள் இவற்றில் பட்டு இந்த நீர் பாய்ந்து வருவதால் இந்த நீருக்கு பலவிதமான நோய்களை தீர்க்கும் சக்தி உள்ளது. இந்த நீரில் குளித்தால் நாள்பட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. 

தாமிரபரணி நதியின் தாய் 

தாமிரபரணி நதியின் தோற்றம் இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகிறது. இந்த நீரானது காரையாறு அணையில் தேங்கி மலையில் பயணித்து பாபநாசத்தில் வந்து அடைகிறது. குறிஞ்சி முல்லை பகுதியில் பயணம் செய்த இந்த நதி அடுத்ததாக விவசாய நிலங்கள் ஆன மருதத்தில் பாய்ந்து செல்கிறது. எனவே பான தீர்த்தம் தாமிரபரணியின் தாய் என அழைக்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
துருக்கியின் வரலாற்றுப் பொக்கிஷம்: ஒரு பயண வழிகாட்டி!
Payanam articles

ஆபத்து நிறைந்த அருவி 

பார்ப்பதற்கு மலைகள் சூழ்ந்த ரம்யமான மலைப் பகுதியில் இருந்தாலும் இந்த அருவி மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இதன் கீழ் உள்ள கல்யாணி தீர்த்த அருவி அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. மழைக்காலங்களில் இங்கு செல்வது மிகவும் ஆபத்தானது. கோடை கலத்தில் இதன் அழகை கண்டு ரசிக்கலாம்.

சுற்று வட்டாரம் 

வான தீர்த்த அருவியை தொடர்ந்து சேர்வலாறு அணையை கடந்து அணையையும அதற்கு கீழ் கல்யாணி தீர்த்த அருவியும் உள்ளது. இதன் கீழ் பகுதியில் அகஸ்தியர் அருவியும் தலையணையும் உள்ளது.

தலையணை 

இந்த தலையணைக்கு ஒரு புராண கதை உண்டு. அக்காலத்தில் இந்த பகுதியை பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். எதிரி நாட்டு படையெடுப்பின்போது பாண்டிய இளவரசன் தப்பிக்க முடியாமல் தன் தலையை வெட்டி தானே தாமிரபரணி நதியில் விழுந்துவிட்டான். அவனது தலை ஒதுங்கிய இடம் தலையணை என்றும் அவனது முண்டம் ஒதுங்கிய இடம் முண்டன் துறை எனவும் அழைக்கப்படுகிறது.

இங்குள்ள சுற்றுலா தலங்கள் 

காரையாறு அணை சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை, மாஞ்சோலை பகுதி முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவை அருகில் உள்ளன. இங்கு நிறைய சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். 

இதையும் படியுங்கள்:
இளஞ்சிவப்பு நகரத்தின் இதயத்துடிப்பு: ஜெய்ப்பூர் சிட்டி பேலஸ் ஒரு முழுமையான பார்வை!
Payanam articles

காரையார் அணை 

காரையார் அணையை சுற்றி பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது.  இங்கு நிறைய சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். வனச்சரக அலுவலகத்தில் அனுமதி பெற்று படகு போக்குவரத்து மூலம் சுற்றிப் பார்க்கலாம். 

மாஞ்சோலை 

மாஞ்சோலை பகுதி தேயிலை தோட்டங்களுக்கு மிகவும் பெயர் பெற்றது. உதகை வால்பாறை போன்ற இடங்களுக்கு இணையாக பேசப்படுகிறது இதைச் சுற்றி பார்க்க ஆண்டுதோறும் நிறைய சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். 

இந்தப் பகுதியில் மாஞ்சோலை காக்காச்சி நாலு முக்கு ஊத்து குதிரை வெட்டி போன்ற இடங்களை சுற்றிப் பார்க்கலாம். இங்கு மூன்று இடங்களில் டீ பேக்டரிகள் உள்ளன.

முண்டந்துறை புலிகள் காப்பகம் 

இங்குள்ள காப்பகத்தில் புலிகள் சிறுத்தைகள் யானைகள் கழுதைப்புலி காட்டெருமைகள் காட்டுப் பூனைகள் மான்கள் கரடிகள் சிங்கவால் குரங்குகள் போன்ற எண்ணற்ற வனவிலங்குகள் இந்த பகுதியில் உள்ளன. இங்கு நடை பயணம் செய்ய 24 பாதைகள் உள்ளன.

வான தீர்த்த அருவிக்கு கீழ் உலகில் முதன்முதலாக தோன்றிய சொரிமுத்தையனார் கோவில் உள்ளது. இந்தப் பகுதியில் அகஸ்தியர்க்கு சிவன் திருமண கோலத்தில் காட்சி அளித்த இடமாக கருதப்படுகிறது.  கல்யாணி தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் குறையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com