துருக்கியின் வரலாற்றுப் பொக்கிஷம்: ஒரு பயண வழிகாட்டி!


Turkey's historical treasure
Turkey's historical treasure
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

துருக்கியின் மத்திய அனத்தோலியாவில் அமைந்துள்ள கப்படோசியா (Cappadocia), எரிமலை சாம்பலால் உருவான தனித்துவமான "தேவதை புகைபோக்கிகள் (Fairy Chimneys), பாறை குடைவரை வீடுகள், நிலத்தடி நகரங்கள் மற்றும் சூடான காற்று பலூன் (Hot Air Balloon) சவாரிகளுக்கு புகழ்பெற்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாகும். இது 1985 முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக உள்ளது. கோரேம் திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் உச்சிசார் கோட்டை ஆகியவை முக்கிய இடங்களாகும். இங்குள்ள பாறைகளில் செதுக்கப்பட்ட குகை ஹோட்டல்களில் தங்குவது ஒரு தனித்துவமான அனுபவமாகும்.

கப்படோசியாவின் முக்கிய சிறப்பம்சங்கள்

தேவதை புகைபோக்கிகள் (Fairy Chimneys):

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலைை வெடிப்புகளின் சாம்பல் படிவுகள், காற்று மற்றும் நீர் அரிப்பால் உருவான தனித்துவமான கூம்பு வடிவப்பாறை அமைப்புகளாகும். இவை இயற்கையின் அதிசயங்களாக கருதப்பட்டு பண்டைய காலங்களில் குகை வீடுகள், தேவாலயங்கள் மற்றும் நிலத்தடி நகரங்களாக மக்கள் பயன்படுத்தினர்.

எர்சியஸ், ஹசன் மற்றும் கோல்லேடாக் போன்ற எரிமலைகளின் சாம்பல் படிவுகள்(Ignimbrites) அரிப்பால் சிதைந்து இந்த வடிவங்களை உருவாக்கின. இந்தப் பாறைகள் கூம்பு வடிவ உச்சி மற்றும் கடினமான மேல்பகுதியைக் கொண்டு பார்ப்பதற்கு காளான் போன்று தோற்றமளிக்கின்றன.

நிலத்தடி நகரங்கள்:

நிலத்தடி நகரங்கள் கிமு 8 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் ஃபிரிஜியர்களால் (Phrygians) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. போர் மற்றும் துன்புறுத்தல்களின்போது மக்கள் தங்களின் கால்நடைகள் மற்றும் உணவுப் பொருட்களை பாதுகாத்து, பல மாதங்கள் நிலத்தடியில் வாழ இவை பயன்பட்டன. கப்படோசியாவில் சுமார் 200 நிலத்தடி நகரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மலைகளின் ராணி சிம்லா: வெள்ளிப் பனிமலைகளுக்கு இடையே ஒரு கனவுப் பயணம்!

Turkey's historical treasure

அதில் டெரிங்குயு (Derinkuyu) மற்றும் கய்மாக்லி (Kaymakli) ஆகியவை மிகப்பெரியவை. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மறைந்திருந்த, பாறைகளுக்குள் செதுக்கப்பட்ட பரந்த நிலத்தடி நகரங்கள் இன்று முக்கியமான சுற்றுலாத்தலங்களாக விளங்குகின்றன.

ஹாட் ஏர் பலூன் சவாரி:

சூரிய உதயத்தின் பொழுது கப்படோசியாவின் கோரேம் பள்ளத்தாக்கின் மீது விடியற்காலையில் நிலப்பரப்பை பலூனில் பறந்து பாறை அமைப்புகளை ரசித்து பார்ப்பது உலகப் புகழ்பெற்ற சுற்றுலா அனுபவமாகும். பள்ளத்தாக்குகள், தேவதை புகைபோக்கிகள் மற்றும் குகை வீடுகளை 1000 முதல் 3000 அடி உயரத்திலிருந்து ரசிக்கும் ஒரு அற்புதமான வான்வழி அனுபவமாகும். இது 60 முதல் 90 நிமிடங்கள் வரை நீடிக்கும். பொதுவாக ஏப்ரல்-ஜூன் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சிறப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பனி தேசம் வேண்டாம்... இதமான மலைப்பிரதேசம் போதும்! பிப்ரவரி ஸ்பெஷல் 5 இடங்கள்!

Turkey's historical treasure

கோரேம் தேசியப் பூங்கா:

பல பாறை தேவாலயங்கள் மற்றும் குடைவரை வீடுகளைக் கொண்ட இந்த இடம் யுனெஸ்கோ தளமாகும். கோரேம் திறந்தவெளி அருங்காட்சியகம், லவ் வேலி (love valley) மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட பைசண்டைன் கால ஓவியங்கள் போன்றவை பார்க்க வேண்டிய இடங்களாகும். அத்துடன் குகை நகரங்களில் நடைப்பயணமும், குதிரை சவாரியும் சிறந்த அனுபவத்தைத் தரும்.

கப்படோசியா பாரசீக மொழியில் "அழகான குதிரைகளின் நிலம்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது பல நாகரீகங்களின் மையமாக இருந்துள்ளது.

உச்சிசார் கோட்டை (Uchisar Castle):

1400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை ரோமானிய மற்றும் ஒட்டோமான் காலங்களில் பாதுகாப்பு அரணாக விளங்கியது. இப்பகுதியின் மிக உயரமான இடத்திலிருந்து முழு கப்படோசியா பிராந்தியம், ஏர்சியஸ் மலை (Mount Erciyes) மற்றும் புறா பள்ளத்தாக்கு (Pigeon Valley) ஆகியவற்றின் 360 டிகிரி காட்டிய ரசிக்க முடியும்.

கப்படோசியா பகுதி முக்கியமாக நெவஹிர் (Nevsehir) மாகாணத்தில் உள்ளது. இது துருக்கியின் கலாச்சார மற்றும் வரலாற்று பயணத்திற்கு ஏற்ற சிறந்த இடமாகும்.

logo
Kalki Online
kalkionline.com