
ரயில் பயணம் இனிமையாக அமைவதற்கு மிக முக்கிய காரணம் ரயிலில் உள்ள கழிப்பறை வசதி. ஆனால் ரயில் சேவையை பிரிட்டிஷ் அரசாங்கம் தொடங்கிய காலத்தில் கழிப்பறை வசதிகள் இல்லை.
இந்திய ரயில்வேயின் 170 ஆண்டுகால வரலாற்றில், ஒரு சாமானியரின் கடிதத்தால் ரயிலில் கழிப்பறை வசதி வந்தது குறித்து இப்பதியில் தெரிந்து கொள்வோம்.
1909 ஆம் ஆண்டு, ஓகீல் சந்திரசென் என்ற பயணி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் அவசரமாக கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதனால் சாஹிப்ஜங் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் அவர் குளியலறைக்குச் சென்றார். மெல்ல ரயில் நகரத் தொடங்கியதும், கையில் தண்ணீர் வைத்திருந்த சந்திரசென் ஆடையை கையில் பிடித்துக்கொண்டு ரயிலைப் பிடிக்க ஓடினார்.
இதைக் கண்ட பயணிகள் அனைவரும் அவரைப் பார்த்து சிரித்தனர். அந்தப் பயணி இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு ரயில்வே அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
"ரயிலில் கழிப்பறை வசதி இல்லாததால், மிகவும் சிரமமாக உள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ரயில்களில் கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்" என்று சந்திரசென் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய ரயில்வே அதிகாரிகள் இந்த விஷயத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அவர்கள் ரயில்களில் கழிப்பறைகளை நிறுவ ஒப்புக்கொண்டனர். அப்போதிருந்து, ரயில்களில் கழிப்பறை வசதிகளை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவுசெய்து, இன்று வரை சிறப்பான சேவையை செய்து வருகிறது.
ஒரு சாதாரண மனிதர் எழுதிய கடிதம் இந்திய ரயில்வேயின் முகத்தையே மாற்றியது. கழிப்பறை வசதி ஏற்படுத்த காரணமாய் இருந்த அந்தப் பயணியின் கடிதம் இன்று வரை டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஒரு கடிதமும், ஒரு நபரின் சிந்தனையும் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ரயில்வே கழிப்பறை மிகச்சிறந்த சான்றாகும்.