

எழுதுற நான் சின்னப் பையன்தான். ஆனா, எங்க வீட்டுப் பெரியவங்களும், ரிட்டயர் ஆன அங்கிள், ஆன்ட்டிங்களுமா சேர்ந்து டூர் பிளான் பண்றத பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன். பல வருஷமா வேலை, குடும்பம், குழந்தைங்க படிப்பு, கடமைகள்னு ஓடிக்கிட்டே இருந்துட்டு, ரிட்டயர்மென்ட்க்கு அப்புறம்தான் அவங்களுக்குத் தங்களுக்கான நேரம் கிடைக்குது.
காசி, ராமேஸ்வரம், திருப்பதின்னு ஆன்மீகப் பயணமா இருக்கட்டும், இல்ல பிரெண்ட்ஸோடு சேர்ந்து ஊட்டி, கொடைக்கானல், கேரளானு போறதா இருக்கட்டும், ரிட்டயர்மென்ட் டூர்ங்கிறது வாழ்க்கையோட ரொம்ப அழகான கட்டம். ஆனா, இருபது வயசுல பேக் மாட்டிட்டு அவசர அவசரமா ஊர் சுத்துன மாதிரி, அறுபது வயசுக்கு மேல ஓட முடியாது; அதுக்கு கொஞ்சம் வித்தியாசமான, பொறுமையான பிளானிங் ரொம்பவே தேவை.
நிறைய பேர் செய்ற முதல் தப்பு, "நான்தான் செம சந்தோசமா இருக்கேனே, எவ்வளவு தூரம் வேணாலும் நடப்பேன்"னு நினைக்கிறதுதான். அதிகமா டிராவல் பண்றவங்களும், டாக்டர்ஸும் என்ன சொல்றாங்கன்னா, டூர்ல ரொம்ப டயர்ட் ஆகுறதுக்கு காரணமே, இடங்களைச் சுத்தி பார்க்குறதவிட, சரியான தூக்கம் இல்லாதது, தண்ணி கம்மியா குடிக்கிறது. அப்புறம் அவசர அவசரமா போட்ட பிளான், தேவையில்லாம வெயிட்டான லக்கேஜ் தூக்கிட்டு போறதுதான் காரணமாம்.
கிளம்புறதுக்கு முன்னாடி நம்ம உடம்பு எவ்வளவு தாங்கும், நம்மால எவ்வளவு தூரம் நடக்க முடியும், நமக்கு என்ன ஹெல்த் பிரச்னை இருக்கு, எவ்வளவு நேரம் தூங்கணும்ங்கிறதை நாமளே உண்மையா புரிஞ்சுக்கணும். அதனால, "பத்து இடத்தை ஒரே நாள்ல பார்க்கணும்"ங்கிறதைவிட, "பார்க்கிற ரெண்டு இடத்தையும் நிம்மதியா, சௌகரியமா, போதுமான ரெஸ்ட் எடுத்து ரசிக்கணும்"னு பிளான் போடுங்க.
அடுத்ததா, உடம்போட சேர்த்து மனசையும் கொஞ்சம் தயாரா வச்சுக்கணும். டூர் போகும்போது டிராஃபிக் ஜாம், திடீர் மழை, ட்ரெயின் அல்லது ஃபிளைட் தாமதம், சாப்பாடு மாறுறதுனு இப்படி எதிர்பாராத மாற்றங்கள்னு சின்னச் சின்னப் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாம, அந்த சூழல இயல்பா ஏத்துக்கிற மனப்பக்குவம் இருந்தாலே பாதி டூர் சூப்பரா இருக்கும்.
எல்லா இடத்தையும் ஒரு லிஸ்ட் போட்டு டிக் அடிக்கணும்னு ஓடாம, உள்ளூர் மக்களோட பேசுறது, அங்க இருக்குற கலாச்சாரத்த தெரிஞ்சுக்கிறது, இயற்கையை ரசிக்கிறது, இப்படி அந்த நிமிஷத்தை அனுபவிச்சு வாழறதுன்னு நிதானமா இருக்கப்பாருங்க.
முக்கியமா தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னன்னா:
நேரத்துக்குச் சாப்பிடாம இருக்குறது, தினமும் போடுற மாத்திரை மருந்துகளை மறக்குறது, உடம்புக்கு முடியலன்னா கூட, மத்தவங்களுக்காக அத மறைக்கிறது இதையெல்லாம் செய்யவே கூடாது.
சாதாரணமா வயசாயிடுச்சுன்னா உடம்புல தெம்பு குறையுறது சகஜம், அதனால அசதியில இருந்து மீண்டு வர கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். அதே மாதிரி, வீட்ல இருக்குற எல்லா துணியையும் பேக்ல அடைச்சு எடுத்துட்டுப் போய் தேவையில்லாம முதுகு வலியையும் கால் வலியையும் வரவழைச்சுக்காதீங்க.
இதுல ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, டூர் கிளம்புறதுக்கு முன்னாடி பிளான் போடும்போதே பெரியவங்களுக்குப் பாதி சந்தோஷம் வந்துடுமாம். அதோட, குரூப் டூர் போகும்போது ஒரே வயசுள்ள புது நண்பர்கள் கிடைச்சு தனிமையே தெரியாது. பெரிய பெரிய இடங்களை விட, எல்லாரும் சேர்ந்து மனம் விட்டுச் சிரிச்ச நிமிஷங்கள்தான் கடைசி வரைக்கும் மனசுல நிக்குமாம்.
இறுதியா, ரிட்டயர்மென்ட் பயணம்ங்கிறது எத்தனை ஊர் சுத்துனோம், சோஷியல் மீடியாவுல எத்தனை போட்டோ போட்டோம்ங்கிற கணக்கு கிடையாது. உடம்புக்கு எந்தச் சிரமமும் இல்லாம, மனசு நிறைஞ்சு, பயணம் முடிஞ்சு திரும்பி வந்த பிறகும் நினைச்சுப் பார்த்துச் சிரிக்கிற மாதிரியான அழகான கதைகளோட வீடு திரும்புறதுதான் உண்மையான வெற்றி!
அதோட, கிளம்புறதுக்கு முன்னாடி உங்க ஃபேமிலி டாக்டர்கிட்ட ஒரு சின்ன செக்கப் பண்ணிட்டு, தேவையான மருந்துகளையும் எமர்ஜென்சி போன் நம்பர்களையும் கையில வச்சுக்கிறது ரொம்ப நல்லது. இப்படிப் பார்த்துப் பார்த்து பிளான் போட்டா, ரிட்டயர்மென்ட் டூர் உங்க வாழ்க்கையோட மிகச்சிறந்த பரிசா நிச்சயமா மாறும்!.