
உலகில் 195 க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டுள்ளது அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்கு...
சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகளை தனது அரணாகக் கொண்டிருக்கும் நாடு லிச்டென்ஸ்டெய்ன். ஐரோப்பியாவின் மிகப் பணக்கார நாடான இது. மிகச் சிறிய நாடு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு என்று தனி விமான நிலையம் கிடையாது, சொந்தமாக பணமோ நாணயமோ வெளியிட்டது இல்லை. அவ்வளவு ஏன், உள்ளூர் மொழி என்று எதையும் அறிவித்ததில்லை. ஆனால், உலகிலேயே லிச்டென்ஸ்டெய்ன் நாடுதான், மிகவும் பணக்கார நாடாகவும் பாதுகாப்பான நாடாகவும் அறியப்படுகிறது.
3 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு நேபாளம். இங்கு முழுவதும் ஒரே ஒரு பயணிகள் ரயில் மட்டுமே இயங்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம். உண்மைதான். இந்த ரயில் மிக மெதுவாக செல்லுமாம். சுமார் 38 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகும் என்று கூறப்படுகிறது.
தலைநகரம் இல்லாத ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த நாட்டின் பெயர் நவ்ரு (Nauru). இது மைக்ரோனேஷியா தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய மற்றும் பெரிய தீவுகளின் குழுவால் ஆன ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இந்த நாடு 21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தலைநகரம் இல்லாத உலகின் ஒரே குடியரசு நாடு இதுவாகும். இங்கு பழங்குடியினர் பாரம்பரியமாக ஆட்சி செய்கின்றனர்.
லக்சம்பர்க் ஐரோப்பாவில் மிகவும் செல்வாக்கு பெற்ற நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது, இங்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வது முற்றிலும் இலவசம். இது அந்த நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல அங்கு சுற்றுலா வரும் அனைத்து மக்களுக்கும் தான்., அனைத்து வகையான பொதுப் போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் உலகிலேயே முதல் நாடு இதுதான். இதில் பேருந்து, ரயில் மற்றும் டிராம் ஆகியவை அடங்கும்.
நார்வேதான் இந்த பூமியில் கடைசி நாடாகும். பூமி தனது அச்சில் சுழலும் வட துருவத்திற்கு அருகில் இந்த நாடு அமைந்துள்ளது. அழகான நாடான இங்கே இரவே இல்லை என்பது பலருக்கும் தெரியாது. வடக்கு நார்வேயில் உள்ள ஹேவர்ஃபெஸ்ட் நகரில், சூரியன் 40 நிமிடங்கள் மட்டுமே மறைகிறது. எனவே, இது நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு 40 நிமிடங்கள் மட்டுமே இருட்டாக இருக்கும், மீதமுள்ள 23 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்த நகரம் ஒளியால் நிறைந்துள்ளது.
உயரமான மலைகளால் சூழப்பட்ட ஒரு ஆப்பிரிக்க நாடுதான் லெசாதோ. இந்த நாடு கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் உள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 22 லட்சம் பேர். லேசாதோ முழுக்க பசோதா என்னும் ஆப்பிரிக்க சமூகத்தினர் 99.7% உள்ளனர். உலகில் ஒரு நாடு முழுக்க ஒரே ஜாதியினர் இருப்பது இங்கு மட்டும்தான். இந்த மக்கள் பண்டு எனப்படும் ஆப்பிரிக்க மொழியை பேசுகின்றனர். தலையில் மொகார்ட்லோ என்ற தொப்பியை அணிகிறார்கள். இந்தத் தொப்பிதான் அவர்களின் தேசிய பாரம்பரியத்தின் சின்னம். அதனால்தான் அவர்களின் தேசியக் கொடியிலும் இந்தத் தொப்பியின் சின்னம் உள்ளது.
நதிகளின் நிலம் என்று அழைக்கப்படும் வங்கதேசத்தில் பத்மா மற்றும் ஜமுனா போன்ற 700-க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன.இந்த அனைத்து நதிகளிலும் வெயில் காலமானாலும், மழைக்காலம் ஆனாலும் எப்போதும் வற்றாமல் தண்ணீர் பாய்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். வங்கதேசத்தில் மிக முக்கியமான நதியான மேக்னா, இதன் பரந்த நீர்ப்பரப்பு இது உப்புநீர் மற்றும் இனிப்புநீர் கலந்த சிறப்பு சூழலியலை வழங்குகிறது.
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அன்டோரா . இங்கு குற்றச்சம்பவங்கள் நடப்பதே கிடையாது. இந்த நாட்டில் இதுவரை குற்றம், மோசடி, வன்முறை என எதுவுமே பதிவானது கிடையாது. பிக்பாக்கெட், திருட்டு, பணப்பையை பறித்தல் போன்ற சிறிய சிறிய குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. உலகில் ராணுவமே இல்லாத 21 நாடுகளில் அண்டோராவும் ஒன்று.
உலகின் ஒரே யூத நாடான இஸ்ரேல் நாட்டில் அனைத்து குடிமக்களும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். இந்நாட்டு பெண்கள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆண்களுடன் தோளோடு தோள் நிற்கிறார்கள் இஸ்ரேலிய பெண்கள்.
கொசுவே இல்லாத நாடாக ஐஸ்லாந்து இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் விஞ்ஞானிகளும் திணறி வருகின்றனர். இருப்பினும் ஐஸ்லாந்தில் உள்ள குறிப்பிட்ட காலநிலை கொசுக்களை வளரவிடாமல் செய்வதாக கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள மண் மற்றும் தண்ணீரில் உள்ள தாதுக்கள் கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதாக தெரிவித்துள்ளனர்.