
இதோ விடுமுறை தினங்கள் ஆரம்பம் ஆகிவிட்டது. இன்னும் நீங்கள் சுற்றுலா எங்கும் செல்லவில்லை என்றால் இப்பொழுது திட்டமிடுங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா சென்று வாருங்கள்.
சுற்றுலா ஒரு அருமையான எனர்ஜி கெய்னர்/ பூஸ்டர். பள்ளி செல்லும் பிள்ளைகள், கல்லூரி செல்லும் பிள்ளைகள், அலுவலகத்தில் வேலை செய்வோர், இல்லத்தரசிகள், தொழில் முனைவோர், என எல்லா வயதினரும் அவரவர்களின் தினசரி வாழ்க்கையில் வாழ்வியல் தேவைகளுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த தொடர் ஓட்டம் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு தீர்க்க முடியாது அலுப்பையும் அயர்ச்சியும் தந்துவிடுகிறது. அத்தகைய சூழலில் அவர்களின் மனது தினசரி இயல்பிலிருந்து ஒரு மாறுதலை தேடுகிறது. அங்கேதான் அனைவருக்கும் அவசியமாகிறது ஒரு சுற்றுலா.
அதிலும் சுற்றுலாவை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் செல்லும் பொழுது அது ஒரு உற்சாகத்தை தருகிறது. மனதிற்குள் விவரிக்கமுடியாத சந்தோஷத்தைத் தருகிறது.
சுற்றுலா பலவிதமான மனிதர்களையும்,,இடங்களையும் பார்க்க வைத்து, நம் மனதை இலகுவாக்கி, சுறுசுறுப்படைய வைத்து, அடுத்த சில மாதங்களுக்கு உற்சாகத்துடன் ஓடவைக்கிறது.
அதிலும் குறிப்பாக குடும்பத்தினருடன் போகும்போது விட்டுக் கொடுத்தல், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் இப்படி நிறைய விஷயங்கள் எளிதில் சாத்தியமாகும்.
பெரும்பாலும் எங்கள் கூட்டுக் குடும்பத்தில் நாங்கள் நான்கு வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்தினருடன் கண்டிப்பாக சுற்றுலா செல்வோம். மனதில் இருக்கும் விஷயங்களை ஷேர் பண்ணிக் கொள்ளுவோம்.
ஒருவரிடம் பிடித்த விஷயங்கள் பிடிக்காத விஷயங்கள் இவை அனைத்தையும் தெரிந்துகொள்ளுவோம். ஒவ்வொருவரின் தனித்திறமைகளை கண்டு கொள்வோம். பிள்ளைகளோடு பிள்ளைகளாக நாங்களும் அந்த வயதிற்கச் சென்றுவிடுவோம்.
நாங்கள் தங்கியிருக்கும் உணவகங்களில் எந்தெந்த சமையல் ரெசிபி புதுவிதமாக இருக்கிறது. அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்வோம். அந்த ஊரில் மிகவும் வித்தியாசமான பொருள் என்ன? அது உணவு பொருளாக இருந்தாலும் சரி! கலைப் பொருளாக இருந்தாலும் சரி! அதைப்பற்றி ஆர்வமாய் தெரிந்துகொள்வோம்.
இப்படி ஒரு நான்கைந்து குடும்பங்களாக செல்லும் பொழுது பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள வசதியாக இருக்கும். பெரியவர்கள் குடும்பக்கதை, சினிமாக் கதை அவர்களின் பள்ளி வாழ்க்கை இப்படி பலவற்றை பேசி ஜாலியாக பொழுதை கழிக்கலாம்.
பெரும்பாலும் இப்படி குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது முடிந்தவரை சின்ன சின்ன துரித உணவுகளை கையில் எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் குடும்பமாக செல்லும்போது செலவுகள் (பயணத்திற்கு ஆகும் செலவு) பாதியாக குறையும்.
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எப்பொழுதும் குடும்பத்துடன் தான் செல்ல வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழுவது நிச்சயம். ஆம் இதற்கும் நான் பதில் வைத்திருக்கிறேன். பாஸ்!
நான்கு வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் பயணம் செய்தால், இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தனியாகச் செல்லுங்கள். அப்படி செல்லும்பொழுது கணவன் மனைவிக்கு இடையே இருக்கிற அன்புகூடும்.
ஒருவருக்கொருவர் புரிந்து புரிந்துகொள்ளும் விதம் அதிகப்படும்.
பிடித்த விஷயங்களைப் பற்றிப் பேச, திருமணமானபோது இருந்த விஷயங்களை கிண்டல் செய்து கொண்டு பேச… "அப்பொழுது நீ அப்படிஇருந்தாய். இப்போ இப்படி ஆயிட்டாங்க உங்க அம்மான்னு அப்பாவும்...
அப்பா,' அப்பவெல்லாம் எவ்வளவு சினிமா பார்ப்பார் தெரியுமா? வாரத்திற்கு நான்கு நாட்கள் இரவுக்காட்சி சென்றுவிடுவோம்.
சென்னையில் நாங்கபோகாத சினிமா திரையரங்கமே கிடையாது. இப்ப என்னடான்னா...சினிமான்னாலே காததூரம் ஓடறார்ன்னு சொல்ல...பிள்ளைகள் அப்படியா என்று ஆச்சரியமாக கேட்பார்கள்.
இப்படி பிள்ளைகளுக்கு தெரியாத பலவிஷயங்களை எல்லாம் சொல்லும்போது நம்மை அறியாமல் நம் மனதிற்கு ஒரு உற்சாகம் வரும் சந்தேகமே இல்லை. இப்படி ஒருவருக்கு ஒருவர் சீண்டி கொண்டு நமக்கே நமக்கான உலகத்தில் மகிழ்வாகஇருக்க தனியே செல்லுதல் அவசியம்.
எப்படியோ...
சுற்றுலா பொழுதுபோக்கு மட்டுமல்ல
வாழ்க்கையை கற்றுக் கொள்ளவும்
தெளிவு பெறவும்....
நமக்கு வாய்க்கும் அருமையான பயணம் .
அதிக பயணம் செய்தவர்கள் அதிகமான அனுபவங்களுடன் உலா வருகிறார்கள்.
குணம்
பழக்கவழக்கங்கள்
வாழ்வியல் மதிப்பீடுகள்
சிந்தனைகள் என மற்றவர்களைவர்களை விட அவர்கள் எல்லாவிதங்களிலும் ஒருபடி மேலே உயர்த்துவதற்கு சுற்றுலாபயணங்கள் உதவும்.
வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள்ள போய்வருவோம் ஒரு உலா… சுற்றுலா!