
கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 9கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து ஏறத்தாழ 15கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இடம்தான் மணக்குடி பாலம்.
சிறப்புகள்:
அலைக்கடல் கொஞ்சும் கன்னியாகுமரியில் மேற்குத்திசை நோக்கி கடல் அழகுகளைப் பார்த்தவாறு சென்றால் நம் மனதை கொள்ளை கொள்ளும் மணக்குடி அமைந்துள்ளது.
இந்தப் பாலம் மணக்குடி கிராமத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்தப் பாலம் கட்டப்படுவதற்கு இது ஒரு காரணம் என்றும் சொல்லலாம்.
மணக்குடி பாலம் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இந்த பாலத்தின் மீது நின்றுக் கொண்டு சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம்.
இப்பாலத்தில் தமிழ் மற்றும் மலையாளப் சினிமாப் படங்களை படம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணக்குடி பாலத்தின் கரையில் நின்றுக் கொண்டு கடலில் இருந்து எழும் அலைகளையும், அந்த இடத்தில் சூழ்ந்திருக்கும் அலையாத்தி மரங்களையும், மேலும் மாதா கோவில்கள், அங்கு அமைந்திருக்கும் புல் இனங்கள் நம்மை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் பகுதியில் குடும்பத்துடன் உற்சாகமாக சுற்றிப் பார்ப்பதற்கு படகு சவாரியும் அமைக்கப் பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு சென்றால் அலையாத்தி மரங்களையும், உப்பளத்தின் காட்சிகளையும், மீன் கூட்டங்கள், நாரைக் கூட்டங்களின் காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.
மணக்குடி கடற்கரை பகுதியில் குழந்தைகள் உற்சாகமாக மனம் மகிழ மணல் வீடுகளை கட்டி விளையாடலாம். மேலும் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழலாம்.
இவற்றை எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு கடைசியாக கலையழகு புனித ஆண்ட்ரு ஆலயத்தைச் சென்றுப் பார்க்கலாம்.
எப்படிச் செல்வது?
வடச்சேரி மற்றும் அண்ணாப் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட பேருந்துகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்துக் காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்கவேண்டிய இடங்கள்:
மணக்குடி கடற்கரை.
புனித ஆண்ட்ரு ஆலயம்.
படகு சாவரி.
அலையாத்திக் காடுகள்.
இயற்கை எழில்கொஞ்சும் பெல்லிக்கல்.
ஊட்டியிலிருந்து ஏறத்தாழ 14கி.மீ தொலைவிலும், கோவையிலிருந்து ஏறத்தாழ 97கி.மீ தொலைவிலும் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக பெலிக்கல் திகழ்கிறது.
சிறப்புகள்:
பெலிக்கல் இயற்கையின் தூய்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
அமைதியான சூழலில் இருக்கும் இந்த இடத்திற்கு செல்வதற்கு ஊட்டியின் பல கொண்டை ஊசிகளை கடந்துதான் செல்லவேண்டும்.
இங்கு அமைந்துள்ள மோயர் ஆறு, முதுமலை மற்றும் பந்திப்பூர் காடு போன்ற இடங்களில் உள்ள இயற்கை அழகுகள் நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும்.
பெலிக்கல்லில் காட்டுப்பகுதியில் உள்ள புலிகள், காட்டு எருமைகள், பறவைகள் என அனைத்தையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
இங்குள்ள பெலிக்கல் ஏரி தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது. அங்கு யானைக் கூட்டங்கள் நீர் அருந்தும் காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்களும் இப்பகுதியில் உள்ளன.
அமைதியும், பசுமையும், குளிரும் நிறைந்த சுற்றுலாத் தலமாக பெலிக்கல் உள்ளது.
எப்படி செல்வது?
ஊட்டியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
ஊட்டியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள்:
எமரால்ட் ஏரி.
கேத்தரின் நீர்வீழ்ச்சி.
ரூக் கோட்டை.
புலிமலை.
பைசன் பள்ளத்தாக்கு.