டிசம்பர் மாதம் வெளிநாடு செல்ல திட்டமா? இந்த 7 இடங்களை நீங்கள் பார்க்கலாம்!

Christmas and New Year holidays
payanam articles
Published on

ருட முடிவில், அதாவது டிசம்பர் மாதம் வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் வெளிநாடு பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்காக, நம் நாட்டிற்கு வெளியே உள்ள 7 அண்டை நாடுகளைப் பற்றின விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

தாய்லாண்ட்: இந்த குறிப்பிட்ட சீசனில் தாய்லாந்தின் வானிலை இதமான சூட்டிலும், தெருக்கடைகள் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டுமிருக்கும். புகெட் (Phuket) க்ரபி (Krabi) போன்ற பீச்கள் மற்றும் கோவில்கள் விழாக்கோலம் பூண்டிருக்கும். தாய்லாண்ட் நாட்டிற்கு செல்ல, அங்கு சென்று இறங்கிய பின் விசா பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு.

மலேசியா: மலேசியாவின் இபோ (Ipoh) என்ற பழமை வாய்ந்த இடத்தில் உள்ள கோவில்கள், மலாக்காவின் காலனித்துவ கட்டிடக் கலை மற்றும் லங்காவி (Langkawi) யில் உள்ள பீச்கள் மற்றும் மழைக்காடுகள் டிசம்பர் மாதத்தில் சென்று களித்துவர ஏற்ற இடங்கள்.

சவுத் ஆப்ரிக்கா: சவுத் ஆப்ரிக்காவில் டிசம்பர் மாதமே சம்மர் சீசனாகும். கடற்கரையோர குளிர்ச்சியை அனுபவிக்கவும், வெளிப்புற சாகசங்கள் புரியவும், க்ரூகெர் (Kruger) நேஷனல் பார்க்கில் சஃபாரி செல்லவும், கேப் டவுன் போன்ற நகரங்களில் நடைபெறும் விழாக்களை கண்டு ரசிக்கவும் சிறந்த வாய்ப்பு அமையும் சீசன்.

இதையும் படியுங்கள்:
பயணிகள் கவனத்திற்கு: நாகரிகமாகப் பயணம் செய்வது எப்படி?
Christmas and New Year holidays

தான்சானியா: மழை காலம் முடிந்து, பசுமை துளிர்விடும் சீசன். கூட்டம் அதிகம் இருக்காது. செரெங்கெட்டி (Serengeti), நொரொன்கோரோ (Ngorongoro) போன்ற வனங்களில் சஃபாரி செல்வதும்,சன்சிபர் (Zanzibar) பீச்களில் சன் பாத் எடுப்பதும்

புதுமையான அனுபவம் தரும்.

உகாண்டா: உகாண்டாவிலும் டிசம்பர் மாதமே வெயில் காலம். பிவிண்டி (Bwindi) யில் கொரில்லா ட்ரெக் செல்லவும், ஊடுருவ முடியாத கிபாலே (Kibale) காடுகளில் சிம்பன்சிகளை பின்தொடர்ந்து சென்று கண்காணிக்கவும் வாய்ப்புண்டாகும்.

ஃபிஜி: ஃபிஜி தீவுகளில் சூரிய ஒளியுடன் கடற்கரைகள் வெப்பமண்டலம் சார்ந்ததாக இருக்கும். தண்ணீரில் குதித்து மூழ்குதல், கலாச்சார பாரம்பரியம் மிக்க கிராமங்களுக்கு சென்று அவர்களின் பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொள்ளுதல் போன்ற வழிகளில் நேரத்தை செலவிடலாம். இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற இடம்.

சவுத் கொரியா: சியோலில் டிசம்பரில் குளிர் உறை நிலைக்குக் கீழே சென்றுவிடும். மியோங்டோங் (Myeongdong) போன்ற மாவட்டங்களின் அரண்மனைகள் மீது பனி படர்ந்தும், வின்டர் மார்க்கெட்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், கலை நிகழ்ச்சிகளால் களை கட்டியும் காணப்படும். சுற்றுலாப் பயணிகளுக்கு சுகானுபவம் தரும்.

இதையும் படியுங்கள்:
அரக்கு பள்ளத்தாக்கு: இயற்கை, கலாச்சாரம், மற்றும் சாகசம் நிறைந்த பயணம்!
Christmas and New Year holidays

மேற்கூறிய நாடுகளில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்து சென்றுவர, சிறந்ததொரு அனுபவம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com