புதுக்கோட்டையில் இவ்வளவு ரகசிய இடங்கள் மறைந்திருக்கா... உடனே உங்கள் வீக்கெண்ட் ட்ரிப்பை பிளான் பண்ணுங்க!

pudukkottai-tourism-guide
pudukkottai-tourism-guide
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

நமது தமிழ்நாட்டில் அதிக அளவில் வரலாற்று பொக்கிஷங்களையும் அழகிய சிற்பங்களையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள ஒரு அற்புதமான மாவட்டம் இருக்கிறது என்றால் அது புதுக்கோட்டை தான். அங்கு வெறும் பழைய கட்டிடங்கள் மட்டுமே இருக்கிறது என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு. 

மலைக்கோட்டைகள் தொடங்கி மனதை அமைதியாக்கும் கடற்கரை வரை உங்களை பிரம்மிக்க வைக்கும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் அங்கு கொட்டி கிடக்கின்றன. இந்த வார விடுமுறையை வித்யாசமாக என்ஜாய் செய்ய நீங்கள் ஒரு நல்ல ஸ்பாட்டை தேடுகிறீர்கள் என்றால் இந்த ஊர் உங்களுக்கு சிறந்த தேர்வு. 

கட்டிடக்கலைகளின் சொர்க்கம்!

பழங்கால வரலாற்றை நேசிப்பவர்களுக்கு இந்த ஊர் ஒரு மிகச்சிறந்த ட்ரீட் கொடுக்கும். பல நூறு ஆண்டுகள் பழமையான ஓவியங்களை நேரில் காண நீங்கள் சித்தன்னவாசல் குகைகளுக்கு செல்லலாம். அப்படியே அங்கிருந்து கொஞ்சம் தூரம் பயணித்தால் மலையின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் திருமயம் கோட்டை உங்களை பிரம்மாண்டமாக வரவேற்கும். 

இதோடு முடிந்துவிடவில்லை, சோழர் காலத்து கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாக இன்றும் நிலைத்து நிற்கும் கொடும்பாளூர் மூவர் கோயில் மற்றும் நார்த்தாமலை ஆகிய இடங்கள் புகைப்பட பிரியர்களுக்கு பிடித்துப்போகும். கர்நாடக சங்கீதத்தின் வரலாற்றை தன்னுள் தாங்கி நிற்கும் குடுமியான்மலை சிற்பங்களை நேரில் பார்க்கும் போது நமது முன்னோர்களின் உழைப்பு எப்பேர்ப்பட்டது என உங்களுக்கு தோன்றும்.

ஆன்மீக தலங்கள்!

ஆன்மீக சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் இங்கு ஏராளமான இடங்கள் வரிசையாக உள்ளன. காட்டு மயில்கள் தோகை விரித்து ஆடும் இயற்கை எழில் கொஞ்சும் மலை மீது அமைந்துள்ள விராலிமலை முருகன் தரிசனம் உங்கள் மனதிற்கு ஒரு பெரிய பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். 

மேலும் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மிக அழகாக அமைந்திருக்கும் காட்டுபாவா தர்கா மற்றும் பழமை கொஞ்சும் ஆவூர் தேவாலயம் ஆகியவை கட்டிடக்கலையிலும் சரி ஆன்மீகத்திலும் சரி உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும்.

இதையும் படியுங்கள்:
மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்! கோபத்தை நொடியில் கட்டுப்படுத்த இதோ 9 டிப்ஸ்!
pudukkottai-tourism-guide

ரிலாக்ஸ் செய்ய ஒரு குட்டித் தீவு!

இவ்வளவு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய நினைத்தால் நேராக மணமேல்குடி பீச்சிற்கு உங்கள் வண்டியை விடுங்கள். நகரத்தின் பெரிய கூட்ட நெரிசல் இல்லாத இந்த அமைதியான கடற்கரையில் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு அமர்ந்து மாலை நேர சூரிய அஸ்தமனத்தை ஜாலியாக ரசிக்கலாம். கடல் அலைகளின் சத்தத்தை கேட்டுக்கொண்டே அந்த மணற்பரப்பில் நடப்பது உங்களின் ஒட்டுமொத்த களைப்பையும் நீக்கிவிடும்.

குடும்பத்தோடு ஒரு பட்ஜெட் ட்ரிப் போக வேண்டும் என நினைப்பவர்களுக்கு இதைவிட ஒரு சூப்பரான லொகேஷன் கிடைக்கவே கிடைக்காது. பயணிக்க தேவையான ஆன்லைன் டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளை டிராவல் ஆப்கள் மூலமாக இப்போதே புக் செய்து கொண்டால் உங்களின் அலைச்சல் பெருமளவு மிச்சமாகும். 

இதையும் படியுங்கள்:
காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
pudukkottai-tourism-guide

மறக்காமல் நல்ல கேமரா மற்றும் சௌகரியமான காலணிகளை பேக் செய்து கொள்ளுங்கள். இந்த விடுமுறையை புதுக்கோட்டையின் வரலாற்று சுவடுகளோடு கொண்டாடி மகிழுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com