வீக்கெண்ட் போர் அடிக்குதா? சென்னையிலிருந்து வெறும் 2 மணி நேர பயணத்தில் ஒரு ரகசிய அருவி!

tada-falls-one-day-trip
tada-falls-one-day-trip
Published on

சென்னையில் வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே ஏசி ரூமை விட்டு வெளியே வர யாருக்கும் மனசு வராது. வாரம் முழுவதும் வேலை, டிராபிக், கம்ப்யூட்டர் என்று இயந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு வீக்கெண்ட் வந்தால் எங்காவது அமைதியாக இயற்கை எழில் சூழ்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். 

ஊட்டி, கொடைக்கானல் செல்ல நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ஆனால் சென்னையிலிருந்து மிக அருகில், வெறும் 2 மணி நேர பயணத்தில் ஒரு அட்டகாசமான அருவி ஒளிந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், ஆந்திர எல்லையில் அமைந்துள்ள தடா அருவி எனப்படும் உப்பலமடுகு நீர்வீழ்ச்சியைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

சென்னையிலிருந்து தடா நோக்கிய பயணம்!

சென்னையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த அழகிய தடா நீர்வீழ்ச்சி. காலையில் சீக்கிரமாக ஒரு பைக்கோ அல்லது காரோ எடுத்துக்கொண்டு ரெட்ஹில்ஸ் வழியாக சென்னை கொல்கத்தா ஹைவேயில் பயணிப்பது ஒரு சூப்பரான அனுபவத்தைக் கொடுக்கும். 

வழியில் உள்ள தாபாக்களில் சூடாக ஒரு டீ குடித்துவிட்டு, மரங்கள் அடர்ந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் வண்டியை ஓட்டுவது மனதுக்கு பெரிய ரிலாக்ஸாக இருக்கும். தடா செக்போஸ்டை தாண்டியவுடன் இடதுபுறம் திரும்பி வரதப்பாளையம் என்ற ஊரை நோக்கிச் சென்றால் மலையடிவாரத்தை எளிதாக அடைந்துவிடலாம்.

த்ரில்லான ட்ரெக்கிங் அனுபவம்!

வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அங்கிருந்து காட்டுக்குள் நடக்கத் தொடங்க வேண்டும். ஆரம்பத்தில் பாதை சமமாகத் தான் இருக்கும். ஆனால் உள்ளே செல்லச் செல்ல பாறைகள் நிறைந்த கரடுமுரடான பாதையில் ட்ரெக்கிங் செய்வது இளைஞர்களுக்கு ஒரு மாஸான அனுபவமாக இருக்கும். வழியில் சின்னச் சின்ன நீரோடைகளைத் தாண்டி, அடர்ந்த மரங்களுக்கு நடுவே நடக்கும்போது சிட்டி லைஃப் டென்ஷன் மொத்தமும் காணாமல் போய்விடும். 

சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பெரிய பாறைகளில் ஏறி இறங்கி நடந்தால், கண்ணாடியைப் போலத் தெளிவான நீருடன் கொட்டும் தடா அருவியைக் கண்குளிரக் காணலாம். அந்த குளிர்ந்த நீரில் ஒரு ஜாலியான குளியல் போட்டால் மலை ஏறிய களைப்பு உடனே பறந்துபோகும்.

இதையும் படியுங்கள்:
இந்த வீக்கெண்ட் பிளான் என்ன? இதோ பசுமையான உலக்கை அருவிக்கு ஒரு ட்ரிப்!
tada-falls-one-day-trip

ட்ரிப் செல்லும் முன் கவனிக்க வேண்டியவை!

இந்த அருவிக்குச் செல்லும்போது கட்டாயம் ட்ரெக்கிங் செய்வதற்கு ஏற்ற நல்ல கிரிப் உள்ள ஷூக்களை அணிந்து செல்வது மிக மிக முக்கியம். காட்டுக்குள் எந்த ஒரு கடைகளும் இருக்காது என்பதால், தேவையான அளவு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஸ்நாக்ஸ் போன்ற உணவுகளை வீட்டிலிருந்தே பேக் செய்து எடுத்துச் செல்வது புத்திசாலித்தனம். 

மேலும், அங்கு குரங்குகள் தொல்லை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பதால் உங்களின் உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களைக் காட்டுக்குள் வீசாமல் திரும்பக் கொண்டு வருவது இயற்கைக்கு நாம் செய்யும் மாபெரும் உதவி.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்குள் பூரான் புகுந்து பயமுறுத்துதா.. இந்த எளிய வழிமுறைகளை செஞ்சா இனிமே எட்டி கூட பார்க்காது!
tada-falls-one-day-trip

கான்கிரீட் வீட்டுக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் சென்னை வாசிகளுக்கு இந்த தடா அருவி நிஜமாகவே ஒரு அற்புதமான வரப்பிரசாதம் தான். ஒரு நாள் விடுமுறையில், குறைவான பட்ஜெட்டில் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ ஒரு சாகசப் பயணம் செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த சாய்ஸ். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com