இளஞ்சிவப்பு நகரத்தின் இதயத்துடிப்பு: ஜெய்ப்பூர் சிட்டி பேலஸ் ஒரு முழுமையான பார்வை!

Jaipur City Palace
Jaipur City Palace
Published on

ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் சிட்டி பேலஸ் 1727 (Jaipur City Palace) இல் மகாராஜா சவாய் ஜெய்சிங் என்பவரால் கட்டப்பட்டது. முகலாய மற்றும் ராஜபுத்திர கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும். இந்த அரண்மனையில் முபாரக் மஹால் மற்றும் சந்திர மஹால் அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்த அரண்மனையில் இன்றும் அரச குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்

இதன் ஒரு பகுதி சுற்றுலா பயணிகளின் அருங் காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு நிறைய வளாகங்கள் அருங்காட்சியகங்கள் முற்றங்கள் அழகிய தோட்டங்கள் சிறிய ஏரி ஆகியவை உள்ளது. ராஜ குடும்பத்தினர் பயன்படுத்திய உடைகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் காஷ்மீர் சால்வைகள் பனாரஸ் பட்டுப்புடவைகள் ஆகியவை காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

சந்திர மஹால் அரசு குடும்பத்தினர் வசிக்கும் பகுதியாகும்.

ஹவா மஹால் 365 ஜன்னல்கள் உடன் 1799 இல் கட்டப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் ஹவா மஹால் மற்றும் ஜந்தர் மந்தர் அருகில் உள்ளது. காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும். இவை தவிர ராம்பாக் பேலஸ் ஆம்பர் பேலஸ் ஜெல் மஹால் ஆகியவை முக்கிய அரண்மனைகள் ஆகும்.

அரண்மனை முழுவதும் சிவப்பு மற்றும் இளம் சிவப்புமணற் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. அரண்மனை சுவர் மற்றும் மேற்கூரைகளில் பல வண்ணங்களில் கண்ணாடி சில்லுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மன்னர் இரண்டாம் மாதேசி என்பவரால் வரவேற்பு மாளிகை முபாரக் மஹால் ஐரோப்பிய கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது.

சந்திர மஹால்

ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஏழு தளங்கள் கொண்டது. அழகிய ஓவியங்கள் கண்ணை கவரும் வேலைப்பாடுகள் அமைந்துள்ளது.

அரண்மனை முகப்பு மயில் வடிவில் தோரண வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு சிறிய ஏரி அழகாக உள்ளது.

சுக் நிவாஸ் என்ற ஓய்வு மாளிகை மன்னரின் தனி அறையாகவும் உணவு கூடமாகவும்உள்ளது. இதன் மூன்றாம் தளம் வண்ண மாளிகை என அழைக்கப் படுகிறது. இதன் நான்காம் தளம் சோப நிவாஸ் எனப்படும் ஐந்தாம் தளத்தில் படிமங்களின் மாளிகை உள்ளது. ஆறாம் தளத்தில் ஸ்ரீநிவாஸ் என அழைக்கப்படுகிறது. ஏழாம் தளம் மணிமகுட கோவிலாகும்.

இதையும் படியுங்கள்:
பனி தேசம் வேண்டாம்... இதமான மலைப்பிரதேசம் போதும்! பிப்ரவரி ஸ்பெஷல் 5 இடங்கள்!
Jaipur City Palace

பிரிதம் நிவாசு சதுக்கம்

இது அரண்மனை வளாகத்தில் பார்க்க வேண்டிய இடமாகும். புராதன நினைவு சின்னங்கள் அதிகம் உள்ளன. கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த அரண்மனையில் மயில் வாசல் இலை உதிர் காலத்தையும் தாமரை வாசல் கோடை காலத்தையும் ரோஜா வாசல், குளிர்காலத்தையும் லெஹெரியா வாசல் வசந்த காலத்தையும் குறிக்கிறது

முபாரக் மஹால்

விருந்தினர்களை வரவேற்கும் இடமாக உள்ளது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. நூலகம் ஜவுளிக்காட்சியகம் கலைப்பொருட்கள் மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் உடைகள் ஆயுதங்கள் நிறைந்து காணப்படுகிறது.

கனமான வாசல் கதவுகள் கொண்டது. இந்த கதவுகள் பிரம்மாண்டமான பித்தளை கதவுகளால் செய்யப்பட்டது.

ஸ்ரீ கோவிந்த தேவ் கோவில்

அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலாகும். இங்கு கிருஷ்ணன் தன் துணைவியருடன் காணப்படுகிறார். இங்குள்ள சிலைகள் பிருந்தாவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. தினமும் ஆரத்தி பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

ஜெய்ப்பூர் கானா

அரண்மனையின் முக்கிய பகுதி ஆகும். அரசு குடும்பத்தினர் தேர் மற்றும் கோச் வண்டிகள் நிறைந்து காணப்படுகிறது. அரசர் ரதம் கண்ணை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. இவை அனைத்தும் காட்சி பொருளாக இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளது.

மகாராணி அரண்மனை

இந்த அரண்மனை மன்னர்கள் காலத்து ராணிகளுக்காக கட்டப்பட்டது. அழகிய ஓவியங்கள் கண்ணைப் பறிக்கும் விதத்தில் வரையப்பட்டுள்ளது. தங்கத்தில் சேர்க்கப்பட்ட கவசம் அணிந்த குதிரை உள்ளது. தற்போது ஆயுதக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
துருக்கியின் வரலாற்றுப் பொக்கிஷம்: ஒரு பயண வழிகாட்டி!
Jaipur City Palace

பத்ரா நிவாஸ்

பளிங்கு தூண்களும் பளிங்கு தளங்களும் கண்ணை கவரும் விதத்தில் உள்ளது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இது திவானுக்கு பாத்தியப்பட்ட அரண்மனை ஆகும். பிரபுக்கள் அதிகம் வாசித்து வந்தனர் அரண்மனை முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தால் காணப்படுகிறது.

சபா நிவாஸ்

மண்டபம் முழுவதும் பளிங்கு தரைகள் பளிங்கு தூண்கள் நிறைந்து காணப்படுகிறது. கண்ணாடிகளால் ஆன மேற்கூரை உள்ளது. கண்ணாடியால் ஆன பெரிய தேர் சக்கரம் கண்களை கவரும் விதத்தில் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் சுற்றி பார்க்க வேண்டிய அருமையான பகுதிகள் ஏராளமாக இங்கு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com