
பிலிகிரி ரெங்கன் மலை என்பது ஏதோ ஆந்திராவில் இருப்பது போன்று நினைக்க வேண்டாம். இது ஒரு அருமையான டூரிஸ்ட் பிளேஸ்.
இந்த மலை கர்நாடகா அரசின் வனக்கட்டுப்பாட்டு துறையில் உள்ளது. மைசூரில் இருந்து இரண்டு மணிநேர பயணம் மற்றும் தாளவாடி பகுதியில் இருந்து 40 கிலோ மீட்டர் பயணம்.
ஈரோடு மலைத் தொடரை ஓட்டி அமைந்துள்ள அருமையான இயற்கையான சூழல் நிறைந்த ஒரு வனப்பிரதேசம் ஆகும்.
1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இந்த ஏரியா பாதுகாக்கப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு கர்நாடக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் உயர்ந்து வளர்ந்த பசுமையான மரங்கள் நீரோடைகள் பறவைகள் ரீங்காரம் வன விலங்குகளின் சேட்டைகள் என கண்ணுக்கு விருந்தளிக்கிறது.
ஏகப்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. எங்கு பார்த்தாலும் சந்தன மரங்களும் ரோஸ் வுட் மரங்களும் மற்றும் மூலிகை மரங்களும் ஏராளமாக உள்ளது. இங்கு பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. பறவை இனங்களில் இம்பீரியல் புறா சாம்பல் நிற லங்கூன் பறவைகள் குறைக்கும் மான் சாம்பார் இனங்கள் மற்றும் கருப்பு வெள்ளை மஞ்சள் நிறம் கொண்ட ஹார்பின் பெல் பறவை மலபார் டிராகன் வெள்ளைமரங்கொத்தி பறவை இப்படி என எண்ணற்ற பறவைகள் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் புதையல் பி ஆர் ஹில்ஸ் என அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் முதல் 1600 மீட்டர் உயரம் கொண்டது. பிலிகிரி என்றால் வெள்ளை நிறம் கொண்டது ரங்கன் என்பது விஷ்ணுவை குறிப்பதாகும்.
எனவே, இதற்கு பிலி கிரிஅரங்கன் மலை என பெயர் வந்தது.
டூரிஸ்டர்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய இயற்கையான சூழல் நிறைந்த வனப்பகுதி ஆகும்.
மிக உயர்ந்த சிகரத்தில் ரங்கநாதர் கோவில் பெரிய அளவில் அமைந்துள்ளது. அக்காலத்திலேயே கட்டிட கலைக்கு பெயர் போன கோவில் என சொல்லப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
வனம் விலங்குகள் என எடுத்துக்கொண்டால் காட்டு யானை புள்ளிமான் புலி சிறுத்தை காட்டு எருமை காட்டு நாய் பச்சை நிற அணில் பழுப்பு நிற அணில் இன்னும் ஏராளமான விலங்குகளை நம்மால் காண முடியும். இங்கே கோலேகா என்ற பழங்குடியினரும் சோளிகர் என்ற பழங்குடியினரும் பெருமளவில் வசித்து வருகிறார்கள்.
அக்காலத்தில் ரங்கநாதர் சோளிக இனத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து மனம் செய்து கொண்டார். அதனால் இங்குள்ள பழங்குடியினர் ரங்கநாதரை காவல் தெய்வமாக நினைத்து வழிபடுகின்றனர்.
இங்கு வரக்கூடிய டூரிஸ்ட்களும் ரங்கநாதரை தர்ஷிக்காமல் திரும்புவதில்லை. ரங்கநாதர் இரவு வேலைகளில் இந்த காட்டுப்பகுதிகளில் நடமாடுவதாகவும் அவரது கால் தடத்தை பார்த்ததாகவும் சோளிகா இன மக்கள் நம்புகிறார்கள்.
இங்கு வரும் டூரிஸ்டுகள் உணவு அருந்துவதற்கு ஏதுவாக ரங்கநாதர் கோயிலை ஒட்டி உணவகங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள தொட்ட நாரை என்ற பெரிய கொக்கு பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. இந்த மலைத்தொடரில் அக்டோபர் முதல் மார்ச் வரை பார்வையிட நல்ல மாதங்கள் ஆகும்.
ஜூன் முதல் செப்டம்பர் வரை மழை காலமாகும். கே குடி இருப்பு பகுதிகளில் லாட்ஜுகள் உள்ளன. கர்நாடக மாநிலம் எலந்தூரில் இருந்து 45 நிமிடத்தில் இங்கு செல்லலாம பெங்களூரில் இருந்து 5 மணி நேரம் ஆகும். மைசூரில் இருந்து இரண்டு மணி நேர பயணம் வளைந்து நெளிந்து செல்லும் ஏகப்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் வழியாக செல்வது அற்புதமாக இருக்கும். இங்குள்ள இயற்கை வளங்கள் பறவைகள் மிருகங்கள் இவைகளை நாம் பார்த்துக்கொண்டே செல்லலாம்.
அருகருகே சிறிய நீரோடைகள் நீர்வீழ்ச்சிகள் உள்ளது. அவற்றிடம் நாம் குளித்து, நீராடி மகிழலாம். டூரிஸ்ட் செல்ல நினைப்பவர்கள் இந்த இடத்திற்கு கண்டிப்பாக போய் பாக்கலாம்.