சுவிட்சர்லாந்தின் 'Wildest Valley'! பாறைகளை அகற்றாமல் பக்கத்திலேயே வீடு கட்டும் மக்கள்! ஏன்?

Foroglio village, Switzerland
Foroglio villages, switzerland
Published on

சுவிட்சர்லாந்து (switzerland) என்றாலே பனி படர்ந்த மலைகளும், அழகிய ஏரிகளும் தான் நினைவுக்கு வரும். ஆனால், கூட்டம் கூட்டமாக வரும் சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரமின்றி, அமைதியாகவும், இயற்கையின் அசல் அழகோடும் ஒரு ரகசிய சொர்க்கம் ஒளிந்திருக்கிறது. அதுதான் டிசினோ (Ticino) மண்டலத்தின் ஃபாவோனா பள்ளத்தாக்கில் (Bavona Valley) உள்ள ஃபோரோலியோ (Foroglio) கிராமம்.

ஃபோரோலியோ (Foroglio) கிராமத்தின் முக்கிய அம்சங்கள்:

108 மீட்டர் நீர்வீழ்ச்சி: கண்கவர் ஃபோரோலியோ நீர்வீழ்ச்சி, கிராமத்தின் பக்கத்திலேயே 108 மீட்டர் உயரத்திலிருந்து பாறையில் பாய்ந்து வந்து ரம்மியமான காட்சியை அளிக்கிறது.

கல் வீடுகள்: இங்கே உள்ள வீடுகள் அனைத்தும் பழங்கால முறைப்படி கற்களால் கட்டப்பட்டுள்ளன. இது கிராமத்திற்கு ஒரு தனித்துவமான, காலத்தால் அழியாத அழகைக் கொடுக்கிறது.

ஃபாவோனா பள்ளத்தாக்கு: இந்த பள்ளத்தாக்கு சுவிஸ் ஆல்ப்சின் (Swiss Alps) லெப்போன்டைன் ஆல்ப்சின் (Lepontine Alps) ஒரு பகுதியாகும்.

இதுவே டிசினோ பள்ளத்தாக்குகளில் 'மிகவும் காட்டுத்தனமான' (Wildest) பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

ஃபோரோலியோவின் அலாதியான அழகு:

ஃபோரோலியோ, சுவிட்சர்லாந்தின் ஆரவாரமான சூரிச் அல்லது ஜெனீவா போன்ற நகரங்களில் இருந்து விலகி, அமைதியின் சிகரமாகத் திகழ்கிறது. இந்த சிறிய கிராமம் பார்ப்பதற்கு வட்ட வடிவத்தில், ஒரு குன்றின் மீது கட்டப்பட்டிருப்பது போல் காட்சியளிக்கிறது. இங்குள்ள பல வீடுகள் விடுமுறைக் காலங்களில் வந்து தங்குவதற்காக சுவிஸ் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கிராமத்தின் மிக முக்கிய ஈர்ப்பே, அங்கு காணப்படும் பெரும் பாறைகளும், பச்சை பசேல் என்ற பள்ளத்தாக்கும் தான். இங்கு நீங்கள் நேரத்தை நிதானமாகக் கழித்து, இயற்கையின் அமைதியான ஒலிகளைக் கேட்டு, புத்துணர்ச்சி பெறலாம்.

இதையும் படியுங்கள்:
ஹால்ஸ்டாட்: ஆஸ்திரியாவின் கனவுக் கிராமம்... இரவில் மாயாஜால உலகம்!
Foroglio village, Switzerland

ஃபாவோனா பள்ளத்தாக்கு:

ஃபாவோனா பள்ளத்தாக்கு ஒரு 'பாறைகள் நிறைந்த, கிண்ண வடிவிலான பள்ளத்தாக்கு' ஆகும். இங்கு கிரானைட் பாறைகளால் ஆன சுவர்கள் இருபுறமும் உள்ளன. ஆச்சரியம் என்னவென்றால், மலையில் இருந்து massive பாறைகள் உருண்டு விழும்போது, உள்ளூர்வாசிகள் அவற்றை அகற்றாமல், அந்தப் பாறைகளுக்குப் பக்கத்திலேயே புதிய வீடுகளைக் கட்டிக் கொள்வார்கள். இந்த பாறைகள் 'ஸ்ப்ளூயி (Splui)' என்று அழைக்கப்படுகின்றன. இதுவே இங்குள்ள வீடுகள் அனைத்தும் கல்லால் கட்டப்பட்டதற்கான முக்கிய காரணம்.

இதையும் படியுங்கள்:
உலகின் 2வது பெரிய கொதிக்கும் ஏரி! சாகசப் பிரியர்களின் சொர்க்கம்!
Foroglio village, Switzerland

ஃபோரோலியோ (Foroglio) கிராமத்தை எப்படி அடைவது?

ஃபோரோலியோ சற்று ஒதுக்குப்புறமாக இருப்பதால், இது சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக இருப்பதில்லை.

லுகார்னோ (Lugano) அல்லது அஸ்கோனா (Ascona) போன்ற நகரங்களில் இருந்து  ஃபோரோலியோவுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்வது மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். பள்ளத்தாக்கு வழியாக பயணிக்கும்போது மற்ற அழகான கிராமங்களையும் நீங்கள் காணலாம்.

சுவிட்சர்லாந்தின் (switzerland) பரபரப்பான சுற்றுலாத் தலங்களில் இருந்து விலகி, ஒரு நிம்மதியான, அற்புதமான, இயற்கையின் அசல் அழகைக் கொண்ட இடத்தைத் தேடுபவர்களுக்கு, இந்த ஃபோரோலியோ கிராமம் ஒரு கட்டாயம் பார்க்க வேண்டிய ரகசிய பொக்கிஷம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com