மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் வேணுமா? டிக்கெட் புக் செய்யும்போது இந்த 5 ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் லோயர் பெர்த் பெற 5 எளிய வழிகள் | IRCTC விதிகள்
ரயில் முன்பதிவு - லோயர் பெர்த்
Lower Berth - லோயர் பெர்த்
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

நீண்ட தூரப் பயணங்களுக்கு பெரும்பாலும் ரயில் பயணத்தையே பலரும் விரும்புவர். சௌகரியமான பயணம், குறைந்த டிக்கெட் கட்டணம் மற்றும் நவீன வசதிகள் என ரயில் பயணம் பாதுகாப்பான பயணமாக இருக்கும்.

ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் நிலையில், லோயர் பெர்த் வசதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இதற்கு முன்பெல்லாம் வயது வித்தியாசமின்றி லோயர், மிடில் மற்றும் அப்பர் என எந்த பெர்த் வேண்டுமானாலும் கிடைக்கும். இதனால் மூத்த குடிமக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்தனர்.

மிடில் பெர்த்தோ அல்லது அப்பர் பெர்த்தோ கிடைத்து விட்டால், மூத்த குடிமக்களுக்கு அது சௌகரியமாக இருக்காது. இதனால் மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்தை மட்டுமே ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ரயில்வே துறையும் அதற்கான மாற்றங்களைச் செய்தது.

தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்தை ஒதுக்கவேண்டும் என்பது விதியாகும். இருப்பினும் பெர்த் கிடைக்க முன்பதிவின்போது கண்டிப்பாக செய்யவேண்டிய சில முக்கிய குறிப்புகளை இப்போது பார்ப்போம்.

ரயில் பயணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 45 வயதுக்க மேற்பட்ட பெண்களுக்கு, லோயர் பெர்த் ஒதுக்கீட்டு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

1. முன்பதிவின்போது சரியான விவரங்களை உள்ளிடுதல்:

* ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கண்டிப்பாக வயது விவரத்தை சரியாக குறிப்பிட வேண்டும்.

* Berth Preference என்ற ஆப்ஷனில் ‘Lower’ என்பதை கட்டாயமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. Reservation Choice நிபந்தனை:

* ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ‘Reservation Choice’ அல்லது ‘Other Preference’ பகுதியில், ‘Book only if lower berth is allocated’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். லோயர் பெர்த் காலியாக இருந்தால் மட்டுமே டிக்கெட் புக்கிங் ஆகும். இல்லையெனில் புக்கிங் தவிர்க்கப்பட்டு, டிக்கெட் கட்டணம் எடுக்கப்படாது.

3. தனியாக அல்லது இருவராக பயணிக்கும்போது:

* ஒரு பிஎன்ஆர் (PNR) எண்ணில் அதிகபட்சமாக 2 மூத்த குடிமக்களுக்கு மட்டுமே மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக ஒதுக்கீட்டின்படி பெர்த் கிடைக்கும்.

* இரண்டுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஒன்றாக இணைந்து டிக்கெட் புக்கிங் செய்தால், அதில் 2 பேருக்கு மட்டுமே லோயர் பெர்த் கிடைக்கும். இதனால் மற்ற மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுவர். ஆகையால் தனித்தனியாகவே அல்லது இருவராக இணைந்தோ டிக்கெட் புக் செய்தால் அனைவருக்கும் லோயர் பெர்த் கிடைக்கும்.

Lower Berth Changes - லோயர் பெர்த்
Indian Railway - Senior citizens - லோயர் பெர்த்
இதையும் படியுங்கள்:
இனி ரயில் டிக்கெட் பிரச்சனை உங்களுக்கு இல்லை..! டிக்கெட் முன்பதிவுக்கு ஒரு நொடி போதும்..!
ரயில் முன்பதிவு - லோயர் பெர்த்

4. டிக்கெட் கவுண்ட்டரில் முன்பதிவு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?

* ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் முன்பதிவு படிவத்தை நிரப்பும்போது, விருப்பத்தை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

* படிவத்தின் மேற்பகுதியில் ‘Senior Citizen Quota’ என்பதை குறித்துக் கொடுக்க வேண்டியது அவசியம்.

5. பயணத்தின் போது லோயர் பெர்த் பெற என்ன வழி:

முன்பதிவின்போது மூத்த குடிமக்கள் என்பதை போது குறிப்பிட மறந்தாலோ அல்லது திடீர் பயணத் திட்டமிடலுக்கு தட்கலில் டிக்கெட் புக் செய்யும்போதோ லோயர் பெர்த் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இப்படியான சூழலில் முன்பதிவின்போது லோயர் பெர்த் கிடைக்காமல் மிடில் அல்லது அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டால், ரயில் புறப்பட்ட பின் டிக்கெட் பரிசோதகரை அணுகலாம்.

ரயிலில் பயணிகள் வராமல் அந்த இடம் காலியாக இருந்தாலோ அல்லது லோயர் பெர்த் டிக்கெட் ரத்து செய்யப்பட்டிருந்தாலோ, ரயில்வே விதிகளின்படி டிக்கெட் பரிசோதகர் அந்த பெர்த்தை மூத்த குடிமக்களுக்கு மாற்றி ஒதுக்க அதிகாரம் உண்டு.

இதையும் படியுங்கள்:
இனி 2 மணி நேரத்தில் ஆந்திராவிற்கு பறக்கலாம்.! தமிழ்நாட்டிற்கு வரப்போகுது புல்லட் ரயில்..!
ரயில் முன்பதிவு - லோயர் பெர்த்
logo
Kalki Online
kalkionline.com