இலங்கை: வெறும் ஒரு தீவு அல்ல! உலகமே வியந்து பார்க்கும் ரகசியங்கள் இதோ!

Not just an island
Srilanka...
Published on

லங்கை ஒரு தீவு நாடு, இது தெற்காசியாவில் இந்திய துணைக்கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. உலகிலுள்ள 50 சிறந்த தீவுகளின் பட்டியலில் – மிக அழகான தீவாக இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலகளாவிய பயண தளமான ‘பிக் 7 ட்ராவல்’ (Big 7 Travel) 2025ஆம் ஆண்டுக்காக இதனைப் பட்டியலிட்டுள்ளது.

பிரெஞ்சு பாலினீசியாவில் உள்ள மூரியா, ஈக்வடோரில் உள்ள கலபகோஸ் தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் போன்ற பிரபலமான தீவுகளை விடவும், இந்தப் பட்டியலில் இலங்கை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கலாசார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகளின் வளமான கலவைக்காக இலங்கை இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, பிக் 7 டிராவல் தெரிவித்துள்ளது.

இலங்கையை அதன் தனித்துவமான வனவிலங்குகள், பண்டைய கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் உற்சாகம் நிறைந்த உள்ளூர் அனுபவங்களுக்காகவும் – இலங்கை பாராட்டப்பட்டுள்ளது.

இந்து, புத்தம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய 4 மதங்களுக்கும் ஒரே புனிதமான இடம் இருக்குமா? இலங்கையில் இருக்கிறது அதுதான் " ஸ்ரீ பாதா"என்ற சிவனொளி பாதமலை". என்ற இடம்.

1815 முதல் 133 வருடங்களாக பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. 1948 ம் ஆண்டு பிப்ரவரி 4 ம் தேதி சுதந்திரம் பெற்றது. மொத்த நாடே 65 கிமீ நீளம்தான். இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் வாழ்கின்றனர். அதில் அதிகம் சிங்களர் 74 %பேர் உள்ளனர், தமிழர்கள் 15%பேர்களும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் 11% பேர்கள் உள்ளனர்.

கடல் மட்டம் இறங்கும்போது இந்தியாவோடு இணைந்தும் ஏறும்போது தனியான நிலப் பகுதியாகவும் இருந்து வருகிறது. இலங்கை ஒரு பல்லுயிர் பெருக்க மையமாகும், சிறுத்தைகள் மற்றும் யானைகள் முதல் கடல் ஆமைகள் மற்றும் நீல திமிங்கலங்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் வரை  இங்கு உள்ளன. இந்தத் தீவு புலம்பெயர்ந்த பறவைகள் உட்பட 400க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு தாயகமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
என்னது இத்தனை வகையான பயணங்களா? அடடா! நீங்க இதுவரை அனுபவிக்காத பயணம் எது?
Not just an island

2600 வருடங்களுக்கு முன்னர் கலிங்க நாட்டிலிருந்து (ஒடிசா) ஓடி வந்த இளவரசன் 700 பேரோடு இலங்கை வந்து இப்பகுதியை ஆண்டதாக சிங்கள காவியம் 'மகாவம்சம்' கூறுகிறது. 'சிங்களம்' என்றால் சிங்கத்தின் ரத்தம் என்று பொருள். சிங்களர் என்றால் "சிங்கத்தின் மக்கள்" என்று பொருள். அந்நாட்டின் முதல் குடிமகனை சிங்கம் பெற்றதாக நம்புகின்றனர். எனவேதான் அந்த நாட்டின் கொடிகள், அந்த நாட்டின் கோயில்கள் மற்றும் கோபுரங்களில் சிங்க உருவமே அதிகம் உள்ளது. ஆனால் அந்நாட்டில் சிங்கம் கிடையாது. இந்நாட்டின் தேசிய விலங்கு சிங்கம், தேசிய பறவையாக ஆந்தை உள்ளது.

1505 ம் ஆண்டு போர்ச்சுகீசியர்கள்தான் இலங்கைக்கு "சிலோ" என்று பெயர் வைத்தனர். அது மருவி ஆங்கிலேயர்கள் காலத்தில் "சிலோன்", என்றானது. 1972 ம் ஆண்டு அதிகாரப் பூர்வமாக. " ஸ்ரீ லங்கா "என்று  பெயர் மாற்றப்பட்டது.

இலங்கையில் ஆரம்ப பள்ளி முதல் பல்கலைக்கழக படிப்பு வரை இலவசம்தான். உலகில் முதல் முறையாக ஒரு பெண்ணை பிரதமராக பதவியில் அமர்த்தி அழகு பார்த்த நாடு இலங்கைதான். அதுவும் தொடர்ந்து 28 ஆண்டுகள்.

இலங்கையில் அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் காலை 8 மணிக்கு தொடங்கிவிடும். ஒவ்வோரு அலுவலகத்திலும் புத்தர் சிலை அல்லது புத்தர் படம் இருக்கும். காலை 8.30 மணிக்கு அங்கு கூடி சிங்கள மொழியில் இசைக்கப்படும் தேசிய கீதத்திற்கு  வணக்கம் தெரிவிக்கின்றனர். தேசிய கீதத்தை சிங்களர்கள் சிங்கள மொழியிலும், தமிழர்கள் தமிழிலும் பாடுகிறார்கள். ராகம்,மெட்டு, இசை எல்லாம் ஒன்று தான்.

இலங்கையில் புத்தருக்கும், புத்த பிக்குகளுக்கும் மிகுந்த மரியாதை தருகிறார்கள். இங்கு புத்தரை முன்னிலை படுத்தி யாரும் ஃபோட்டோ எடுக்கக் கூடாது.இங்கே பஸ்ஸில் முதல் இரண்டு இருக்கைகள் மதபோதகர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் புத்தப்பிட்சுக்கள் அந்நாட்டு தேசிய கீதத்திற்கு பாடும்போது மற்றும் தேசிய கொடி பறக்கும் போதும் எழுந்து நின்று மரியாதை செலுத்த தேவையில்லை. ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள் வரும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் தொடர்ந்து அமர்ந்து இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ரகசியங்கள் நிறைந்த உஜ்ஜைனி! இந்த இடங்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
Not just an island

இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெற்று  ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே ஓட்டு எண்ணும் பணி தொடங்கி விடும்.இங்கு ஒரு எம்பி இறந்துவிட்டால் இடைத் தேர்தல் எல்லாம் நடக்காது.மாறாக இறந்தவர் எந்த கட்சியைச் சேர்ந்தவரோ அந்த கட்சி வேறு ஒருவரை எம்பியாக நியமிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com